Monday, July 29, 2019

ஆன்மீகத் தொண்டிலும்,கடமையிலும் ஏன் தொடர் முயற்சி தேவை?





ஆன்மீகத் தொண்டிலும் ஏன் தொடர் முயற்சி தேவை?

உங்களுடைய கர்மவினைகளின் தொகுப்பினை எடை போட முடியாது;இருந்தாலும்,உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்பீட்டுடன் சொல்ல வேண்டி இருக்கிறது;

இதுவரை உங்களது கர்மச்சுமைகளின் எடை 30,000 டன் என்று வைத்துக் கொள்வோம்;நீங்கள் ஒரே ஒரு முறை ஒரு சிவ மந்திரத்தை ஜபித்தால் அதன் புண்ணிய எடை 100 கிராம் அளவு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டால்,அதன் புண்ணிய எடை 100 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒருமுறை பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டால்,அதன் புண்ணிய எடை 50 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒரு முறை ஒரு பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானம் செய்தால்,அதன் புண்ணிய எடை 30 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒரு முறை உழவாரப் பணியில் ஈடுபட்டால்,அதன் புண்ணிய எடை 40 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;

நீங்கள் தீட்சை பெற்ற சிவமந்திரம் ஜபித்தால் அல்லது சொன்னால்,அதன் புண்ணிய எடை 1 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;

சில அபூர்வமான சிவ மந்திரத்தை,ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட சிவாலயத்தின் உள்ளே குறிப்பிட்ட நேரத்தில் ஒரு முறை ஜபித்தால் அதன்  புண்ணிய எடை 1000 கிலோ அளவுக்கு இருக்கிறது;
நீங்கள் ஒரே ஒரு பாழடைந்த சிவாலயத்தை புனர்நிர்மாணம் செய்தால்,அதன் புண்ணிய எடை 10,000 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
அதனால் தான் உங்களுக்குப் பிடித்தமான ஆன்மீகத் தொண்டு ஒன்று அல்லது ஒரு சிலவற்றை தொடர்ந்து செய்யும் படி வலியுறுத்துகிறோம்;
தமிழ்நாட்டில் ஒருவர் 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார்;அவருக்கு அவரது தாத்தா பித்ரு தர்ப்பணத்தின் மகிமையை போதித்துக் கொண்டே இருந்தார்;கூடவே தான் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது கூடவே இந்த பேரனை அழைத்துச் சென்று அதைப் பற்றி முழு விளக்கத்தையும் நேரடியாகவே சொல்வது வழக்கம்;
இதனால்,அந்த மனிதர் தனது 21 வயது முதல் 71 வது வயது வரை ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும் 96 வெவ்வேறு நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்து கொண்டே இருந்தார்;அவரது 72 வது வயதில் அவரது பிறவி முடிந்தது;அவர் மேல் உலகம் சென்றதும்,அவரிடம் மறுபிறவி கொடுத்தார்கள்;அப்போது அவரது விருப்பம் என்ன ? என்று கேட்டார்கள்;அவர்,அதே ஊரில் பிறக்க விரும்பினார்;
அதன் படி மீண்டும் அதே ஊரில் பிறவி எடுத்து,அப்பிறவியிலும் 14 வது வயது முதல் ஆயுள் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 96 நாட்களுக்கு (ஷண்ணாவதி நாட்கள்) பித்ரு தர்ப்பணம் செய்து வந்தார்;
மீண்டும் பிறவி எடுக்கும் போது அதே ஊரில் பிறக்க ஈசனை வேண்டினார்;இப்படியே 8000 முறை மனிதப் பிறவி எடுத்து,அனைத்து பிறவிகளிலும் அவர் பித்ரு தர்ப்பணம் செய்வதையே தனது ஜன்மாந்திர லட்சியமாகக் கொண்டார்;
அவர் தனது 8000 பிறவிகளிலும் செய்த ஒரே ஒரு ஆன்மீகத் தொண்டு (ஆக்சுவலாக கடமை தான் இது) பித்ரு தர்ப்பணம் மட்டுமே!!!
8000 பிறவிகளுக்குப் பிறகு ஈசனே நேரடியாக அவருக்கு காட்சி அளித்து மிக உயர்ந்த தெய்வீக பதவியை கொடுத்துவிட்டார்;
இதை வாசிக்கும் எனது சகோதர சகோதரிகளே,நீங்கள் எல்லாவிதமான ஆன்மீக தொண்டுகளையும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;உங்களால் முடிந்த,உங்களுக்குப் பிடித்த,உங்களுக்கு விருப்பமான ஆன்மீக சேவைகளை தினமும் அல்லது வாரம் ஒரு முறை அல்லது மாதம்ஒரு நாள் செய்து வாருங்கள்;அது போதும்;

