தாம்பரம் அருகில் அமைந்திருக்கும் கிராமம் படப்பை;இங்கே அருள்மிகு ஜெயதுர்கா
பீடத்தை அமைத்து பக்தியைப் பரப்பிக் கொண்டிருந்தவர்தான் அருள் நிறைச் செல்வர் ஸ்ரீலஸ்ரீ
துர்கைச் சித்தர்;இவருக்கு உபாசனா குலபதி என்ற பட்டம் உண்டு;இவரது எழுத்துக்களில் இவரது
ஆன்மீக அனுபவங்கள் அப்படியே நிரம்பியிருக்கின்றன;நேரில் இருந்து நமக்கு வழிகாட்டுவது
போலவே இருக்கின்றன;
அவரது நூல்கள் மூலமாக நமக்கு மானசீக குருவாக இருந்து நம்மை வழிநடத்தி
வருபவர்;அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்;
ரோகம் என்றால் நோய் என்ற அர்த்தம் மட்டும் அல்ல;கடன் என்ற அர்த்தமும்,தேவையற்ற
வாழ்க்கைச் சிக்கலையும் ரோகம் என்றே அழைத்தார்கள் நமது முன்னோர்கள்!
கடன்/நோய்/எதிரிகள்/துயரங்கள்/கடுமையான சோகங்கள்/தீராத சோகங்களால் தற்கொலை
செய்து செத்துவிடலாமா? என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு அதில் இருந்து மீள இந்த ரோக நிவாரண
அஷ்டக ஜபம் கைகொடுக்கின்றது;
உங்கள் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயம் அல்லது அம்மன் ஆலயத்தினுள் தினமும்
காலை 10 மணிக்குள் ஒருமுறையும்,இரவு 10 மணிக்குள் ஒருமுறையும் இந்த பாடலை ஜபித்து வரவேண்டும்;
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க் கையளே
ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடி டுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
தளிர்ந்திடுஜோதி யான வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா!
(1)
தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க் கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈஸ்வரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவி
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா!(2)
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா(3)
நாரணி மாயே நான்முகன் தாயே
நாகினி யாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுறை தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானக யாயே காசி னியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா!(4)
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதி யானாய் பேரறி வானாய்
பெருவலி வானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கை யளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா!(5)
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க் கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாய கியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாய வளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநிவாரணி ஜெய துர்க்கா!(6)
கோவுறை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க் கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சி யளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணையே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா!(7)
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரிணி சந்த்ர கண்டி னியே
ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்ய யளே
ஜெய ஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா ஸ்ரீநவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா!(8)
அவரவர் பூர்வபுண்ணிய வினைக்கு ஏற்ப ஒராண்டு முதல் மூன்றாண்டு வரைப் பாடி
வர கடன் தீரும்;நோய் விலகும்;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!
No comments:
Post a Comment