Thursday, December 13, 2018

ஆன்மீகப் பிரச்சாரம் ஏன் நாம் செய்ய வேண்டும்?

உலகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களுக்கு அவரவர் பூர்வ புண்ணியத்தின் படி,இந்த நாட்டில்,இந்த மாநிலத்தில்,இந்த மாவட்டத்தில்,இந்த ஊரில்,இந்த ஜாதியில்,இந்த அம்மா+அப்பாவுக்கு இந்த கிரக அமைப்பில் பிறக்க வேண்டும் என்று ஈசன் தீர்மானித்து அனுப்பிவைக்கின்றார்;

நமது மரணத்தை சனிக்கிரகமும்,லக்னத்திற்கு 8 இடத்து அதிபதியும் தீர்மானிக்கின்றார்கள்;ஆனால்,நமது மறுபிறவியை சுக்கிரன் தான் தீர்மானம் செய்கின்றார்;நவக்கிரகங்கள் அவரவர் கடமையை அவர்கள் இஷ்டப்படி செய்ய முடியாது;சிவசிந்தனையில் இருந்து நடுநிலையோடு தான் செய்ய முடியும்;

எவர் ஜாதகத்தில் குரு சுபக் கிரகமாக அமைகின்றதோ,அவர்களுக்கு மட்டுமே ஆன்மீகக் கருத்துக்கள் தேடி வரும்;ரிஷப லக்னம்,துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் இப்பிறவி முழுவதும் சொகுசுவாழ்க்கை வாழவே பிறந்துள்ளார்கள்;

போன பிறவியில் பசுவை ஒரே ஒரு முறை தெரியாமல் மிதித்துவிட்டாலோ,அடித்துவிட்டாலோ அல்லது கொன்றுவிட்டலோ

போன பிறவியில் கோவில் சொத்துக்களை திருடியிருந்தாலோ திருடுவதற்கு துணை போயிருந்தாலோ,திருடுவதை வேடிக்கை பார்த்திருந்தாலோ

போன பிறவியில் தெய்வத்தை மிகவும் இழிவாக திட்டியிருந்தாலோ

இன்னும் சில தகாத செயல்களைச் செய்திருந்தாலோ குரு நீசமாக இருக்கும் போது பிறவி எடுக்க வேண்டி இருக்கும்;

அதனால் தான் இந்துக்கள் எப்போதும் பிற மத தெய்வங்களை ஒரு போதும் நிந்திப்பது கிடையாது;பிற மத நூல்களில் இருந்து அறிவு பூர்வமாக சந்தேகம் கேட்பது தப்பில்லை;கேலி செய்வதோ,இழிவு படுத்துவது தான் தவறு;

பூமியில் இந்து மதமான சனாதன தர்மத்திற்கு ஆபத்து வரும் போது,ஈசனாகிய அருணாச்சலேஸ்வரரே சிலரை பூமிக்கு அனுப்புவது வழக்கம்;அப்படி வந்தவர் தான் ரமண மகரிஷி;ரமண மகரிஷியின் வாழ்க்கை ஐரோப்பியர்களுக்கு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமையை உணர்த்தவே முன் உதாரணமாக வாழ்ந்து வந்தார்;தனது வாழ்நாளில் 10,000 தடவைகளுக்கும் மேல் அருணாச்சலத்தை கிரிவலம் வந்திருக்கின்றார்;

அண்ணாமலை கிரிவலம் வரும் ஒவ்வொருவருக்கும் சூட்சுமமாக இருந்து இன்று வரை வழிகாட்டி வருபவர் ரமண மகரிஷி!

முருக கடவுள் வழிபாட்டுமுறையையும்,அண்ணாமலை கிரிவலத்தின் முக்கியத்துவத்தையும் பாரத நாடு முழுவதும் மற்றும் இலங்கை முழுவதும் பரப்பியவர் முருக பக்தராகிய அருணகிரி நாதர்! அவரது உண்மையான வாழ்க்கை வரலாற்றை அகத்திய மகரிஷியின் அருளால் அறிந்த பின்னரே அவரைப் பற்றி இதுவரை அறிந்தது அனைத்தும் தவறு என்பதை உணர முடிந்தது;

வெறும் பக்தியால் எப்பேர்ப்பட்ட மாந்திரீகத்தையும் முறியடிக்க முடியும் என்பதை அருணகிரி நாதரின் வாழ்க்கை நமக்கு போதிக்கின்றது;இன்று (2019) முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை 1000 கால் மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களே இதற்கு நேரடி ஆதாரம் ஆகும்;

சைவத்திற்கும்,வைஷ்ணவத்திற்கும் இடையே ஒற்றுமையை உருவாக்கிட கடும் முயற்சி எடுத்தவர் அருணகிரி நாதர்;

