Saturday, May 4, 2013

நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டி




இந்து தர்மத்தின் புராதன போர்க்கலைகளில் ஒன்று வர்மக்கலை ஆகும்.இதன் மருத்துவசிகிச்சைப் பிரிவே இன்றைய நியூரோதெரபி ஆகும்.மும்பையில் டாக்டர் லஜ்பதிராய் மெஹ்ரா  என்பவரால் இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டு,தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் நியூரோதெரபிஸ்டுகள் மருத்துவச் சேவையாற்றிவருகின்றனர்.

எந்த ஒரு மருந்தும் இல்லாமலேயே நமது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அதிசயத்தை நேரில் உணரும்போது ஆச்சரியமும்,மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியும் அடைகிறோம்.நமது உணவுப்பழக்கத்தை டிவி விளம்பரங்கள் மூலமாக மேல்நாட்டினர் மாற்றிவிட்டதால்,இன்று நோயாளி சமுதாயமாக மாறிவருகிறோம்;இதை மேல்நாட்டினரின் கலாச்சாரத் தாக்குதல் என்று மட்டும் எண்ணாமல்,நமது இந்து தர்மத்தின் மீதான சர்வதேச கிறிஸ்தவ தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே இனி நம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் நமது சுய அக்கறையால் பாதுகாத்திட முடியும்.எப்படி நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதை நமக்கு விவரிக்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த்,நியூரோதெரபிஸ்ட்,திருச்சி.

சுமார் 12 ஆண்டுகளாக நியூரோதெரபிஸ்ட் சிகிச்சையை அளித்து வருகிறார்.இவரது மருந்தில்லாத சிகிச்சையால் குணமடைந்தவர்கள் ஏராளம்;பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப்பின்னர்,அறுவை சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது;இவரிடம் சிகிச்சை எடுத்தப்பின்னர்,இவர் சொல்லும் மருத்துவ ஆலோசனையை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்.அப்படி பின்பற்றினால் மட்டுமே மீண்டும் அதே நோய் நம்மை தாக்காது;முன் அனுமதி பெற இவரது செல் எண்:9894487122(காலை 9 மணி முதல் இரவு எட்டு மணி வரை);இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப் பின்னர் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மின் அஞ்சலிலும் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.இவரது மின் அஞ்சல்:neurovijay@gmail.com  மருத்துவக் கட்டணம் மிக மிகக் குறைவு:
பின் குறிப்பு:உங்களின் மருத்துவ ஆலோசனையை போனில் முழுமையாக கேட்க வேண்டாம்;முன் அனுமதி பெற்று,உங்களது மருத்துவ ஆவணங்களை எடுத்துச் சென்று நேரில் ஆலோசனை கேட்கவும்;அதுவே உங்களுக்குச் சிறந்தது.இவரது பேச்சினை நமது யூட்யூப் சேனலில் பார்க்கலாம்;இந்த இணைப்பில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார்.
ஓம்சிவசிவஓம்

மீண்டும் நிம்மதியிழக்கும் பூமி!!!








10.4.2013 முதல் 21.5.2013 வரையிலும்,19.8.2013 முதல் 8.10.2013 வரையிலும் செவ்வாயும்,சனியும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு பூமி மற்ரும் இந்தியாவின் பிறந்த ராசியான கடகராசியைப் பார்க்கப் போகின்றன;நம் அனைவரின் மனதுக்கும் அதிபதியான சந்திரனின் ராசியும் கடகமே என்பதை இந்த கணத்தில் நினைவில் கொள்வது நல்லது;எனவே, 16.12.2014 வரை தினமும் ஏதாவது ஒரு வழிபாடு செய்யாவிடில்,நாம் நமது மனது,நமது ஆத்மா மூன்றுமே தடுமாறி நமது வாழ்க்கையில் இந்த நாட்களில் எதிர்பாராத குழப்பங்கள்,சண்டைச் சச்சரவுகள் ஏற்பட இருக்கிறது;இதனால்,கடகராசி,தனுசுராசி மட்டுமல்ல;அனைத்து ராசியினரும் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள்.




