Wednesday, January 18, 2017

ஒரு மாதத்திற்கு பணச்சிக்கல்களைத் தீர்த்து,பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஒரு நாள்(தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு!!!




தை மாத தேய்பிறை அஷ்டமியானது 19.1.17 வியாழன் மாலை 5 மணி முதல் 20.1.17 வெள்ளிக்கிழமை மாலை 6.46 வரை அமைந்திருக்கின்றது;



 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;  ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;



எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ






அடுத்த தேய்பிறை அஷ்டமி:சதுர்முகி வருடம்,மாசி மாதம் 18.2.17 சனிக்கிழமை மதியம் 12.11 முதல் 19.2.17 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.20 வரை

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்; வாட்ஸ் அப்: 9092116990



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்

Tuesday, January 17, 2017

ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?


உலகம் உருவாகி 5 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாக நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகின்றன;மனிதன் நாகரீகமடையத்துவங்கியதும் உலகில் தோன்றிய முதல் மொழி நம் தமிழ் மொழியே! உலகில் உருவான முதல் வழிபாடு சிவ வழிபாடே!எல்லாம் அவன் செயல் என்பது திரித்துவிடப்பட்ட பழமொழி! எல்லாம் சிவன் செயல் என்பதே பல நூற்றாண்டுகளாக நம்மிடையே புழங்கும் நிஜமான பழமொழி!!

அணுவுக்குள்ளே நிலையான சக்தி,அசையும் சக்தி என்று இரண்டு சக்திகள் இருக்கின்றன;அதே போல சிவன் மட்டுமே நிலையான சக்தி;சிவனைத் தவிர அனைத்து கடவுள்களுமே ஒரு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அசையும் சக்திகள்;திருமூலரின் திருமந்திரத்தில் இது தொடர்பாக விரிவான விளக்கங்கள் பல பாடல்களில் தெரிவித்துள்ளார்;தேவாரப்பதிகங்களிலும் சூட்சுமமாக தெரிவிக்கப்பட்டுள்ளன;

மருது சகோதரர்கள் ஒரு குறிப்பிட்ட தேவாரப்பதிகம் தினமும் பாடி வந்தனர்;அந்த தேவாரப்பதிகம் பாடியதால் தான் சராசரி மனிதர்களாக இருந்த அவர்களால் மன்னராக முடிந்தது;


ராவணன் சிவவழிபாட்டை ருத்ராட்சம் அணிந்து தொடர்ந்ததால் தான் மரணமில்லாதப் பெருவாழ்வைப் பெற்றான்;மேலும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் இயக்கும் நவக்கிரகங்களையும் அடிமைப்படுத்த முடிந்தது;பிற்காலத்தில் பெண் பித்தால் அனைத்து சிவ அருளையும் இழந்தது புராண உண்மை;


முருகக் கடவுளால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் சிவவழிபாடு செய்துதான் 1008 அண்டங்களையும் ஆளும் வரம் பெற்றான்;


இந்த உலகில் இதுவரை இருக்கும் அனைத்து மதங்களும் கூறும் உண்மை: “இறைவன் ஒருவனே”.அந்த இறைவனின் பெயர் ஆதிசிவன் என்று இந்துக்களும்,அல்லா என்று இஸ்லாமியர்களும்,பரமபிதா என்று கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர்; பெயர் வெவ்வேறாக இருந்தாலும்,இறைசக்தி ஒன்றே!!சிவனின் தூயத் தமிழ்ப் பெயர்: ஈசன்.(ஈஷா யோகாவை இந்தப் பெயரின் மூலமாகத்தான் வைத்திருப்பார்களோ?)

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் இயக்கும் மூல முதல் சக்தி மனோன்மணி என்ற ஆதி சக்தி! இவள் எட்டு வயது சிறுமி வடிவில் தோற்றமளிப்பவள்;இவளே தலைமைக் கடவுள்! 

இவளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ஐந்து விதமான ஈசன் கள்!!
இந்த சிறுமிவடிவ தெய்வத்தை வழிபடும் தகுதியை அடைய நாம் சித்தரானால் தான் முடியும்;


சித்தராக வேண்டுமானால் அண்ணாமலையை அடிக்கடி வலம் வர வேண்டும்;அண்ணாமலை கிரிவலத்திற்கு அப்பேர்ப்பட்ட சக்தி உண்டு;


பூமியில் 84,00,000 விதமான உயிரினங்கள் வசிக்கின்றன;சில உயிர்களுக்கு ஆயுள் சில மணித்துளிகள்;சிலவற்றிற்கு சில நூறு ஆண்டுகள்;இந்த 84,00,000 பிறப்புகளில் பெரும்பாலானவற்றைக் கடந்தப் பின்னரே மனித ஜன்மம் எடுத்துள்ளோம்;கடந்த ஐந்து மனிதப்பிறவிகளில் நாம் செய்த நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்களின் தொகுப்பை அனுபவிக்கவே இந்த மனிதப்பிறப்பு எடுத்துள்ளோம்;இன்னும் பல நூறு மனிதப் பிறப்பு எடுக்கப் போகிறோம்;இதைத் தடுத்து அடுத்த சில பிறவிகளுக்குள் முக்தி அடைய நாம் செய்ய வேண்டியது அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்வதுதான்;

வெகுவிரைவில் முக்தி கிடைக்கவே விரும்புகிறோம்;ஆனால்,அது நடைமுறை சாத்தியம் இல்லை;

அதே போல இப்பிறவியோடு எனக்கு மனிதப் பிறவி போதும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்;அந்த அளவிற்கு நம்மில் பெரும்பாலானவர்கள் வேதனைகள்,கஷ்டங்கள்,துயரங்கள்,அவமானங்களை அனுபவித்ததன் விளைவாக இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேள்விப்படுகிறோம்;

எனவே,இனிமேல் பிறக்க இருக்கும் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அண்ணாமலை கிரிவலமே உயர்ந்தது;சிறந்தது;எளியது;

எப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்?
தமிழ் வருடப்பிறப்பு அன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;
தமிழ் மாதப்பிறப்பு தோறும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;(400 ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடைமுறையில் இருந்தது)
அவரவர் பிறந்த நட்சத்திர நாளன்று அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

அண்ணாமலையாரின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;
ஈசனின் ஜன்ம நட்சத்திரம் என்று நாம் நம்பும் திருவாதிரை நட்சத்திர தினங்களில் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;
எப்போதெல்லாம் நமக்கு விடுப்பும்,பணமும் கிடைக்குமோ அப்போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;
குபேரலிங்கம் கடந்ததும் அமைந்திருக்கும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் இடுக்கு வழியாக ஒருமுறை சென்றால் ஒரு பிறவி குறையும் என்று சித்தர்களின் தலைவர் அகத்தியர் தெரிவித்திருக்கிறார்;அப்படிச் செல்லும் போது அண்ணாமலையை நோக்கி தலையை நுழைத்து இடுக்கினுள்ளே நுழைய வேண்டும்;அதுதான் முறை;

ஒம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை சொன்னால் 3,00,000 தடவை ஒம் நமச்சிவாய நமஹ சொன்னதற்குச் சமம் என்று அண்ணாமலையாரே தெரிவித்துள்ளார்;

ஈசன் என்ற பரமேஸ்வரனைச் சரணடையவே பல முற்பிறவிகளில் சிவாலயத்தில் தொண்டு செய்திருக்க வேண்டும்;சிவ வழிபாடு மட்டுமே நமது வாழ்க்கையை மீண்டும் மீண்டும் இங்கே தொடராமல் இருக்கச் செய்யும்;இதை சரியான விதத்தில் உணர்ந்தவர்கள் ஈசனைச் சரணடைவார்கள்;மற்றவர்கள் இன்னும் எத்தனை பிறவிகளுக்குப் பிறகு ஈசனைச் சரணடைவார்களோ? அது அந்த பரமேஸ்வரனுக்கே தெரியும்;

சிவசிவ என்றிட தீவினை மாளும்; ஆமாம்,தொடர்ந்து சிவசிவ என்று ஜபித்துக் கொண்டே வந்தால்,முற்பிறவிகளில் நாம் செய்த தீவினைகளின் துன்பங்கள் நம்மை நெருங்காது;அழியத் துவங்கும்;

