Monday, January 30, 2012

கணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்ற வேண்டியவை


தம்பதியர் இருவரும் வேலைக்குப் போகும் இன்றைய கால கட்டத்தில் இருவரும் இணைந்து இருக்கும் நேரங்கள் குறைவு. அந்த சில மணி நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டிற்குள் என்னதான் தம்பதியர் மனமொத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதல் அரிதாகிவருகிறது! அவர்களின் புரிதலின்மையினால் சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விரிசல் உருவாகின்றன. இதற்கு காரணம் சரியான முறையில் அன்பை வெளிப்படுத்தாததுதான் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இல்லத்தரசிகள் சின்னச்சின்ன வழிகளை கையாண்டு கணவரிடம் அன்பை வெளிப்படுத்தினாலே வாழ்க்கை வசந்தமாகும் என்கின்றனர் அவர்கள். இருவரிடையே பிணைப்பை அதிகரிக்கும், உற்சாக ஐடியாக்களை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள். மகாராஜாவைப் போல மதியுங்கள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் நமக்கான மதிப்பும், மரியாதையும் கிடைக்கவேண்டும் என்பது சராசரி மனித மனத்தின் எதிர்பார்ப்பு. அதிலும் இல்லத்தரசியிடம் கிடைக்கும் மதிப்புதான் கணவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அவார்டு. எனவே கணவரை மகாராஜா போல் நடத்துங்கள். 

வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும். அப்புறம் பாருங்கள் இந்த மகாராணியை கேட்காமல் மகாராஜா ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார். மதிக்காத இடத்தை ஒதுக்கலாம் சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுங்கள். தோற்றுப் போவது நல்லது வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். சில நாட்களில் அது செயல்பாட்டுக்கு வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

 உங்களுக்கு கணவனிடம் கேட்க நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது. உடனுக்குடன் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுவது இருவருக்குமே நல்லது. நீங்களே முதல் தோழி உங்களவரை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவருடைய நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த தோழியாக நீங்கள் மாறிவிடுவீர்கள். அக்கறை அவசியம் உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள். ஒப்பிட தேவையில்லை உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இருக்கமுடியாது. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்! எனவே கணவரை உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட தப்பித்தவறி ஒப்பிட்டு பேச வேண்டாம்.

 நிதி மந்திரியாகுங்கள் உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும். மறதி நல்லதிற்கே உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள். நீங்களே தொடங்குங்கள் கணவன்தான் படுக்கை அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன். ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!! தன்னையே ரசிக்கலாம் உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். 

நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள். தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும். சந்தோச கூடாரம் வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். "ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்" என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள். உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்

அறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும் பழக்கம்





1940 களில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது;அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் வாகனப்போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை மனித குலம் சந்தித்தது.

1970களில் மின்காந்த அலைகளைக் கட்டுப்படுத்தும் திறனை மனிதன் அடைந்தான்.அதன் விளைவாக ஓரிடத்தில் பேசுவதை உலகம் முழுக்கவும் பரப்பும் சாமர்த்தியமாக வானொலி நிலையங்கள் உருவாகின;

1980களில் ப்ளாஸ்டிக் மனித குல வாழ்க்கையில் அனைத்தையும் எளிமையாக்கத் துவங்கின.அதுவே இன்று பூமியை மலடாக்கும்,குருடாக்கும் வேலையையும் செய்யத்துவங்கியிருக்கிறது.


1990களில் மனிதகுலத்தில் 5 கோடி ஆண்டு வரலாற்றில் ஒரு புதிய ,இதுவரையிலும் இல்லாத மகத்தான புரட்சியை உண்டாக்கியிருக்கிறது.மனித குலத்தை தகவல் யுகத்துக்குக் கொண்டு வந்த கணிப்பொறி, தகவல் நெடுஞ்சாலை எனப்படும் இணையம் உலகம் முழுக்கப்பரவத் தொடங்கியது.மனிதனின் மூளையின் வடிவமைப்பைப் போலவே, கணிப்பொறியை கண்டுபிடிப்பு அமைந்ததால்,அது மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.