அடுத்து வர இருக்கும் இந்த யுத்தக் கிரகங்களின்பார்வையால் நமது பூமியானது சிலபல மாற்றங்களை சந்திக்க இருக்கிறது;கடல் பரப்பு அதிகரித்து,நிலப்பரப்பு சுருங்கப் போகிறது.இதை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக இதன் கோரத்தை குறைக்க நாம் ஒவ்வொருவரும் பின்வரும் ஏதாவது ஒன்றை தினமும் பின்பற்றுவோம்;நம்மை நவக்கிரகங்களின் பாதிப்பிலிருந்தும் உலக அழிவிருந்தும் பாதுகாப்போம்;

தினமும் ஒருமணிநேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;


தினமும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்தல் அல்லது ஓம்சிவசிவஓம் ஜபித்தல்;

தினமும் 131 சித்தர்கள் மந்திரங்கள் ஜபித்தல்;

இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் விடாமல் தினமும் பின்பற்றிவந்தால்,சிக்கல்கள் நிறைந்த நமது காலத்தில் நமது தினசரி வாழ்க்கை எந்த ஒருகுறையுமின்றி சீராகும்;

ஓம்சிவசிவஓம்

Thursday, May 2, 2013

பாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி


உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகும் ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.
இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது.

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.

10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை. 

வேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்!!!


தமிழகத்தின், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
ஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.
முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது.
இன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.
இதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் .

Saturday, April 27, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(2.5.13வியாழன்) வழிபாடு!!!






நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;


கடந்த  மூன்று ஆண்டுகளாக ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த ஆராய்ச்சியை  செய்து,கிடைத்த அற்புத முடிவு இது;இந்த ஆராய்ச்சியில் இருபது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சிக்க்கு ஒத்துழைப்புக் கொடுத்து,தமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை உணர்ந்து பகிர்ந்து கொண்டனர்.


பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)                             28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.


சித்திரை மாதத்து தேய்பிறை அஷ்டமி 2.5.13 வியாழக்கிழமை காலை பத்து மணி இருபத்தைந்து நிமிடத்தில் இருந்து துவங்கி, 3.5.13 வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி இருபத்தெட்டு நிமிடம் வரை அமைந்திருக்கிறது.வியாழக்கிழமை இராகு காலம் மதியம் ஒன்றரை மணியில் இருந்து மூன்று மணி வரை வருகிறது.எனவே,உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.


ஓம் சிவசிவ ஓம்

Thursday, April 25, 2013

சித்ராபவுர்ணமி+கிரகணநாளில் பைரவ சஷ்டி கவசம் எழுதுவோம்!!!







விஜய வருடத்தின் முதல் பவுர்ணமியானது  25.4.13 அன்று ஆரம்பித்து மறுநாள் 26.4.13 வரை இருக்கிறது.பவுர்ணமியோடு சேர்ந்து கிரகணமும் வருவதால்,இந்த பவுர்ணமியானது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.ஆமாம்! மேஷ ராசியில் ஆத்மக்காரனாகிய சூரியன்,ஞானக் காரனாகிய கேதுவுடன் சேர.மனக்காரனாகிய சந்திரன்,ராகுவுடன் துலாம் ராசியில் சேருகிறது.ஆண்டுக்கு ஒருமுறையே இவ்வாறு கிரகணம் அமையும்.இந்த நன்னாளில் இன்னொரு சூட்சுமரகசியம் அமைவது என்னவெனில்,சூரியனும் கேதுவும் ஸ்ரீகால பைரவரின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் சேர்ந்து இந்த கிரகணத்தை தோற்றுவிப்பதால்,இந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவேளை இந்த கிரகண நாளை விட்டு விட்டால் மீண்டும் இதே கிரகணம் உருவாக பதினெட்டு ஆண்டுகள் தான் ஆகும்.



கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களின் விளைவாக நாம் இப்போதைய வசதிகளை அனுபவிக்கிறோம்;செல்வாக்குடன் இருக்கிறோம்;நமது ரேஞ்சுக்கு புகழுடன் வாழ்ந்துவருகிறோம்;அதே போல ,கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த தீயச் செயல்களின் விளைவாக இந்தப் பிறவியில் கடன்கள் அல்லது நோய் அல்லது அவமானம் அல்லது புறக்கணிப்பு அல்லது மனவேதனைகள் அல்லது இவைகள் அனைத்தையும் அனுபவித்தும் வருகிறோம்.இந்த இரண்டும் நாடாளும் மன்னனாக இருந்தாலும் சரி,வீட்டிலேயே மரியாதை இல்லாத பெண்ணாக (ஆணாக) இருந்தாலும் சரி=அனைவருக்கும் பொதுவாகவே அமைந்திருக்கிறது.இதில் நமது தீயச் செயல்களின் விளைவுகளைத் தாங்க முடியாமல் ஏதேதோ வழிபாடு,பரிகாரம் செய்து வருகிறோம்.இதைச் செய்தாலாவது நாம் நிம்மதியை அடைய மாட்டோமா? என்று ஏங்குகிறோம்.

அந்த ஏக்கத்தை நீக்கிட ஒரு அரியவாய்ப்பு இன்றும்(25.4.13),நாளையும்(26.4.13) ஏற்பட்டிருக்கிறது.நாம் செய்ய வேண்டியது இதுதான்:

நமது ஆன்மீகக்கடலில் பிப்ரவரி மாதம் 2013 இல் வெளியிடப்பட்டிருக்கும் பைரவ சஷ்டி கவசத்தை இந்த இருநாட்களில் எழுதி முடிப்பது மட்டுமே!

எங்கே எழுதுவது?

வசதி உள்ளவர்கள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் எழுதலாம்.அது முடியாதவர்கள் அவரவர் வீட்டிலேயே எழுதலாம்;கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களில் அனைவருமே எழுதலாம்.ஒரே நிபந்தனை:=இரண்டே நாட்களில் பைரவ சஷ்டி கவசத்தையும் எழுதி முடித்துவிட வேண்டும்.



சரி! எப்போது இந்த இரண்டு நாட்களில் எழுத வேண்டும்?

இந்த இரண்டு நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எழுத ஆரம்பிக்கலாம்;எப்போது வேண்டுமானாலும் எழுதி முடிக்கலாம்;

சரி! எதில் எழுதுவது?

நோட்டு புத்தகத்தில் எழுதலாம்;வெள்ளைக் காகிதத்தில் எழுதலாம்;கணினியில் டைப் செய்யக் கூடாது;


எப்படி எழுதுவது?

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதும்,எழுதி முடிப்பதும் அவசியம்.

எழுதி முடித்துவிட்டு என்ன செய்ய?

எழுதி முடித்ததை பத்திரப்படுத்தி வைக்கவும்:அடுத்தபடியாக 9.5.13 வியாழக்கிழமை அன்று சித்திரை மாதத்து அமாவாசை வருகிறது.இந்த அமாவாசையானது ஸ்ரீகால பைரவப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான பரணியில் வருகிறது. அன்று ஸ்ரீகாலபைரவரின் 1008 போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் 1008 போற்றியை இத்துடன் சேர்த்தே எழுதி வைக்கவும்.


