உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் பரமேஸ்வரனின் பெயரால் நிர்வாகத்து
வருபவர் மஹாகால பைரவப் பெருமான்! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,மஹேஸ்வரனிடம் இருந்து
உதயமானவர் மஹாகால பைரவப் பெருமான்!
பூமியில் உள்ள காலக் கணக்கின்படி,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி
திதி அன்றுதான் மஹேஸ்வரனிடம் இருந்து உதயம் ஆனார்;
மஹா கால பைரவப் பெருமானின் அருளால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை
நிர்ணயம் செய்த பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரக சித்தர் ஆவார்;இவர் தான் ஒரு நாளுக்கு 24
மணி நேரம்,ஒரு வாரத்திற்கு 7 நாட்கள்,ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்ற காலக் கணக்கீட்டை
கொண்டு வந்தார்!
இந்த நன்னாளில் இவரை நன்றியோடு நினைத்துக் கொண்டு பைரவ ஜபத்தைத் துவக்க
வேண்டும்;
ஜோதிடர்களாக இருப்பவர்கள்,
மஹாகால பைரவரை இப்பிறவி முழுவதும் உபாசனை செய்பவர்கள்;
ஏழரைச்சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்;
தமது கர்மவினைகள் ஒரே பிறவியில் தீர வேண்டும் என்ற ஆன்மீக முயற்சியில்
ஈடுபட்டுள்ளவர்கள்
இந்த நாள் முழுவதும் மஹாகாலபைரவ மந்திரம் ஜபிக்கலாம்;
ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ
அல்லது
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ
அல்லது
கால பைரவர் 1008 போற்றியையோ
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 1008 போற்றியையோ
ஜபிக்கலாம்;
10.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.32 முதல் 11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 வரை கார்த்திகை மாதத்தின்
தேய்பிறை அஷ்டமி திதி இருக்கின்றது;
சித்தர்கள்,ரிஷிகள்,பைரவ சித்தர்கள் போன்றவர்கள்
அரூபமாக பூமிக்கு இந்த நேரம் முழுவதும் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுசேருகின்றார்கள்;இந்த
திதி இருக்கும் நேரம் முழுவதும் (10.12.2017 sunday 7.32am to 11.12.2017 moonday 6.30 am) அந்த இடத்தில்
மஹாகால பைரவரை தத்தம் குருநாதர்களோடு ஜபிக்கவும்,பூஜிக்கவும் செய்கின்றார்கள்;
அந்த இடம்:அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழபுரம்,கும்பகோணம்;
வழி:கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் 10 வது கி மீ
தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது;
பைரவப் பெருமானின் அருளைப் பெற விரும்புவோர் இந்த ஆலயத்திற்கு வருகை
தந்து இங்கே நடைபெறும் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம்;
பைரவரின் அருளோடு ஈசனின் அருளையும் பெற விரும்புவோர் 9.12.2017 அன்றே
அண்ணாமலைக்கு வந்துவிட வேண்டும்;10.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.32க்கு இரட்டைப்பிள்ளையார்
கோவில் வாசலில் இருந்து கிரிவலம் புறப்பட வேண்டும்;
கிரிவலம் செல்லும் போது உங்களுக்குத் தெரிந்த பைரவ மந்திரம் ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 வரை மிகவும் மெதுவாக கிரிவலம் செல்ல வேண்டும்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30க்கு கிரிவலத்தை அண்ணாமலை கோவிலுக்கு உள்ளே இருக்கும் கால பைரவர் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;
கிரிவலம் செல்லும் போது உங்களுக்குத் தெரிந்த பைரவ மந்திரம் ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 வரை மிகவும் மெதுவாக கிரிவலம் செல்ல வேண்டும்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30க்கு கிரிவலத்தை அண்ணாமலை கோவிலுக்கு உள்ளே இருக்கும் கால பைரவர் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;
அல்லது சீக்கிரம் கிரிவலத்தை நிறைவு செய்துவிட்டாலும்,நீங்கள் தங்கியிருக்கும்
இடத்தில் தூங்காமல் பைரவ ஜபம் செய்யலாம்;11.12.2017 திங்கட்கிழமை காலை 6.30 ஆகும் போது
கால பைரவர் சன்னதியில் ஜபத்தை நிறைவு செய்ய வேண்டும்;
கிரிவலப்பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்கள் இருக்கின்றன;இவைகளுக்கு
பிஸ்கட்,பொறை போன்றவைகளை தானமாக தர வேண்டும்;
இதில் எதையும் செய்ய இயலாதவர்கள் அவரவர் சொந்த ஊரில் இருக்கும் சிவாலயத்தில்
பைரவப் பெருமான் சன்னதியில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை(90 நிமிடங்கள்) பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;
இதையும் செய்ய இயலாதவர்கள் இந்த நாளில் உங்கள் தெருவில் இருக்கும் பைரவ
அம்சமான நாய்களுக்கு உணவு இடலாம்;அவரவர் வீட்டு பூஜை அறையில் பைரவ மந்திரங்களில் ஏதாவது
ஒன்றை ஜபிக்கலாம்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதலாம்;
மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் அட்டவீரட்டானங்கள் ஒன்றில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;
1.திருக்கண்டியூர் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் இருப்பது)
2.திருவதிகை (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இருப்பது)
3.திருக்கோவிலூர்
4.செம்பொனார் கோவில் (மயிலாடுதுறையில் ஒரு பகுதி)
5.வழுவூர் (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் உள்ளடங்கிய கிராமத்தில் இருப்பது)
6.குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்தால் உள்ளடங்கி இருக்கும் கிராமம்)
7.திருவிற்குடி(திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் இருக்கும் உள்ளடங்கிய கிராமத்தில் இருப்பது)
8.திருக்கடவூர் மற்றும் திருக்கடவூர் மயானம்
9.சிதம்பரம்
இந்த ஆலயங்களில் சிவலிங்க வடிவத்தில் இருந்து அருள்பாலித்து வருவது மஹாகால பைரவரே!
ஒன்பதாவதாக இருக்கும் சிதம்பரத்தில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அருளாசி புரிந்து வருகின்றார்;
ஒன்பதாவதாக இருக்கும் சிதம்பரத்தில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அருளாசி புரிந்து வருகின்றார்;
($ முருகக்கடவுளுக்கு எப்படி அறுபடைவீடுகள் இருக்கின்றனவோ,அதே போல கால தேவன் என்று அழைக்கப்படும் மஹாகால பைரவருக்கும் எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இதை அட்டவீரட்டானங்கள் என்று அழைப்பது வழக்கம்$)
ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா
ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்
No comments:
Post a Comment