Wednesday, June 5, 2013

அருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்

 இராஜபாளையம்  மக்களைச் சுற்றி சமாதி முனிவர்கள் அருள்பாலித்து வருகிறார்கள்.  சமூக மக்கள் குடியிருக்கும் தெருக்களை இந்த முனிவர்களின் அருள் சூழ்ந்து காத்து வருகிறது.
மேற்கு திசையில் அருள்மிகு குருசாமி முனிவரும், கிழக்கு திசையில் அருள்மிகு கருப்ப ஞானியார்,அருள்மிகு பொன்னப்ப ஞானியார் சுவாமிகளும்,  வடக்கு திசையில் அருள்மிகு சிவகாமி ஞானியார் சுவாமிகளும் தென் திசையில் அருள்மிகு கொம்புசாமி அருள்மிகு வெள்ளையங்கிரி முனிவரும் அருள் பாலித்து வருகிறார்கள். 

சமாதி நிலை என்றால் சமம்+ஆதி என்று பொருள்படுகிறது. அதாவது ஆதிமூலமான இறைவனுக்கு சமமான நிலையில் இறைத்தன்மையுடன் இரண்டறக் கலந்தநிலை.இத்தகைய நிலையில் அருள்பாலித்து வரும்  முனிவர்களை நம் சமூகம் போற்றி வழிபாடு செய்து வருகிறது.

நந்தி என்றால் எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று அறிஞர் கூறுவர். நந்தி முழுமுதற்கடவுளான சிவனின் வாகனமாக இந்து சமய வழிபாட்டில் போற்றப்படுகிறது. கயிலையின் காவல் தெய்வமான இவரின் அனுமதி பெற்ற பின்பே பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் சிவபெருமானை தரிசித்ததாக கந்த புராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.பிரதோஷ காலத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி அருளுவதாக ஐதீகம்.

பாரத நாட்டில் எண்ண முடியாத கோடி கோடி சித்தர்களில் நந்தீஸ்வரர் முதன்மை பெறுகிறார்.
.உலக இன்பங்களில் முதன்மையானதும் அரிதானதுமான இன்பங்கள் இறைவனுக்கு செய்யும்  சேவையே ஆகும்.அளவிடற்கரிய ஆனந்தத்தை நாம் அனுபவிக்கும் பொது சற்று கவனித்துப் பார்த்தால் அந்த ஆனந்தத்தின் உள்ளே சரணாகதி தன்மை இருப்பது நிச்சயம்.


No comments:

Post a Comment