மேலும்

உங்கள் மகன்/ள் பள்ளிப் படிப்பு/பாலிடெக்னிக்/கல்லூரி படித்துக் கொண்டிருப்பவரா?இந்தியாவில் ஆண்டுவிடுமுறைக் காலம் துவங்கியிருக்கிறது.எனவே,உங்கள் மகன்/ளை  பின்வரும் ஸ்ரீகால பைரவ மந்திரத்தை தினமும் நூற்றிஎட்டுமுறை எழுதச் சொல்லலாம்;மீண்டும் பள்ளி/கல்லூரி திறக்கும் வரையிலும் தினமும் எழுதச் சொல்லலாம்;
தாங்கள் எழுதியவைகளை தங்களின் வீட்டுப்பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் பத்திரமாக வைக்கவும்.தாங்கள் மனப்பூர்வமாக எழுதியது எப்படி உங்களுக்கு பாதுகாவலாக,வழிநடத்தும் பைரவ சக்தியாகச் செயல்படுகிறது என்பதை உணர்வீர்கள்.
இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்டகாலப் பிரச்னைகள் தீரத்துவங்கும்;


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

முக்கியமான விஷயம் இவைகளில் எதை எழுதத் துவங்கினாலும்,எழுதுபவர் அசைவம் சாப்பிடக் கூடாது;எச்சரிக்கை!!!


 ஓம்சிவசிவஓம்

Tuesday, April 23, 2013

நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடமைகள் பகுதி 5




அதிகரிக்கும் விலைவாசி,அதற்கு இணையாக உயராத சம்பளம் இவைகளாலும்,பொதுமக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு,அதன் கொள்கைகள் போன்றவைகளால் இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது;அதுவும் கடந்த எட்டு ஆண்டுகளில் இன்னும் படுமோசமாகிவிட்டது.இதனால்,குடும்பத்தில் அன்பு,பாசம் போன்றவைகளின் இடத்தினை பணம் கைப்பற்றிவிட்டது;இதன் விளைவாக,பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.இந்த சூழ்நிலையால் குடும்ப உறவுகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மாதா,பிதா,குரு,தெய்வம் என்ற வரிசைக்கு உரிய மாண்புகளைப் பெரும்பாலானவர்களால் பின்பற்ற இயலவில்லை;பெற்ற தாய்,தந்தையரை ஒரு போதும் நோகடிக்கக்கூடாது;அவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது;அவர்கள் ஒரு போதும் நம்மால் அழக்கூடாது என்றெல்லாம் நமது தமிழ்ப் பண்பாடு தெரிவிக்கிறது.இதுவே பின்னாளில் இந்து தர்மமாக பரிணமித்து ஆசிய நாடுகள் முழுவதும் பரவியது;இந்த கோட்பாடுகளைச் சிதைக்கும் விதமாக இந்தியாவில் உலகமயமாக்கலும்,அமெரிக்க மயமாக்கலும் திணிக்கப்பட்டுவருகின்றன.இதனால்,பெரும்பாலான பெற்றோர்களுக்கு தனது மகன் அல்லது மகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்ய முடியாத நிலை பெரும்பாலான குடும்பங்களில் உருவாகிவிட்டன;டீன் ஏஜ் வயதிலேயே தனக்குத் தேவையான படிப்பைப் படிக்கவும்,தனது தினசரிச் செலவுகளைச் சமாளிக்கவும் பகுதி நேர வேலைக்குச் செல்லும் இளைஞர்கள்,இளம்பெண்கள் எண்னிக்கை பல மடங்கு பெருகிவிட்டன என்பது பெருமைக்குரிய விஷயம். அவர்கள் தனது இருபத்தைந்து முதல் முப்பது வயதுக்குள் பொருளாதாரத் தன்னிறைவை எட்டும் விதமாக வேலை அல்லது தொழிலில் இறங்கி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்;இந்த சமயத்தில்,சாதிக்கும் தனது மகன்/ளை நினைத்துப் பெருமைப் படும் பெற்றோர்களை விடவும் அவர்களிடம் இருந்து எப்படியெல்லாம் பணம் பறிக்கலாம்? என்று திட்டமிட்டு ஏமாற்றும் பெற்றோர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தமது பெற்றோர் தம் மீது வைத்திருப்பது பாசம் அல்ல;வெறும் வேஷம் என்பதை அறியும் போது தமது பெற்றோர்களுக்கு தருவதை முழுமையாக நிறுத்திவிடுகின்றனர்.இப்போது பெற்றோர்கள் தமது மகன்/ளை போனிலும்,நேரிலும்(சிலர் அலுவலகத்துக்கு வந்தும் கூட) சாபமிடுகின்றனர்.
தமது மகன்/ள் படிக்கும் காலத்தில் ஒரு சிறு உதவியும் செய்யாமல் இருந்து இப்போது சாபமிடும் பெற்றோர்களின் சாபம்/வேதனை அவர்களின் மகன்/ளுக்கு பலிதமாகுமா? ஒரு போதும் ஆகாது.
யார் தன்னையே தியாகம் செய்து தனது மகன்/ளின் படிப்புக்கும்,திருமணத்திற்கும் அக்கறை எடுத்து அவர்களின் குடும்பத்தை நிலைநிறுத்தும் வரையிலும் பொறுப்பாக இருக்கிறார்களோ, அவர்களின் சாபம் மட்டுமே அவர்கள் பெற்று வளர்த்த மகன்/ளைப் பாதிக்கும் விதமாக பலிக்கும்;
8888888888888888888888888888888888888888888888888888888888