கலியுகத்தில் பிறந்து வாழ்ந்து வரும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு குறையுடன் வாழ்ந்து வருகின்றோம்;பணம் நிறைய தேவையா? சொர்ண பைரவ அஷ்டகம் பாடலை தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் 33 முறை ஜபியுங்கள்;  (கண்டிப்பாக மது,அசைவம் தவிர்க்கவும்;)
இப்பிறவியிலேயே முக்தி வேண்டுமா? அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லுங்கள்;அதுவும் முடியவில்லையா? உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை சிவாய நம அல்லது ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்துவாருங்கள்!

எல்லா கலியுகத் துன்பங்களுக்கும் காரணம் நாம் அடிக்கடி பித்ரு தர்ப்பணமும்,திலா ஹோமமும் செய்யாமல் இருப்பது தான்! இயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டியது பித்ரு தர்ப்பணம்;செயற்கையான முறையில் இறந்து பசி,தாகத்துடன் தவிக்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்,திலா ஹோமம் ஆகும்.அவரவர் ஜாதகம் பார்த்து கண்டறிய வேண்டியது இது;
100 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் பித்ரு தர்ப்பணம் செய்து வந்தார்கள்;அப்புறம் அதை மாதா மாதம் அமாவாசை அன்று மட்டும் செய்தால் போதும் என்று மாற்றினார்கள்:அப்புறம்,ஒரு ஆண்டில் மூன்று முறையாவது பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் மாற்றிவிட்டார்கள் (நாமும் அவ்வளவு பிசியாகி விட்டோம்)   
ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை;
இதில் ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் அதற்கு முந்தைய 12 ஆண்டுகள் செய்யாமல் விட்ட தர்ப்பணத்தை ஈடு செய்யும் வலிமை கொண்டது;புரட்டாசி அமாவாசை அன்று (28.9.2019 சனிக்கிழமை) பித்ரு தர்ப்பணம் கூட செய்ய முடியாத வறுமையில் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் ஒரே ஒரு சாதுவுக்கு/அனாதைக்கு அன்னதானம் செய்தாலும் போதும் என்று அகத்தியர் பரம்பரையில் பிறந்த சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் ஐயா அவர்கள் நமக்கு உபதேசிக்கிறார்;
தமிழ்நாட்டில் ஓசூர் முதல் சுங்கான்கடை வரை;ஊட்டி முதல் பூம்புகார் வரை எல்லா சிவாலயங்களின் வெளிப்புறம் இருக்கும்  கோவில் குளக்கரையிலும் பித்ருதர்ப்பணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்;எனவே,குறிப்பிட்ட ஆலய நகரம் சென்று தான் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;
ஆண்வாரிசு இல்லாத குடும்பங்களில் பெண்கள் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;வெள்ளை எள் கொண்டு செய்ய வேண்டும்;
தெய்வ நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் அல்லது நடக்க முடியாத முதுமை கொண்ட பெற்றோர்கள் இருந்தால்,அவர்களுக்கு பதிலாக தெய்வ நம்பிக்கை கொண்ட மகன் அல்லது மகள் அல்லது பேரன் அல்லது பேத்தி என்று யார் வேண்டுமானாலும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது;

31.7.2019 புதன் காலை 11.23 முதல் 1.8.2019 வியாழன் காலை 9.19 வரை ஆடி அமாவாசை இருக்கிறது;இந்த நேரத்திற்குள் பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள்;பித்ருக்கள் ஆசியினால் நீடூழி வாழ்க!!!