சிவசிவ என்றிலர் தீவினையாளர்=கடுமையான தீயவினைகளை ஒரு மனித ஆத்மா முற்பிறவிகளில் செய்திருந்தால்,இப்பிறவியில் சிவ வழிபாட்டிற்கு வராது;சிவசிவ என்று ஜபிக்காது என்று அர்த்தம்;

சித்தர்களை விட வேறு யார் நமக்கு அறிவுரை சொல்ல முடியும்?
சிவாய நம என்று 28,00,00,000 முறை ஜபித்தப் பின்னர்,செம்பைப் பார்த்தால் அது உடனே தங்கமாகிவிடும் என்று சித்தர்களின் தலைவர் அகத்தியர் போதிக்கின்றார்;இது சிவ ரசவாத ரகசியம் ஆகும்;

நாம் வாழ்ந்து வரும் பூமியில் இருந்த சிவாலயத்தின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? நாமே நம்ப மாட்டோம்;1000 கோடி சிவாலயங்கள் இருந்தன;இந்த 1000 கோடி சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை செய்திருக்கின்றார் ஒரு சித்தர்;


8,00,000 ஆண்டுகளாக ஒரு மன்னன் உழவாரப் பணி செய்தான்;அதனாலேயே,அவனை அன்னை பார்வதி தேவியானவர்,சிவ வழிபாட்டிற்குரிய மலரான நாகலிங்கப்பூவாக மாற்றினார்;2016 (இரண்டு 1008 முறை) ஓம் நமச்சிவாய என்று ஜபித்தப் பின்னர்தான் நாம் நாகலிங்கப்பூவைத் தொடவே வேண்டுமாம்;அதன் பிறகு,ஒரு கையில் ஒரு நாகலிங்கப்பூவை வைத்துக் கொண்டு,21 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டுமாம்;அப்படிச் செய்யும் போது 21 சிவதுறவிகள் சூட்சுமமாக அந்த அன்னதானத்தைப் பெறுவார்களாம்;அதன் பிறகுதான் நாகலிங்கப்பூவை சிவலிங்கத்தின் தலையில் வைக்க வேண்டுமாம்;இதை நமக்கு போதித்தவர் ஸ்ரீலஸ்ரீ லோபமுத்ர சமேத அகத்தியர் ஆஸ்ரமத்தை அண்ணாமலை கிரிவலப்பாதையில் தோற்றுவித்த அகத்தியர் பரம்பரை வாத்தியார் சுவாமிகள் என்ற ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள்! இவருக்கு பலவிதமான தெய்வீக அனுபூதிகளை அளித்தவர் இடியாப்ப சித்தர் பெருமான் ஆவார்;


சிவனொடு ஒக்கும் தெய்வம் வேறு எங்கும் இல்லை என்று திருமூலரே தெரிவிக்கும் போது நமது பிறவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோமா அல்லது முக்தியை நோக்கிப் பயணிப்போமா?

உபாசனா குலபதி ஸ்ரீலஸ்ரீ துர்கைச் சித்தர் அருளிய (குருபலத்தை தரும்) வியாழ மாலை


தினமும் காலை 6 மணிக்குள்ளாகவும்,வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் பாடுவதன் மூலமாக அவரவர் ஜாதகத்தில் குரு பலம் அதிகரிக்கும்;கல்வியில் மகத்தான தேர்ச்சி பெற விரும்புவோர் தினமும் இதைப் பாடி வரவேண்டும்;3 ஆண்டுகள் தினமும் இதைப் பாடி வருபவர்களுக்கு தகுந்த குரு கிடைப்பார்;

ஜோதிடர் எனில் அவரது சுபாவத்திற்கு ஏற்ற ஜோதிட குருவும்,
சித்த வைத்தியர் எனில் அவரைப் புரிந்து கொள்ளும் சித்த வைத்திய குருவும்;
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு நேர்மையான குருவும் கிடைப்பார்கள்;