தனிப்பட்ட தியானத்தை விடவும் கூட்டு தியானம் மிக விரைவான பலன்களைத் தரும்;ஓம்சிவசிவஓம் ஜபித்தாலும்,பைரவ மந்திரம் ஜபித்தாலும் தனியாகத் தான் நாம் நமது வீடு அல்லது தங்குமிடத்தில் ஜபித்து வருகிறோம்.அடிக்கடி நாம் ஜீவசமாதி இருப்பிடம் அல்லது கோவில்களில் பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம்.அப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகிறார்கள்.அவ்வாறு வரும்போது கூட்டாக ஜபிக்கும்போது அவர்களில் பலருக்கு அடுத்த சில நாட்களிலேயே  நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறிவிடுகின்றன;இதை பலமுறை நமது வாசகர்கள் நேரிலும்,மின் அஞ்சலிலும் தெரிவித்திருக்கின்றனர்;
குறைந்தது மூன்று பேர்கள்,ஐந்து பேர்கள் அல்லது மூன்று தம்பதியர்,ஐந்து தம்பதியர் நாம் அடிக்கடி தெரிவிக்கும் ஜீவசமாதி அல்லது நமது ஊரில் இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அமாவாசை அல்லது பவுர்ணமி அன்று பகலில் அல்லது மாலையில் அல்லது இரவில் ஒரு மணி நேரம் வரை கூட்டாக ஜபிக்கலாம்;அவ்வாறு மூன்று பேர்/மூன்று தம்பதியினர் ஜபிக்கும்போது அனைவரும் ஓம்சிவசிவஓம் மட்டும் அல்லது ஏதாவது ஒரு பைரவர் மந்திரம் மட்டுமே ஜபிக்க வேண்டும்.
அந்த மூன்று பேர்கள்/மூன்று தம்பதியரின் கோரிக்கைகள் மற்றும் நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரின் கோரிக்கைகளும் விரைவாக நிறைவேறும் என்பதை உணரலாம்.
இவ்வாறு கூட்டாக தியானம் செய்யும் போது அனைவரும் அணிய வேண்டிய ஆடையின் நிறம் மஞ்சள்.
இவ்வாறு ஒருமுறை செய்து பாருங்கள்! பலன் என்ன என்பதை எமக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கவும்.
22222222222222222222222222222222222222222222222222222222
எத்தனையோ மந்திரங்களை நாம் ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறோம்.அத்தனை மந்திரங்களையும் ஒருவரே ஜபிக்கக்கூடாது;அது மாபெரும் தவறு. பஞ்சபூத தத்துவப்படி,மனிதர்கள் ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.சிலர் மண் தத்துவத்தில் பிறந்தவர்கள்! இவர்கள் பொறுமையின் சிகரமாக இருப்பர்;சிலர் நீர் தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர் எதையும் கிரகிக்கும் தன்மையோடு இருப்பர்;சிலர் நெருப்பு தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர்கள் மார்கெட்டிங்,அரசியல்,காவல் துறையில் சிறப்புப் பிரிவுகளில் இருப்பர்;சிலர் காற்று தத்துவத்தில் பிறந்தவர்களாக இருப்பர்;இவர்கள் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பதிலும்,அதை கிரகிப்பதிலும் காற்றைப் போலச் செயல்படுவர்;சிலர் ஆகாய தத்துவத்தில் இருப்பர்;இவர்களிடம் மேலே கூறிய நான்கு தத்துவமும் இருக்கும்.