Tuesday, July 23, 2019

தமிழர்களின் ஆதிகுரு அகத்தீஸ்வரர் ஆலயங்கள் =56


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;
1.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத ஆதி அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஆடையூர்,(சந்திரலிங்கத்திற்கு அருகில் செல்லும் சாலை) கிரிவலப் பாதை,அண்ணாமலை;
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.


10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.


38.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

39.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

40.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

41.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

42.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

44.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

45.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

46.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

47.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

48.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

50.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

51. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை

52.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

53.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்

54.அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணமை(மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில்  8 கி மீ சென்றால் மணமை கிராமம் வரும்;அதன் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)

55.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,செம்மங்குடி,குடவாசல் அருகில்,திருவாரூர் மாவட்டம்,

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.


முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;





நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;



அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;

எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;

அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;

அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!

தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

Monday, July 22, 2019

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி சொர்ண பைரவர் வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,     ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 24.7..2019 புதன்கிழமை மதியம் 3.18 முதல் 25.7.2019 வியாழக்கிழமை மாலை 4.10 வரை  தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது!!! 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;


 வியாழக்கிழமை இராகு காலம் மதியம் 1.30 முதல் 3.00 வரை இருக்கின்றது;

வியாழக்கிழமை குளிகை காலம் காலை 9 முதல் 10.30  வரை அமைந்திருக்கிறது;




இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி   23.8.2019 வெள்ளிக்கிழமை முழுவதும் இருக்கிறது!!!

Monday, July 15, 2019

பல மடங்கு ஆன்மீக முன்னேற்றம் தரும் சந்திர கிரகண ஜபம்!!!



உங்களது இப்பிறவி வாழ்க்கையை தீர்மானித்தது யார் தெரியுமா?
நீங்கள் மட்டும் தான்!


போன 4 ஜன்மங்களில் நீங்கள் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்பாகவே உங்களுக்கு இப்பிறவியில் இந்த வேலை அல்லது தொழில் அமைந்திருக்கிறது;இவ்வளவு வருமானமும்,சொத்துக்களும் கிடைத்திருக்கின்றன;குடும்பம்,புகழ்,தனித்திறமை அனைத்துமே போன 4 பிறவிகளில் செய்த நற்செயல்களின் தொகுப்பு மட்டுமே!

அதே போல போன 4 பிறவிகளில் நீங்கள் செய்த அடாவடிகள்,அகங்காரங்கள்,தேவையற்ற தீமைகளே இப்பிறவியில் கடன்,நோய்,எதிரி,துரோகங்கள்,வம்பு வழக்குகளாகவும்,ஏழரைச்சனியில் அனுபவிக்கும் துயரங்களாகவும்,அஷ்டமச்சனியில் கைநழுவிப் போன வாய்ப்புகளாகவும் இருக்கின்றன;


புண்ணியத்தை அதிகப்படுத்துவதில் முதலிடம் வகிப்பது அன்னதானம்,இரண்டாம் இடத்தில் இருப்பது அண்ணாமலை கிரிவலம்,மூன்றாம் இடத்தில் இருப்பது நீங்கள் தினமும் நேரம் ஒதுக்கி செய்யும் மந்திர ஜபம்! மந்திரங்களில் உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டியவை;உபதேசம் பெறாமல் ஜபிக்க வேண்டியவை என்று இரண்டு வகைகள் இருக்கின்றன;

இதில்,உபதேசம் பெறாமல் ஜபிக்கக் கூடிய மந்திரங்களையே இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்;

ஆண் எனில் 14 வயது நிறைவடைந்த பின்னரும்,பெண் எனில்,பருவம் அடைந்த பின்னரும் இந்த மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

தரையில் அமர்ந்து,அதன் மீது எந்தவித விரிப்புகளும் இல்லாமல் மந்திரம் ஜபிக்கக் கூடாது;அப்படி ஜபித்தால்,அது பூமிக்குள் போய்விடும்;அதனால்,உங்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாமல் போய்விடும்;