ரிஷப லக்னம்,துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் 3 ஆண்டுகள் தினமும் பாடினால், குருக்கிரகத்தால் வர இருக்கும் தீமைகள் 99% குறைந்துவிடும்;

சித்தர்களின் ஜீவசமாதி ஒன்றில் 3 ஆண்டுகள் பாடி வர மூன்றாம் ஆண்டின் முடிவில் அந்த சித்தரே குருவாக இருந்து வழிகாட்டுவார்;
திருச்செந்தூரில் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று போய் இதை 6 முறை வீதம் 12 முறை(ஒரு வருடம்) ஜபித்தால்,குருவாக திருச்செந்தூரனே வருவார்;
கழுகுமலை,திருப்பரங்குன்றம்,பழனிமலை,திருத்தணி,பழமுதிர் சோலைகளில் சஷ்டி திதி நாட்களில் 12 முறை(வளர்பிறை சஷ்டி) ஜபிக்க குமரக்கடவுளின் உபதேசம் கிட்டிடும்;
காசி மாநகரத்தில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,தகுந்த சிவனடியார் குருவாக அமைவார்;
அண்ணாமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,சிவ கணமே குருவாக அமைந்து சிவ வழிபாட்டில் அடுத்த நிலைக்கு வழிகாட்டும்;
இமயமலையில் இதை 1 ஆண்டு ஜபித்தால்,காகபுஜண்டரின் தரிசனம் கிட்டும்;அவரது யுக உபதேசம் கிட்டும்;
சிவபெருமானின் வடிவமான லிங்கத்தின் முன்பாக தினமும் ஒரு முறை வீதம் 12 ஆண்டுகள் ஜபித்தால் சிவ தரிசனமும்,சிவபெருமானே குருவாகவும் அமைவார்;


ஓம் கிலி அங் உங்
ஓம் அருணாச்சலாய நம
திருவான செல்வம் திரளான மக்கள்
   தினந்தந்து காத்த குருவே
மருவான மச்சம் மார்போடு வைத்த
   மகிழ்துளப மான குருவே
உருவான கல்வி உயர்ஞான வேள்வி
   உறைகின்ற தெய்வ குருவே
கருவான காலம் முதலாகக் காக்கும்
   கதியானாய் தேவர் குருவே!

அறியாமை பேசி அலையாதே என்று
    அறிஞானம் தந்த குருவே
செறியாமை யென்னும் செகமாயம் நீக்கி
    செழிப்பாக்கி வைத்த குருவே
முறியாமை யாலே முளைத்திட்ட பந்தம்
   முடிவாக்கி விட்ட குருவே
குறியாமை யான குணக்கேடு நீக்கி
    குளிரானாய் தேவர் குருவே!

மனவீடு மெழுகி மணத்தோடு வைத்தேன்
    மலர்ந்தனை மன்னர் குருவே
தனவீடு என்று தனிகரும் போற்ற
   தயவாகிச் செய்த குருவே
சினவீடு ஆன சிறுமனம் செயிக்க
   செப மாலை தந்த குருவே
வனவீடு மோன வளர்வீடு வாழும்
   வணிகனே வள்ளல் குருவே!

அண்ணலே என்றுனை அவிட்டமாம் நாளில்
   அழைத்திட அருளும் குருவே
மண்ணிலே தங்கமும் மயக்கிடும் வயிரமும்
   மகிழ்வோடு சேர்த்த குருவே
கண்ணிலே துயரமாம் கடு ஆறு வற்றிடக்
   கணமதில் கனிந்த குருவே
விண்ணுறைத் தேவரும் விருப்புடன் வாழ்த்திட
   விளங்கினாய் தேவ குருவே!

இருபத்தி ஏழெனும் எண்தரு யந்திரம்
  இயக்கிட இருந்த குருவே
திருபற்றி நின்றிடத் திங்களார் முழுமையில்
  திருபூசை சொன்ன குருவே
குருபத்தி கொள்ளாரின் குலம் விட்டு ஒடிடும்
  குருவான குருவின் குருவே
உருபத்தி ஞான உயர்பத்தி மோன
  உத்தமா தேவர் குருவே!
குரு போற்றி குரு போற்றி குலத்துறை குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவான தென் திசைக்
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே
குருபோற்றி குருபோற்றி குமரநல் குருபோற்றி
   குருபோற்றி குருபோற்றி குரு போற்றியே
குருபோற்றி குருபோற்றி குருவே எம் பிரகஸ்பதி
   குருபோற்றி குருபோற்றி குருபோற்றியே!!!






ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ்
ஓம் கருவூர் தேவாய நமஹ
ஓம் ராமலிங்க தேவாய நமஹ
ஓம் மகாதேவ சிவாய நமஹ
ஓம் இடியாப்ப சித்தசிவாய நமஹ
ஓம் வாத்தியார் ஐயா நமஹ
ஓம் முத்துவடுகநாதாய நமஹ




இராகு மஹாதிசை என்ன செய்யும்?


கலியுகம் என்றாலே துன்ப யுகம் தான்;(மூளையின் ரத்த அணுக்களில் இருந்து சூரியனும்,கண்கள் மற்றும் நிணநீரில் இருந்து சந்திரனும்,ரத்தத்தில் இருந்து செவ்வாயும்,எலும்பு மண்டலத்தில் இருந்து சனியும்,நரம்பு மண்டலத்தில் இருந்து புதனும்,இதயத்தில் இருந்து குருவும்,சுக்கிலத்தில் இருந்து சுக்கிரனும்,)ராகு நமது ஜனன உறுப்புக்களில் இருந்து நம்மை இயக்குகிறது;கலியுகத்தில் நம்மில் பலருக்கு 100 பேர்களில் 85 பேர்களுக்கு ராகு மஹாதிசையோ அல்லது ராகு சாரதிசையோ அல்லது ராகுவுடன் சேர்ந்திருக்கும் மஹாதிசைகளில் ஒன்றோ நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;


எல்லோருக்கும் ராகு காலம் விஷகாலம்! எந்த ஒரு சுபகாரியத்தையும் ராகு காலத்தில் துவக்க மாட்டார்கள்;ஆனால்,ராகு திசை நடப்பில் உள்ளவர்கள்,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரங்களில் ஒன்றில்(லக்னமாக இருந்தாலும்,லக்னாதிபதி இந்த நட்சத்திரங்களில் நின்றாலும்) பிறந்தவர்களுக்கு ராகு காலமே யோககாலம்;ராகு காலத்தில் துவக்கப்படும் எந்த ஒரு முக்கியகாரியமாக இருந்தாலும் சரி;எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் சரி;வெற்றியைத் தரும்;


ஆங்கில மருந்துகள்,மல்டி லெவல் மார்கெட்டிங்,கமிஷன் கிடைக்கும் தொழில்கள்,விதவை,மனைவியைப் பிரிந்து வாழும் கணவன்,மனைவியை இழந்து வாழும் கணவன்,செயற்கைக்கொள்,விமானம்,செல்போன்,குறுந்தகவல்,
வாட்ஸ் அப்,முகனூல்,டுவிட்டர்,சாட் ரூம்,முறையற்ற உறவு,பொருந்தாத உறவு போன்றவை அனைத்தும் ராகுவின் கட்டுப்பாட்டில் வருகின்றன;


ராகுமஹாதிசை ஒருவருக்கு இப்பிறவியில் நிகழ்கிறது எனில்,அவர் முற்பிறவிகளில் பாம்புக்கு கெடுதி செய்துள்ளார் என்றுதான் அர்த்தம்;லக்னம் மற்றும் 7 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்று திசை நடத்தினால்,அவர் முற்பிறவிகளில் பாம்புகளில் ஜோடியாக வாழ்ந்தவைகளில் ஒன்றை மட்டும் கொன்றிருக்கிறார் என்று அர்த்தம்;


லக்னத்திற்கு 2 மற்றும் 8 ஆம் இடங்களில் ராகு,கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறப்புகளில் ஜோடியாக வாழ்ந்துவந்த பாம்புகளின் புற்றினை இடித்துத் தரைமட்டமாக்கியவர் என்று அர்த்தம்;