2000களில் தகவலே ஆயுதம் என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது.என்னதான் கணிப்பொறி,தகவல் தொழில்நுட்பம் என்று வளர்ந்தாலும்,தொழில் நுட்ப வளர்ச்சி மனிதர்களிடையே நெருக்கத்தை உருவாக்குவதற்குப்பதிலாக, பெரும் பிளவையே உருவாக்கி வருகிறது.இந்த சூழ்நிலையில்  கடந்த 400 ஆண்டுகளாக உலக வல்லரசு என்று போற்றப்படும் அமெரிக்கா ஒரே ஒரு தனிமனிதனுக்கும்,ஒரே ஒரு இணைய தளத்துக்கும் பயப்பட ஆரம்பித்திருப்பதே, தகவல் யுகத்தின் ஆரம்ப வீச்சு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.அந்த ஒரே ஒரு தனி மனிதன் ஒசாமா பின்லேடன்;அந்த ஒரே ஒரு இணைய தளம் விக்கிலீக்ஸ்!!!

இந்த சூழ்நிலையில் நாம் பிரதமர்,முதலமைச்சர்,உலக அமைப்புக்களின் செயலாளர்கள், ஒரு நாட்டின்  தூதுவர்,பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி போன்றவர்களின் வாரிசாகப் பிறந்திருந்தால் இந்த பிறவி முழுவதுமே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை;ஆனால்,நடைமுறையில் அப்படி நாம் பிறக்கவில்லை என்பதே நிஜம்.இன்னொரு பக்கம் ஆளும் அரசுகளை கைப்பிடிக்குள் வைத்து,ஆட்டிப்படைப்பது உளவு நிறுவனங்களும்,சர்வதேச கார்பரேட் நிறுவனங்களுமே!குடிக்கும் தண்ணீரைக்கூட வணிகமயமாக்கியது அவைகளின் மாபெரும் வெற்றி.

ஒரு கவுன்சிலரானாலே, மக்கள் நலனை ஓரளவுக்கு மேல் பின்பற்றமுடியாத இக்கட்டான சூழல் இன்று உருவாகிவிட்டது.மறுபுறம்,மனித உணர்வுகளான மொழிப்பற்று,தேச பக்தி, குடும்பப் பாசம்,உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தெய்வ பக்தி,  தியாக மனப்பான்மை போன்றவை சுருங்கத் துவங்கியிருக்கின்றன.இதைத்தான் அடிக்கடி மெட்டீரில் வேர்ல்டு இது; நாம் ஒவ்வொருவருமே ரொம்பவும் பாசம் வைக்கக் கூடாது.அன்பை விட நடிப்பான பாசத்தை நம்பியும், உதவியை விட துரோகத்தாலும்,விட்டுக்கொடுப்பதை விட தன்னை முன்னிலைப்படுத்துவதாலும் பல குடும்பங்கள் சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன.சில குடும்பங்கள் வாழும் விதத்தை எழுதினால், தெய்வ நம்பிக்கையே போய்விடும்;இப்பேர்ப்பட்ட கொடூரமான காலகட்டத்தில்,நாம் பிறரை விட கொஞ்சம் கூடுதல் அறிவாளியாக இருந்தால் மட்டுமே உயர்ந்த சம்பளத்தில்,சிறந்த வேலையில் வாழ முடியும்.அப்படி வாழ்வதற்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அவர்களின் எட்டாம் வகுப்பிலிருந்து தயார் செய்ய வேண்டும்.உங்கள் வயது 25ஐ விடவும் குறைவாக இருந்தால்,இதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்;ஒருவேளை வயது 45 ஐவிடவும் அதிகமாக இருந்தால்,ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் வீதம் ஓராண்டுக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும்;அல்லது ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் மூன்றாண்டுக்குக் குறையாமல் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.இதன் மூலமாக பொருளாதார தன்னிறைவை எட்ட முடியும்.

