Showing posts with label அர்த்தமுள்ள இந்துமதம். Show all posts
Showing posts with label அர்த்தமுள்ள இந்துமதம். Show all posts

Sunday, November 7, 2010

புனித கங்கையில் குளிப்பதால் நீரழிவு நோய் தீரும்

புனித கங்கையில் குளிப்பதால் நீரழிவுநோய் தீரும்

 

கங்கையில் நீராடுவதால் நீரழிவு நோய் குணமாகிறது என்று ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.கங்கை நீரிலுள்ள பாக்டீரியோபேஜஸென்னும் வேதிப்பொருள் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது என்பது நெடுங்காலமாகத் தெரிந்த உண்மை.(கங்கைநதியில்  எவ்வளவு அசுத்தங்கள் சேர்ந்தாலும் கங்கை நீர் தூய்மையாகவே உள்ளது)

 

பல இந்து வீடுகளிலும்,சில இஸ்லாமிய வீடுகளிலும் கங்கைநீர் பல ஆண்டுகளாக வைத்துள்ளனர்.அது பலகாலமாகியும் தூய்மையாகவே இருக்கின்றது.

 

தற்போதைய ஆராய்ச்சியில் Bactreriophages நீரழிவு நோய்க்கிருமிகளை அழிக்கும்தன்மையுடையது என்பது நிரூபணமாகியுள்ளது.

 

இதனை இண்டர்நேஷனல் ஜர்னல் ரிசர்ச் இன் மைக்ரோபயாலஜி என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

 

இந்துக்களின் நம்பிக்கைக்கு இந்த அறிவியல் உண்மையும் வலு சேர்க்கிறது.நன்றி:இந்தியன் எக்ஸ்பிரஸ் 31.8.2010

Wednesday, October 13, 2010

விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்சிமுடிவுகள்

இந்துதர்மத்தில் ஒளிந்திருக்கும் விஞ்ஞானம்:ஜெர்மனியர்களின் ஆராய்ச்சி முடிவு

சவுந்தர்ய லஹரி என்ற ஒரு பாடல் தொகுப்பு இருக்கின்றது.அதை ஆதிசங்கரர் திருக்கையிலாய மலைக்குச் சென்று சிவபெருமானிடமிருந்து வாங்கி வந்தார்.அதில் “தனுர் பவுஷ்பம் மெளர்வி” என்கிற சுலோகத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்தால் அம்பாளுடைய தரிசனம் ஏதாவது ஒன்று நமது கண்களுக்குத் தெரியும்.

ஒரு ஜெர்மனியன் இதை டெஸ்ட் பண்ணிவிட நினைத்தான்.அவனுக்கு இந்த தனுர் பவுஷ்பம் மெளர்வி என்பதை உச்சரிக்க முடியலை.அதனால்,அவன் ஒரு காரியம் செய்தான்;இந்த சவுந்தர்ய லஹரி வரியை 10 டேப் ரெக்கார்டரில் ரெக்கார்டு செய்து தொடர்ந்து ஒரு லட்சம் தடவை சொல்வது போல் செய்தான்.ஒரு லட்சம் தடவை அந்த டேப்ரிக்கார்டர் சொன்னதும் அந்த டேப்ரிக்கார்டர்கள் பத்தி எரிந்தன;அதில் அம்பாளுடைய வடிவம் வந்தது.இதை நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே!!!

கேரளாவில் 2000 வாக்க்கில் ஒரு புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர்.இருப்பதிலேயே தலைசிறந்த வேத விற்பன்னர்களை அழைத்துவந்து,யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ அனைவரும் வந்து இந்த யாகத்தில் கலந்துகொள்ளுங்கள் என அழைத்தார்கள்.

யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ,அவர்களுக்கு எந்தக் காரணத்தினால் குழந்தையில்லை என்ற மெடிக்கல் ரிப்போர்ட்களை எடுத்தார்கள்.அதற்கேற்றாற்போல், குழந்தையில்லாத தம்பதிகள் 48 நாட்கள் இந்த புத்திரகாமேஷ்டியாகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.அந்த 48 நாட்களுக்குத் தேவையான உணவு,தங்குமிடம் இலவசமாக அந்த தம்பதிகளுக்குத் தந்தார்கள்.ஒரு ஜெர்மன் ஆய்வுக்குழு இந்தச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர்.

புத்திரகாமேஷ்டியாகம் முடிந்து சில வருடங்கள் கழிந்தப்பின்னர்,ஒரு சர்வே எடுத்தார்கள்.இந்த யாகத்தில் கலந்துகொண்ட தம்பதிகளில் 100க்கு 90 பேருக்கு ஆன்மீகபூர்வமாக அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தன.
சொன்னவர்:சிவசங்கரபாபா,வெளியீடு:பக்கம் 49,ஜோதிடபூமி,அக்டோபர் 2010.