Showing posts with label கன்னி ராசி. Show all posts
Showing posts with label கன்னி ராசி. Show all posts

Wednesday, December 21, 2011

பாதச்சனி/வாக்குச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய காலபைரவர் வழிபாடு




21.12.11 முதல் டிசம்பர் 2014 வரை கன்னிராசிக்காரர்களுக்கு பாதச்சனி என்னும் வாக்குச்சனி நடைபெற்றுவருகிறது.இவர்கள்,சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறிவிட்டு,இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்ற வேண்டும்.இந்த வழிபாட்டுமுறையை நமக்கு அருளிய திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு  கோடி கோடி கூகுள் நன்றிகள்!!!
கால பைரவர் சன்னிதியில் சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வைத்து,பைரவ அஷ்டோத்திரம் எட்டு முறை வாசிக்க/ஜபிக்க வேண்டும்.தினமும் செய்ய முடியாதவர்கள் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் செய்யலாம்.இதனால்,வாக்குச்சனியின் துயரம் நீங்கும்.

சனிப்பிரதோஷ நாட்களான 2.6.12; 16.6.12;13.10.12;27.10.12;23.2.13;9.3.13 இந்த தேதிகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்