உங்கள் குழந்தை எட்டாம் வகுப்பு படித்துவரும் எனில்,தினமும் 30 நிமிடம் வரை தினசரி செய்தித்தாள் படிக்க வைக்க வேண்டும்;அப்படி வாசித்தலிருந்து நீங்கள் உங்கள் குழந்தையோடு (டிஸ்கஸ்) கலந்துரையாட வேண்டும்;அவ்வாறு கலந்துரையாடும்போது உங்களின் குழந்தையை மட்டம் தட்டியோ,முந்திரிக்கொட்டை போலவோ நீங்கள் பேசக்கூடாது;உங்கள் குழந்தையின் சிந்தனையைத் தூண்டும் விதமாக தினசரிச் செய்தித்தாளிலிருந்து செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்;

தினசரி இவ்வாறு செய்ய முடியாவிட்டால்,வாரம் ஒரு நாள்(ஞாயிற்றுக்கிழமைதான்!) இவ்வாறு உங்களின் குழந்தையை தினசரி வாசிக்கச் சொல்லி,அதிலிருந்து உங்கள் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும்,நிதானமாகவும் பதிலளிக்க வேண்டும்.இந்த 30 நிமிட நேரத்தில் நீங்கள் செல்போன்,டிவி,கணினி,ஐபேடு என அனைத்தையும் தூர வைத்து விடுவது நன்று.இவ்வாறு ஓராண்டுக்குக் குறையாமல் செய்து வந்தால்,அதன் பிறகு உங்கள் குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் தானாகவே வந்துவிடும்.
நீங்கள் ஓடி ஓடி யார் யாரிடமோ அவமானப்பட்டும்,கெஞ்சியும் பணம் சம்பாதிப்பது யாருக்காக? அப்படி சம்பாதிக்கும் பணத்தை நிர்வாகிக்க உங்கள் குழந்தைக்கு யார் சொல்லித் தருவார்? எந்த பள்ளிப்பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சொல்லித் தருகின்றனர்? தினமும் உங்கள் குழந்தையை வீட்டில் சந்தித்ததும்,அவளின்/அவனின் முகம் நோக்கி இன்று பள்ளியில் என்ன நடந்தது? நீ செய்த சாதனை என்ன? உனக்கு எதில் சாதிக்க ஆசை ? என கேட்க நேரமில்லாத அளவுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம்.இது நியாயமா?

மேற்கூறியவாறு வாசிக்கும் பழக்கம் வந்தபின்னர்,பத்தாம் வகுப்பு விடுமுறையில் தினமும் உங்கள் ஊரில்  இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் விதவிதமான பத்திரிகைகள்,மாத இதழ்களைப் பற்றி ஒரு விளக்கமளிக்க வேண்டும்.

உதாரணமாக, தினசரி செய்தித்தாள்களில் தினமலர்,தினத்தந்தி,தினகரன்,தினமணி போன்றவை இருக்கின்றன.
அரசியல் புலனாய்வு வார இதழ்களில் ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் இருக்கின்றன;எல்லோருக்கும் பிடிக்கும் இருவார இதழ்களில் ஆனந்தவிகடன்,இந்தியா டுடே,தமிழ் கம்யூட்டர் உலகம்,தமிழ் கம்யூட்டர்,PC friend போன்றவை இருக்கின்றன.

மாத இதழ்களில் மோட்டார் விகடன்,குமுதம் பக்தி ஸ்பெஷல்,கலைக்கதிர் என ஏராளமாக இருக்கின்றன.சுயமுன்னேற்ற மாத இதழாக தன்னம்பிக்கை என்ற ஒரே ஒரு இதழ் கோயம்புத்தூரிலிருந்து வெளிவருகிறது.மனதத்துவம் பற்றிய மாத இதழ் மனோ சக்தி என்ற இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு,இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உங்கள் குழந்தை தனது லட்சியத்தை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை இந்த வாசிக்கும் பழக்கம் தானாகவே உருவாக்கிவிடும்;அடுத்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு நேர்காணலாக இருந்தாலும்,உங்கள் குழந்தை மிகச் சிறப்பாக எதிர்கொள்வதோடு,வேலையில் சேர்ந்த பின்னர்,வெகு வேகமாக பதவி உயர்வைப் பெற்றுக்கொண்டே இருக்கும்.