எனவே,ஆன்மீகக்கடலில் வெளிவரும் மந்திரங்கள்,அது தொடர்பான பதிவுகளை நீங்கள் முதன்முதலில் வாசிக்கும் போது ஏதாவது ஒரு மந்திரம் ஈர்க்கும்.அதை மட்டும் தொடர்ந்து ஜபித்து வருவது நன்று.அந்த மந்திரத்தை குறைந்தது ஒரு ஆண்டு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையிலும் ஜபித்துவந்தால் உங்களின் ஆன்மீக வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிவிடுவீர்கள்;
9999999999999999999999999999999999999999999999999999999
எளிமையை விரும்புவோர்,ஏழரைச்சனியை எதிர்கொள்ளத் தயாராவோர்,வசதி வாய்ப்புகளுக்கு மயங்காமல் இருந்திட விரும்புவோர் எளிய அதே சமயம் கடினமான படுக்கையில் தூங்கப் பழக வேண்டும்;தலையணையைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.இதன் மூலமாக உடல் வலி ஒருபோதும் வராது.ஆனால்,வெறும் தரையில்(அது மொசைக் அல்லது கிரானைட் அல்லது பளபளப்பான எந்த ஒரு தரையாக இருந்தாலும்) ஒரு போதும் தூங்கக் கூடாது.
11111111111111111111111111111111111111111111111111111111
இந்தியாவில் பள்ளி ஆண்டுத்தேர்வுகள் நிறைவடைந்துவருகின்றன;அடுத்த வாரங்களில் பாலிடெக்னிக்,கல்லூரி ஆண்டுத் தேர்வுகளும் நிறைவடைந்துவிடும்.ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்வதை இந்த வருடம் தவிர்த்துவிட்டு,உங்கள் குழந்தைகளோடு அட்ட வீரட்டானங்களுக்கு சுற்றுலா சென்று வருவது நல்லது.செல்லும் போது அட்டவீரட்டானங்களின் வரலாற்றை நமது ஆன்மீகக்கடலில் வாசித்துவிட்டு,அங்கே செல்லவும்.அவ்வாறு சென்றால்,அதன் பழமையை நினைத்து பிரமித்துப் போய்விடுவீர்கள்:அங்கே சென்ற பிறகு,உங்கள் குழந்தைகளுக்கு அந்தக் கோவிலின் பெருமைகளைச் சொல்லவும்.முடிந்தால் அங்கே ஸ்ரீகால பைரவர்நூற்றிஎட்டு எழுதச் சொல்லவும்.முடிந்தால் நீங்கள் அங்கே சென்று ஸ்ரீகால பைரவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நூற்றி எட்டு முறை அல்லது ஆயிரத்து எட்டுமுறை எழுதவும்.ஜபிக்கவும் செய்யலாம்.
சில குடும்பங்களால் கோடை விடுமுறைக்கு எங்கும் செல்லமுடியாத சூழ்நிலை இருக்கலாம்;அவ்வாறு இருக்கும்போது அவரவர் குழந்தையை ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டை தினமும் எழுதச் சொல்லலாம்.வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை ஸ்ரீகால பைரவர் சன்னதி முன்பாக அமர்ந்து எழுத வைக்கலாம்;தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் உங்கள் ஊரில் இருந்து நூறு ரூபாய் பேருந்து/ரயில் கட்டணத்தில் பயணித்துச் சென்றால் வரும் பழமையான சிவாலயத்துக்கு குடும்பத்துடன் செல்லவும்.அங்கே உங்கள் குழந்தையையும் அழைத்துச் சென்று அந்த சிவாலயத்தின் வரலாற்றை(கோவில் ஸ்தல வரலாறு வாங்கி) விவரிக்கலாம்;அங்கே மாலை நேரத்தில் அல்லது உங்களுக்கு வசதியான நேரத்தில் ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றியை எழுத வைக்கலாம்;கூடவே நீங்களும் உங்கள் குழந்தையோடு சேர்ந்து ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் நூற்றி எட்டு போற்றியை எழுத வேண்டும்.இது மிகவும் பூர்வபுண்ணியம் மிக்க செயல் ஆகும்.கோடை விடுமுறை நிறைவடைந்ததும்,இவ்வாறு எழுதப்பட்டவைகளை எமக்கு அனுப்பி வைக்கலாம்.
