Wednesday, April 29, 2009

நினைத்தது நடக்க தெய்வீக மோதிரம் ;சொன்னவர் குரு மிஸ்டிக் செல்வம் அவர்கள்


தெய்வீக மோதிரம்-தயாரிப்பது எப்படி?
நன்றி:மானசீககுரு மிஸ்டிக் செல்வம் அவர்கள்

ஒரு வருடத்தில் சில தடவைகள் மட்டும் சூரியன்,சந்திரன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் ஒன்று சேரும்.அப்படி ஒன்று சேரும் கால அளவு சிலமணி நேரங்களாக இருக்கும்.அல்லது 2 1/4 நாளாக இருக்கும்.(அதாவது 54 மணிநேரம்).இந்த சேர்க்கை நேரத்தை அனுபவம் மிக்க ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.அல்லது இந்த வலைப்பூவில் தொடர்பு கொள்ளுங்கள்.மின் மடலில் உரிய நேரத்தை அனுப்புகிறோம்.
அந்த நேரத்தில் 1:1 என்ற அளவிற்கு சுத்த வெள்ளியையும் சுத்த தங்கத்தையும் சேர்த்து உருக்கி,திறப்பு உள்ள மோதிரம் செய்து முடிக்க வேண்டும்.(நல்ல அனுபவமுள்ள நகை ஆசாரியால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.அனுபவம் இல்லாதவர்களால் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து உருக்கத் தெரியாது என்பது அனுபவ உண்மை).அப்படி செய்து முடித்த மோதிரத்தில் ஒரு காரட்டுக்குக் குறையாத பவளக்கல்லை அந்த திறப்பில் பதித்துவிட வேண்டும்.அப்படி பதிப்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பதித்துவிட வேண்டும்.
மோதிரம் செய்தவுடன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பாதத்தில்(வீட்டிலும்)வைத்து அர்ச்சனை செய்து கையில் அணியவும்.(அணியும் நேரம் எதுவாகவும் இருக்கலாம்).அணிந்த பின் நீங்கள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் வரும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் கிடைக்கும்.
இம்மோதிரம் அணிந்தால் ஜனவசியம், சொல் பலிதம்,நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.நன்றி;ஜோதிட பூமி,ஆகஸ்டு 2006
அடுத்த ஒரு வருடத்தில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன் மூவரும் ஒன்று சேரும் நாட்கள்;
16.10.2009 வெள்ளிக்கிழமை மதியம் மணி 1.05 முதல்
17.10.2009 சனிக்கிழமை இரவு மணி 10.32 வரை
15.11.2009 ஞாயிறுக்கிழமை காலை மணி 6.01 முதல்
16.11.2009 திங்கட்கிழமை காலைமணி 6.09 வரை
16.4.2010 வெள்ளிக்கிழமை காலை மணி 6.54 முதல்
17.4.2010 சனிக்கிழமை காலை மணி 6.16 வரை

5 comments:

  1. pl send the details(dates)for up coming months in 2010 and 2011

    ReplyDelete
  2. அய்யா 2011-ம் ஆண்டிர்குரிய நாட்களை சொல்லவும்.
    பின்னர், அந்த மொதிரம் நீங்களே செய்து தருவீர்களா.?
    எவ்வளவு செலவாகும்.?

    ReplyDelete
  3. sir,please send the dates for 2011 and 2012...

    ReplyDelete
  4. அய்யா 2012-2013 அம் ஆண்டிர்குரிய நாட்களை சொல்லவும்.
    பின்னர், அந்த மொதிரம் நீங்களே செய்து தருவீர்களா.?
    எவ்வளவு செலவாகும்.?

    ReplyDelete