25 வயதுக்காரர்கள் தினமும் தினசரி படிக்க வேண்டும்.ஒரே செய்தியை தினமலர் எப்படி வெளியிட்டிருக்கிறது? தினகரன் எப்படி வெளியிடுகிறது? தினத்தந்தி அதை எப்படி செய்தியாக்கியிருக்கிறது?என்பதை சிந்திக்கப் பழக வேண்டும்;தினசரிகளில் வரும் செய்திகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து,அதைப் பற்றி புலனாய்வு செய்து வாராந்திர அரசியல் இதழ்களான ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்றவை வெளியிடுகின்றன.பல சமயம் வார, இருவார,மாத இதழ்களில் வெளிவரும் செய்திகள் தினசரிகளில் வெளிவருவதில்லை;


9 ஆம் வகுப்புமுடிக்கும்போது,இரண்டு மாதங்களுக்கு ஆங்கில டைப் ரைட்டிங் வகுப்பு அனைவருமே செல்ல வேண்டும்;தவறின்றி டைப் அடிக்கும் பழக்கம் வந்தபின்னர்,கணினியில் அடிப்படைப் பயிற்சியான எம்.எஸ்.ஆபிஸ் மட்டும் பயில கணினி பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டும்.தனியார் கணிப்பொறி மையங்கள் தரும் டிப்ளமோ பயிற்சிகளால் ஓரளவுக்கு மேல் பலனில்லை; எம்.எஸ்.ஆபிஸ் முடித்தபின்னர்,ஓவியம் வரையும் திறமை இருந்தால், டிடிபி பயிலலாம்;வீட்டில் படிப்புக்கு நன்றாக செலவழிக்கும் திறனிருந்தால் அனிமேஷன் படிக்கலாம்.அனிமேஷனில் டிகிரி படித்தால் மட்டுமே சிறந்த வேலையில் உயர்ந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும்.கணிதத்தில் , அக்கவுண்டன்சியில் ஆர்வமுள்ளவர்கள் டேலி படிக்கலாம்.இவைகளில் எதுபடித்தாலும்,விரைவாகவும்,தவறின்றியும் பணிபுரியும் திறனே வேலை வாய்ப்புச் சந்தையில் விரும்பத்தக்க தகுதியாகக் கருதப்படுகிறது.

உங்கள் மகன்/மகள் வீட்டில் இருக்கும் கருவிகளை பிரிக்கவும்,சேர்க்கவும் செய்யும் குணமுள்ளவரா?மறக்காமல் ஆண்டு விடுமுறையில் கணினி பழுதுநீக்கும் பயிற்சியான ஹார்டுவேர் ட்ரெயினிங்கில் சேர்ப்பது அவசியம்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளே இன்று இணையப் பெருங்கடலில் புகுந்துவிளையாடுகின்றன.காரணம் முக நூல் எனப்படும் Face Book இன் அதீதப் பரவவே காரணம் ஆகும்.இது ஆபத்தை நிச்சயம் உண்டாக்கும்.அதே சமயம் எம்.சி.ஏ.முடித்தும் கூட ஒரு மின் அஞ்சலை பார்வேர்டு செய்யத் தெரியாமல் திணறும் கணினி பட்டதாரிகளையும் தமிழ்நாட்டில் நெடுக சந்திக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் அறிவே சக்தி;வாசிக்கும் பழக்கமே வளமான வாழ்க்கைக்கு வழி!!!

உங்களின் சிந்தனையைத் தூண்டும் சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.இவை ஒவ்வொன்றையும் ஒரு வருடத்தில் சுமார் 100 முறை திரும்ப திரும்ப வாசிக்கவும்;சிந்திக்கவும்;உங்களது நெருங்கிய நட்பு வட்டத்தில் கலந்துரையாடவும்.நீங்களும் சாதனையாளர் ஆகமுடியும்.

1.கர்மயோகம்=சுவாமி விவேகானந்தர்

2.எண்ணங்கள்=எம்.எஸ்.உதயமூர்த்தி

3.ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்

4.உங்களால் வெல்ல முடியும்= ஷிவ் கெரா

5.மறைந்திருக்கும் உண்மைகள்= ஓஷோ

6.காமத்திலிருந்து கடவுளுக்கு= ஓஷோ

7.இது உங்களுக்காக=விகடன் பிரசுரம் வெளியீடு

8.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்=சி.எஸ்.தேவ்நாத்

9.வந்தார்கள்,வென்றார்கள்=விகடன் பிரசுரம் வெளியீடு

10.ஆழ்மனதைப் பயன்படுத்துவது எப்படி?=கண்ணதாசன் பதிப்பகம்

11.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம்

12.ஆத்மாவின் ரகசியங்கள்=பி.எஸ்.பி.