5555555555555555555555555555555555555555555555555555555555
ஓரளவு குரல் வளம் உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ இருந்தால் ஸ்ரீகால பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் நூற்றி எட்டு போற்றி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆயிரத்து எட்டு போற்றியை பாடச் சொல்லி உங்கள் செல்போனில் அல்லது கணினியில் பதிவு செய்யவும்.பதிவு செய்த பின்னர்,தினமும் காலையில் அவைகளை ஒலிக்கச் செய்யவும்.இதன் மூலமாக நீங்கள் பாடிய இந்த பாடல்களை நீங்களே கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்;தினமும் கேட்க,கேட்க உங்கள் ஆழ்மனதில் பைரவரைப் பற்றிய பாடல் பதிவாகிவிடும்.உங்கள் வீட்டில் பைரவரைப் பற்றிய எண்ணங்கள் பரவி நிலைத்து நிற்கும்.இதன் மூலமாக உங்கள் குடும்பத்தில் எந்த எதிர்மறை சக்தியும் நுழையக் கூட முடியாது.செய்வோமா?
00000000000000000000000000000000000000000000000000000000
ஓரளவு எடிட்டிங் வசதி உடையவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் அல்லது அம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் இந்த நூற்றி எட்டு ஆயிரத்து எட்டு போற்றிகளை நீங்களே(அல்லது உங்கள் குழந்தைகள்) பாடுவது போல கேமிரா செல்போனில்/டிஜிட்டல் கேமிராவில் பதிவு செய்து  வைத்துக் கொள்ளலாம்.தினமும் அதை உங்கள் கணினி/டிவியில் ஒளிபரப்பவும் செய்யலாம்.இதுவும் பைரவரின் அருளைப் பெறும் ஒரு டெக்னிக் ஆகும்.
இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதாக இருந்தால்,அட்டவீரட்டானங்களுக்குப் பயணித்து அங்கே ஸ்ரீகால பைரவர் முன்பாகப் பாடுவது போல ஆடியோவாகவோ வீடியோவாகவோ பதிவு செய்யலாம்.அட்டவீரட்டானங்களில் திருக்கோவிலூர்,திருவதிகை,திருக்கடையூர்,திருக்கண்டியூர் எப்போதும் ஜன நடமாட்டம் அதிகமுள்ளவை;மற்றவைகளில் அவ்வளவாக ஆட்கள் வருவது இல்லை;
1.திருக்கோயிலூர்=விழுப்புரத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது
2.திருவதிகை=பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில்
3.திருக்கண்டியூர்=தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் எட்டாவது கி.மீ.தூரத்தில் சாலையோரத்தில்
4.வழுவூர்=மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் ஒன்பதாவது கி.மீ.தூரம் சென்று அங்கிருந்து சாலையிலிருந்து மூன்று கி.மீ.தூரம் கிராமத்துப் பாதையில் பயணிக்க வேண்டும்.
5.திருப்பரசலூர்=மயிலாடுதுறையில் இருந்து பரசலூர் சென்று விசாரிக்கவும்.ஆட்டோ/டாக்ஸியில் பயணிக்க வேண்டும்.
6.திருக்கடையூர்