பழமையான கோவிலுக்குள் அமர்ந்து அல்லது நடந்தவாறு ஜபிக்கலாம்;அங்கே கருங்கல்லே விரிப்புக்கு இணையாக இருக்கிறது;வீடு,தங்கும் இடம் எனில்,பூஜை அறை அல்லது தூங்காத அறை ஒன்றைத் தேர்வு செய்து அதில் ஒரு புதிய துண்டு/விரிப்பு விரித்து அதன் மீது அமர்ந்து ஜபிக்க வேண்டும்;கிழக்கு/வடக்கு அமர்ந்து ஜபிக்க வேண்டும்;விரிப்பு மீது அமர்ந்திருக்கும் போது உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;


பலர் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா?


இந்த மந்திர ஜபம் எல்லாம் தாம்பத்திய சுகத்தை நிரந்தரமாகக் கைவிட்டவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று! இது முற்றிலும் தவறு!!! இல்லறத்தில் இருந்தவாறும்,திருமணம் செய்யாத ஆணும்,பெண்ணும் கூட மந்திர ஜபம் செய்யலாம்;ஜபித்து முடிக்கும் வரை உடல் சுத்தம் அவசியம்:அவ்வளவு தான்!


எந்த ஒரு மந்திரமும் ஒரு மணி நேரம் ஜபித்துவிட்டால் மட்டுமே பலன் தரும் என்று எண்ணக் கூடாது;ஒரு லட்சம் தடவை ஜபித்த பின்னர் தான் பலன் தர ஆரம்பிக்கும்;கலியுகத்தில் வாழ்ந்து வரும் நாம்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து/விட்டுவிட்டு மூன்று ஆண்டுகள் வரை ஒரு மந்திரத்தை ஜபிப்பது நன்று;பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஜபிக்கக் கூடாது;


சூரிய கிரகணம் நடைபெறும் போது ஆண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபிக்கலாம்;


சந்திர கிரகணம் நடைபெறும் போது பெண் தெய்வங்களுக்கு உரிய மந்திரங்களில் உங்களுக்கு விருப்பமானதை ஜபிக்கலாம்;

கிரகணம் துவங்கிய 15 நிமிடங்களுக்குப் பிறகு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;கிரகணம் முடிவதற்கு 15 நிமிடம் முன்பாகவே ஜபத்தை முடித்துவிட வேண்டும்;கிரகணம் முடிந்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும்;


இப்படிச் செய்தால் மட்டுமே மந்திர ஜபம் பலன் தரும்;
ஒரு மந்திரத்தை நமது விட்டில் 1 முறை ஜபித்தால் 10 முறை ஜபித்த பலனைத் தரும்;


பழமையான கோவிலுக்குள் ஒரு முறை ஜபித்தால் 1000 முறை ஜபித்த பலன்  தரும்;

தமிழ் மாதப் பிறப்பு,தமிழ் வருடப் பிறப்பு அன்று ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 மடங்கு பலன் தரும்;

கடலோரம் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,1 கோடி முறை ஜபித்த பலன் தரும்;

மலை மீது ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,2 கோடி மடங்கும்,
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகண நேரத்தில் ஜபித்தால் மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை பெருக்கல் 1000 கோடி மடங்கு பலன் தரும்;


16.7.2019 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 1.32 முதல் பின்னிரவு 4.34 வரை சந்திர கிரகணம் வர இருக்கிறது;
நீங்கள் இரவு 1.50/2.00 மணி முதல் பின்னிரவு 4.00 மணி வரை பெண் தெய்வ மந்திரம் ஒன்றை ஜபிக்கலாம்;


ஒரு போதும் துரோகங்களும்,எதிர்ப்புகளும் உங்களை இனிமேல் நெருங்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால்,பிரபஞ்சத்தை ஆளும் அன்னை,கருணைக் கடல் மஹாவராகியை ஜபிக்கலாம்;

ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தை இந்த இரண்டு மணி நேரம் ஜபிக்கலாம்;