13.ஓம்சக்தியும் அணுசக்தியும்

14.என்று காண்போம் எங்கள் சிந்துவை

15.தேசப்பிரிவினையின் சோக வரலாறு

16.நாதுராம் விநாயக் கோட்சே=Z.Y.ஹிம்சாகர்

17.ஸ்ரீரங்கன் உலா

18.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்

19.வீரபாண்டியன் மனைவி= மூன்று பாகங்கள்

20.கூடு=பால குமாரன்

21.விழிமின் எழுமின்=சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திரம் வெளியீடு

22.விவேகானந்தர் பாறைச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திரம் வெளியீடு

23.ஒரு யோகியின் சுயசரிதை

24.மனித சக்தியும்,மன சக்தியும்

25.நான் ஏன் நாத்திகனானேன்?=ஈ.வே.ரா.

26.திராவிடத்தால் வீழ்ந்தோம்=குமரிப் பதிப்பகம்,நாகப்பட்டிணம்

27.வானம் வசப்படும்=பிரபஞ்சன்

28.இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்

29.விலை ராணி= சாண்டில்யன்

30.ஞான கங்கை = மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி

ஓம்சிவசிவஓம்



Sunday, January 29, 2012

நிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..


முருகர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று பல கதைகள் உண்டு. வரலாற்றுரீதியில் லேட்டஸ்ட்டாக அருணகிரிநாதர் கதையை அறிந்திருப்பீர்கள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், தொழுநோய் வந்து உற்றார் உறவினர் எல்லோராலும் விரட்டியடிக்கப்பட்ட அருணகிரிநாதர், தான் செய்த தவறுகளை உணர்ந்து இனியும் தான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது முருகர் தடுத்தாட்கொண்டு, நல்ல உடல்நலனையும், அருளையும் வாரி வழங்கியது வரலாறு.

அதிகமாக அறிவு வளர்ந்துவிட்ட நமக்கு ‘இதென்னடா, இப்படிக் கதை விடுறானுக..தொழுநோய் வந்துச்சாம்..முருகரும் வந்தாராம்..ச்சூ மந்திரகாளின்னு தொழுநோயை விரட்டினாராம்..நல்லா விட்றுக்காங்கப்பா ரீலு’ என்று தோன்றும். அது ஒன்றும் பெரிய தவறில்லை தான்..அது அப்படியே இருக்கட்டும்..

இன்று நான் என் உறவினர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்..இது நடந்தது சரியாக 22 வருடங்கள் முன்பு..அவர் ஒரு கடின உழைப்பாளி. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது. குழந்தையில்லை. நன்றாக இருந்த மனிதர் திடீரென மெலியத் தொடங்கினார். கூடவே தீராத ஜலதோஷம் வேறு. பல மாத்திரைகளை அவராகவே வாங்கிப் போட்டும் ஒன்றும் கேட்கவில்லை.

உடம்பில் இருந்த சத்தையெல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல், தினமும் அவரின் மெலிவு சீராகத் தொடர்ந்து. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்குச் சென்று காட்டினால் ‘காசநோய்’ என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மிகவும் முத்திப்போய்விட்டதாகவும், இன்னும் சில மாதங்களே இருப்பார் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது மருத்துவ வசதிகளும் இந்த அளவிற்கு இல்லை. வசதியின்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரியை விட்டால், வேறு வழியும் இல்லை.

அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் இனி அவ்வளவு தான் என்ற செய்தி கிடைக்கவுமே அவர் உடன்பிறப்புகள் இந்தப் பக்கமே வருவதில்லை. நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் வேறு. கையிலோ காசும் இல்லாமல், வறுமையும் சேர்ந்து அவரைக் கொன்றது. அப்போது அவர் மனைவி செய்தது தான் ஆச்சரியமான விஷயம். அவராலோ வேலைக்குப் போக முடியவில்லை. இனி ரொம்ப நாள் அவர் இருக்கப்போவதும் இல்லை. இனி எதற்கு அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நன்றாக யோசித்துவிட்டு, தன் தாய்வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார். 