7.திருவிற்குடி=திருவாரூரில் இருந்து நாகூர் செல்லும் வழியில் யூ வடிவச் சாலையைக் கடந்ததும்,கிராமத்துச் சாலைக்குள் நுழைய வேண்டும்.சில கி.மீ தூரத்தில் ஒரு பாலம் வரும்.அந்த பாலத்தின் வழியே சென்றால் ஒரு கிராமம் வரும்.
8.குறுக்கை=மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில்
எனவே,உங்களுக்கு வசதியான வீரட்டானங்களுக்குப் பயணித்தும் செய்யலாம்.இதன் மூலமாக ஸ்ரீபைரவருடைய ஆசி வெகு விரைவில் கிட்டும்.
3333333333333333333333333333333333333333333333333333333333
உங்கள் குழந்தை நன்றாக படிக்கவில்லை;அடிக்கடி ஞாபகமறதி ஏற்படுகிறதா? கவலை வேண்டாம்.இந்த கோடைவிடுமுறையில் தொடர்ந்து ஆறு புதன் கிழமைகள் திருகண்டியூர் சென்று அங்கே இருக்கும் பிரம்மா சரஸ்வதிக்கு தேனால் அபிஷேகம் செய்யவும்.பட்டரிடம் சொல்லி அபிஷேகம் செய்யப்பட்ட தேனை சேகரித்து வீட்டுக்குக் கொண்டு வரவும்.படிப்பு மந்தமாக இருக்கும் உங்கள் மகன்/ளுக்குத் தரவும்.இந்த ஆறு புதன்கிழமைகளுக்கு அபிஷேகம் செய்யச் செல்லும் போது உங்கள் மகன்/ளையும் கண்டிப்பாக அழைத்துச் செல்லவும்.உங்கள் வீட்டிலிருந்து திருக்கண்டியூர்,திருக்கண்டியூரிலிருந்து வீடு என்றவிதமாக பயணத்திட்டம் வகுத்துக் கொள்ளவும்.திருக்கண்டியூரில் தங்கும் வசதிகள் இல்லை;வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் தஞ்சாவூரில் தங்கிக்கொள்ளவும்.
6666666666666666666666666666666666666666666666666666666666
கல்லூரியின் இறுதியாண்டு படிப்பு முடிப்பவர்கள் அல்லது அதற்கு முந்தைய வருடப் படிப்பு முடிப்பவர்களா உங்கள் குழந்தைகள்? நீங்கள் இந்த கோடையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் எட்டை உங்கள் மகன்/ள் தரிசிக்க வைக்க வேண்டியதுதான்.இதன் மூலமாக சிறந்த வேலை அவனு/ளுக்கு கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை;
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை(தற்போது இங்கே வழிபாடு நிறுத்தப்பட்டிருக்கிறது)

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                            28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.

29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இவைகளில் அண்ணாமலை காகா ஆஸ்ரமம்,திண்டுக்கல் தாடிக்கொம்பு,ஜெயதுர்காபீடம்,பொன்பேத்தி,இலுப்பைக்குடி,           வயிரவன்பட்டி,சிதம்பரம்,அழிபடைதாங்கி,அண்ணாமலையின் உட்பிரகாரம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆவர்.மற்ற இடங்களைப் பற்றி இன்னும் நேரில் சென்று மதிப்பிடவில்லை;பவுர்ணமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடத்துவங்கி,தேய்பிறை அஷ்டமியன்று எட்டாவது ஆலயத்தில் வழிபடுவது நன்று.இந்த வழிபாடு கல்லூரி/பாலிடெக்னிக் படிப்பை முடிக்க இருப்பவர்களுக்கு  மட்டுமே பொருந்தும்.
777777777777777777777777777777777777777777777777777777777
ஓம்சிவசிவஓம்