லக்னத்திற்கு 3 மற்றும் 9 ஆம் இடங்களில் ராகு,கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறப்புகளில் வயதான நாகங்கள் மற்றும் நாகக் குஞ்சுகளைக் கொன்றிருக்கிறார் என்பதையே தெரிவிக்கிறது;இதனால்,இவர் பித்ரு தோஷத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்று அர்த்தம்;இத்துடன் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்தால் பாம்புப் பிடிப்பவராக இருந்து,பாம்புகள் வசிப்பிடத்தை தகர்த்தவர் என்று அர்த்தம் கொள்க;

லக்னத்திற்கு 4 மற்றும் 10 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறவிகளில் நாகங்கள் இரைதேட வரும்போது அவைகளை முடமாக்கவோ அல்லது கொல்லவோ செய்தவர் என்று அர்த்தம்.ஜோதிடவிதிப்படி,10 இல் ஒரு பாவியாவது நின்று திசை நடத்தினால் அவன் கோடீஸ்வரன் ஆவான்;ஆனால்,நேர்மையற்ற மற்றும் இழிவான வழிமுறைகளில் ஆக வைக்கும் என்பதை ஜோதிடர்கள் தான் சூழ்நிலை அறிந்து தெரிவிக்கவேண்டும்;இவ்விடங்களில் குரு பார்க்க,ராகு மஹாதிசை நடைபெற்றால்,செய்த தவறுகள் மற்றும் நாகங்களுக்குக் கெடுதி செய்தததை முற்பிறவியிலேயே உணர்ந்து,மனம் திருந்தி வாழவே இப்பிறவி எடுத்துள்ளார் என்று அர்த்தமாகும்;


லக்னத்துக்கு 5 மற்றும் 11 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் நின்று திசை நடத்தினால்,பிறர் மனத்தைப் படிக்கும் ஆற்றலுடன் பிறந்தவர் என்று அர்த்தம்;அதேசமயம்,முற்பிறவிகளில் நாகங்களை குடும்பத்துடன் அழித்தவர் என்று அர்த்தம்;கடுமையான பித்ரு தோஷத்துடன் வாழ்ந்து வருபவர்;பிறருக்கு உதவி செய்து,தனது முன்னேற்றத்திற்கு வழிதெரியாமல் திண்டாடுபவர் என்றும் அர்த்தமாகும்;


லக்னத்துக்கு 6 மற்றும் 12 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் நின்று திசை நடத்தினால்,முற்பிறவிகளில் நாகங்களுக்கு நன்மை செய்தவர் என்று அர்த்தம்;இது மட்டுமே சர்ப்பத்தால் தோஷமடையாத ஜாதகர் என்று அர்த்தம்;உங்கள் ஜாதகத்தின்படி ராகு மஹாதிசையின் பலனை அறிய எமது வாட்ஸ் அப் 9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை கேட்கலாம்;(செல் எண்:9629439499) வீட்டில் இருந்தே கற்றுக் கொள்ள இதே எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி,அதன் கீழே Like to Learn Astrology என்று அனுப்புங்கள்;

ராகு மஹாதிசை நிகழும் போது,மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையை ராகு பகவான் தூண்டிவிடுவார்;அதில் இருந்து மீள,அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்து,தினமும் ஓம் வராகி சிவசக்தி ஒம் என்ற மந்திரத்தை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்து வருவது அவசியம்;பிரபஞ்ச அன்னை வராகியின் அருள் கிடைத்துவிட்டால் எந்த ஒரு நவக்கிரகத்தின் தீய பாதிப்பு நம்மை நெருங்காது;

ராகு மஹாதிசைக்குப் பிறகு குரு மஹாதிசையும்,கேது மஹாதிசைக்குப் பிறகு சுக்கிரமஹாதிசையும் வருவதைப் போல காலமானது நிர்ணயம் செய்திருக்கின்றது;இதை உணர்ந்தவர்கள் பிறப்பின் ரகசியம்,இறைசக்தியின் ரகசியம்,தமது வாழ்க்கையின் ரகசியத்தை தாமே கண்டுபிடித்துவிடுவார்கள்:

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் போற்றி! போற்றி!! போற்றி!!!


ஓம் வராகி சிவசக்தி ஒம்