‘இல்லானை இல்லாளும் மதியாள்’ என்ற அவ்வையின் வாக்கின் அர்த்தத்தை அன்று தான் அவர் உணர்ந்தார். மனம் நொந்தார். உயிருள்ள அனாதைப் பிணமாய் ஆனார். ’இது என்ன வாழ்க்கை..சிறு நோய் வந்தால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடுமா? இதற்கா இத்தனை ஆட்டம், கொண்டாட்டம்’ என்று யோசித்தார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அவருக்கு அவர்களது குடும்பம் அடிக்கடி சென்று வழிபடும் ஸ்ரீவாளசுப்பிரமணியர் கோவில் ஞாபகம் வந்தது. அது ராஜபாளையம் அருகே தென்மலை என்ற கிராமத்து மலைமேல் உள்ளது. மிகச் சிறிய கோவில். முருகர் மட்டுமே அங்கு உண்டு. யாரும் அடிக்கடி அங்கு போக மாட்டார்கள். ஏறிச்செல்வதும் கஷ்டம். அங்கே அப்போது கட்டிடங்களும் ஏதும் கிடையாது. ஒதுங்க நிழலும் கிடையாது. ஆனால் ஒரு நாழிக்கிணறும், சிறு குட்டை போன்ற தெப்பமும் உண்டு.

தான் இனி அதிக நாள் இருக்க மாட்டோம் என்று அவருக்கே தெரிந்தது. இந்த மனிதர்களிடையே சாவதைவிட அங்கு சென்று முருகன் காலடியில் உயிரை விடலாம் என்று முடிவு செய்தார். அந்த முருகரைப் பற்றி பலகதைகள் உண்டு. எங்கள் தாத்தா ஒருவர் ஒரு நள்ளிரவில் அந்த மலையில் இருந்து கோமணம் கட்டிய ஒருவர், கையில் தடியுடன் உலாத்தியதைக் கண்டிருக்கிறார். எனவே அந்த சக்தி வாய்ந்த மலைக்குப் போய், அங்கேயே வயனம் காப்பது என்று முடிவு செய்தார்.

வயனம் காத்தல் என்பது ஏறக்குறைய துறவு நிலை. கோவிலே கதி என்று உட்கார்ந்து விடுவது. அங்கு என்ன கிடைக்கிறதோ, அதை மட்டுமே உண்டு வாழ்வது. அந்த மலையில் த்ண்ணீரைத் தவிர வேறேதும் கிடையாது. எப்போதாவது யாராவது வந்தால், சாப்பாடு தருவார்கள். இல்லையென்றால் அதுவும் அவன் சித்தம் என்று சும்மா உட்கார்ந்து விடுவது.

அவர் அப்படியே அங்கு அமர்ந்தார். ‘ஏன் எனக்கு இந்த நிலைமை? வாழ வேண்டிய வயதில் ஏன் என்னை நோயாளி ஆக்கினாய்?’ என்று தினமும் அழுதபடியே முருகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேயிருந்தார். காசநோயும் முத்திக்கொண்டே போனது. இப்படியே ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு அவர் தனித்திருந்தார். உடம்பில் சதை காணாமல் போய், எழும்பும் உருகத் தொடங்கியிருந்தது. சளி உடலை அரித்துத் தின்றுகொண்டிருந்தது. 


அவர்-மலை-முருகர் மூவர் மட்டுமே இருந்தனர். நாளாக நாளாக அவரே மலை போல் தன்னைப் பற்றிய உணர்வற்றவராய் ஆனார். தன் உடலை மறந்தார், நோயையும் மறந்தார். முருகரை மட்டுமே நினைந்தார். கோவணாண்டி மட்டுமே அவருக்குத் தெரிந்தார். இவரும் சிலையாய் முருகர் சன்னதி எதிரே சமைந்திருந்தார். ஒரு கார்த்திகை மாத நள்ளிரவில் அவருக்கு ஒரு குரல் கேட்டது. ”எழுந்து உள்ளே வா” என்று கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் எழுந்து உள்ளே போனார். அங்கே முருகரின் சிலை இல்லை. கண்ணை கூசச் செய்யும் ஒளி மட்டுமே அங்கே இருந்தது. அவருக்கு இது கனவோ என்று தோன்றியது. ஆனால் தான் கருவறைக்குள் நின்றுகொண்டிருப்பதும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதும் சொல்ல வராமல் அழுதார், அங்கேயே சரிந்து உட்கார்ந்து அழுதார். அப்படியே தூக்கம் அவரை இழுத்துக்கொண்டது.

மறுநாள் காலையில் உடலில் பலம் கூடியிருப்பது போல் தெரிந்தது. இருமல் இல்லை. சந்தேகத்துடனே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தார். சளியோ இருமலோ இல்லவே இல்லை. அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘முருகா..முருகா’ என்று ஆனந்தக் கூத்தாடினார். மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போய்ச் சொன்னார். மனைவியும் திரும்பி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பழைய நிலைக்கு மாத்திரைகள் இல்லாமலே திரும்பியது. டாக்டர்களுக்கும் ஆச்சரியம் தான். சொந்தங்களுக்கும் ஆச்சரியம் தான்.

இப்போதும் அவர் செவ்வாய்-வெள்ளியன்று அதிகாலையில் அந்த முருகர் கோவிலுக்குப் போய் வருகிறார். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று அவர் பொறுப்பில் பூஜையும் நடத்தப்படுகிறது. எனக்கு அவர் சித்தப்பா முறையாவார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். நல்ல வசதியுடன் முருகன் அருளால் வாழ்கிறார்.

சென்ற வருட கார்த்திகைத் திருவிழாவின்போது, அந்தக் கோவிலில் அவருடன் இருந்தேன். இன்றும் அவர் பக்திகுறையாமல் ஒவ்வொரு படி ஏறும்போதும் முருகா..முருகா என்று அழைத்தபடியே வந்தார். முருகரின் அருளுக்குச் சாட்சியாக அவர் வலம் வருவதை பலரும் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். ‘இது எப்படிச் சாத்தியம்?” என்று இப்போது புதிதாக அவரைப் பார்த்த எல்லோருமே கேட்டார்கள்.

அது அவருக்கு எப்படித் தெரியும்?

அதை அவன் மட்டுமே அறிவான்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!


கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!


மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!


ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


கோவிலுக்குச் செல்லும் வழி:

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பருவக்குடி-முக்குரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து தனியே சிவகிரிக்கு ஒரு சாலை செல்லும். அதில் சென்றால் இரண்டாவது ஊர் தென்மலை. அங்கே மலை மேல் வீற்றிருக்கின்றார் ஸ்ரீவாள சுப்பிர மணியர். சிறிய கோவில், இப்போது கொஞ்சம் எடுத்துக் கட்டியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை நடக்கும். ஆனாலும் மற்ற நாட்களிலும் நல்ல அதிர்வு இருக்கும் இடம் அது. யாருமே இல்லாத நேரத்தில் தரிசிப்பதும் நல்ல அனுபவம்.
 
நம்பினோர் கைவிடப்படார்...!
 
நன்றி : திரு . செங்கோவி .  


Read more: http://www.livingextra.com/2012/01/blog-post_3082.html#ixzz1koSP6dqY

இந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தரங்கில் பெருமிதம்


சென்னை: ""அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை'' என, தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் கூறினார்.

பூரண தத்துவ சபையின் சார்பில், "விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' எனும் தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நேற்று துவங்கியது. சபையின் நிறுவனர் சத்தியநாராயணன் வரவேற்றார். கருத்தரங்கை, பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார்.

"அறிவியல் கோட்பாடுகளுக்கு பின்னுள்ள சமய உண்மைகள்' எனும் தலைப்பில், தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் பேசியதாவது: உடல்நலம் குன்றிய ஒருவர், பூரண குணமடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப் பிரார்த்தனை நற்பலனை தருகிறது. இதற்கு, பிரார்த்தனை செய்வோரின் நேர்மையான எண்ண அலைகள் முக்கிய காரணம் என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சைவ சமயத்தின் முக்கிய குறியீடான ருத்ராட்சம் அணிவதால், மன அமைதி, தொழில் முன்னேற்றம், நிர்வாக பண்பு, படைப்பாற்றல் உள்ளிட்ட 21 வகை பயன்கள் கிடைக்கிறது. இதற்கு அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

அரச மரம், ஆலமரம் ஆகியவற்றின் சிறு குச்சிகள், வரட்டி, நெய் ஆகியவற்றை, பிரமீட் வடிவ செப்பு பாத்திரத்தில் போட்டு, தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தன நேரத்தில், யாகம் செய்ய வேண்டும். அப்போது அதிலிருந்து வெளிவரும் வாயுக்கு, எதிர்மறை எண்ண அலைகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. தம் வீட்டில், "அக்னி ஹோமம்' செய்து வந்த குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள், போபால் விஷ வாயு சம்பவத்தில் பாதிக்கப்படாத நிகழ்வு இதற்கு சிறந்த உதாரணம். இப்படி, அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை. இவ்வாறு செல்வராஜ் பேசினார்.

தொல்லியல் துறை முன்னாள் தலைவர் தியாக.சத்தியமூர்த்தி, "தொல்லியலும், விஞ்ஞானமும்' எனும் தலைப்பில் பேசும்போது, ""பெருவழுதி என்ற, சங்கால பாண்டிய மன்னன் வெளியிட்ட நாணயத்தில், அசுவமேத யாகத்தை விவரிக்கும் வகையில், குதிரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பழமைமிக்க கோவில்கள், சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவை, நம் வேதங்களில் சொல்லப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன. இவற்றின் பெருமையை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் பணியை எங்களின், "ரிச் பவுண்டேஷன்' செய்கிறது,'' என்றார்.
நன்றி:தினமலர் 29.1.12

Saturday, January 28, 2012

நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி

நீங்கள் பார்க்கும் இந்த படத்தில் உள்ள மாமரத்தை பற்றி கூறினால் நிச்சயம் ஆச்சர்யம் கொள்வீர்கள் , இந்த ஸ்தல - விருட்சம் எனப்படும் மாமரம் 1000 கோவில்களின் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ளது , இது 3500 வருட பழமை வாய்ந்த மரம் , இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மரத்தின் நாளா புறங்களில் உள்ள நான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடிய கனிகளை இந்த மரம் தருகிறது !!!! நம் மாநிலத்தில் உள்ள இந்த சிறப்பை , மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள் !!!

இளையராஜாவின் இசை செய்த அற்புதம்!






இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு
, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம்
குழந்தை ஆரோக்கியமாகஅதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து,மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும்
இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு
ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டுமொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள்
குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட
அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை
இசைக் கலைஞர்களை பாதுகாக்ககௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல  என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.  நன்றி:தமிழ் ஒன் இந்தியா

ஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்

திருத்தணி: கோவை மாவட்டம் தாராபுரம் அடுத்த உத்தமபாளையம் பகுதியில் பிறந்தவர் பழனிச்சாமி, 96. இவர், 56 ஆண்டுகளுக்கு முன்அரக்கோணம் அடுத்த போடிநாயுடுகண்டிகை கிராமத்திற்கு குடிவந்தார். சிவபக்தரான இவர்இக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே தங்கிதினசரி ஒரு வீடு வீதம் இங்குள்ள, 30 வீடுகளில் சாப்பிட்டு வந்தார். இவர் தங்குவதற்கென இக்கிராம மக்கள்பெருமாள் கோவில் அருகேஅறை கட்டிக்கொடுத்துள்ளனர். இவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மந்திரித்தல்ஜோசியம் பார்த்தல் ஆகியவற்றையும் செய்து வந்தார். இந்நிலையில்கடந்த 17ம் தேதி அன்று கிராம மக்களை அழைத்து, "நான் வரும், 20ம் தேதி மாலை, 3 மணிக்கு இறந்து விடுவேன். எனவே எனக்கு, 6 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி புதையுங்கள்என்றார். இதையடுத்துபெருமாள் கோவில் அருகே ஜீவசமாதி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. உயிருடன் இருக்கும்போதே புதைத்தால் கொலை வழக்கில் போலீசார் பிடித்து விடுவார்கள் எனகிராம மக்கள் பயந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அவர் கூறியதுபோல்அவரது உயிர் இன்று மதியம், 3.05 மணிக்கு பிரிந்தது. இதையடுத்துகிராம மக்கள் முறைப்படி அவரது உடலை புதைத்து ஜீவசமாதி அமைத்தனர். நன்றி:தினமலர் 20.1.12 & நமது அயல்நாட்டு வாசகர்