ஒரு நாளுக்கு 6 முறை வீதம் தொடர்ந்து 40 ஆண்டுகள் அண்ணாமலை கிரிவலம் வந்தவர் தான் சேஷாத்திரி சுவாமிகள்;அவர் தனது வாழ்நாளில் 1,00,000 தடவைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார்;அதனால் கிடைத்த புண்ணியத்தை நமது பாரத நாட்டின் மக்களுக்கும்,பூலோக மக்களுக்கும் அர்ப்பணம் செய்தவர்;உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து அண்ணாமலைக்கு வருகை தந்து ஐக்கியமானவர்;அதனால், தான் அக்னி லிங்கத்தின் அருகில் ஜீவசமாதி ஆகும் பெரும் பேறு பெற்றார்;

 வடமேற்கு எல்லைப்புற மாகாணம் என்று இருந்த மாநிலத்தை அருணாச்சல பிரதேசம் என்று பெயர் மாற்றினார் இந்திரா காந்தி; அண்ணாமலையின் அருமை பெருமைகளை இந்திரா காந்தி உணர்ந்ததால்,இந்த பெயரை வைத்தார்;ஒரே ஒருமுறை தெரியாமல் அண்ணாமலை என்றோ அல்லது அருணாச்சலம் என்றோ சொன்னாலே 3,00,00,000 முறை ஓம் நமச்சிவாய என்று ஜபித்த புண்ணியம் கிடைக்கும்;

சூப்பர் ஸ்டார் அவர்கள் தான் நடித்த ஒரு திரைப்படத்திற்கு அருணாச்சலம் என்று பெயர் வைத்ததும் இதே காரணத்திற்காகத் தான்!!!திரையுலகில் இருந்து கொண்டு பக்தியை பரப்புவது சாதாரண காரியமா?

ஈசனின் ஆணைப்படி,வில்வத்தின் பெருமைகளை பரப்பிட பல சித்தர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பாரத தேசம் முழுவதும் அவதரித்தார்கள்;பொது மக்களிடம் வில்வத்தின் பெருமைகளை பரப்பினார்கள்;

ருத்ராட்சத்தின் பெருமைகளையும்,அதன் மருத்துவ குணங்கள்,ஆன்மீக சுபாவங்களையும் கலியுகத்தின் ஆரம்பத்தில் அதாவது 5100 ஆண்டுக்கு முன்பு பாரத நாடு முழுவதும் பரப்பினார்கள்;

கோமாதாவின் உடலில் 300 கோடி தெய்வீக சக்திகள் இருக்கின்றன;நமக்குத் தெரிந்து 50 அல்லது 60 தெய்வங்கள் தான்;கோமாதாவின் பெருமைகளை பரப்பிட ஈசனின் அருளால் பல சித்தர்கள் பூமிக்கு வருகை தந்தார்கள்;

கோவில் வழிபாட்டு முறைகள்,சைவ சித்தாந்த நூல்கள்,திருக்கையிலாய வாத்தியம் என்ற பஞ்சவாத்தியம் வாசிப்பது போன்றவைகளையும் மக்களாகிய நம்மிடையே பரப்பியவர்கள்,சொல்லிக் கொடுத்துவர்கள் ஈசனின் ஆணைப்படி பூலோகம் வருகை தந்த சித்தர்களே!!!

இன்று சனாதன தர்மம் மிகப் பெரும் ஆபத்தில் இருக்கின்றது.அதை பாதுகாக்க பல்வேறு துறைகளில்,பல்வேறு ஊர்களில்,பல்வேறு விதமான இயக்கங்கள் பாரத நாடு முழுவதும் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன;இவர்கள் அனைவருமே ஈசனின் ஆணைப்படி பூமியில் பிறவி எடுத்திருக்கும் சிவ கணங்கள்,விஷ்ணு கணங்கள் ஆவர்;

ஒரு பெரும் யுத்தம் 2030க்குள் வரப் போகின்றது;அதன் பிறகு,நமது சனாதனதர்மம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்;கடவுளின் பெயரால் யாரெல்லாம் வறுமையை,நோயை,அறியாமையை நீக்காமல் சண்டையிட்டார்களோ,அத்தனை பேர்களும் அழிந்திவிடுவார்கள்;

இங்கே நாமும்,நமது வம்சாவழியினரும் நமது இந்து தர்மத்தின் பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும்;ஆன்மீகப் பிரச்சாரம் மட்டும் செய்தால்,நமது இந்து மதத்தை இனிமேல் காப்பாற்றிட முடியாது;இந்து கண்ணோட்டத்தை அரசியல் ரீதியாக உருவாக்க வேண்டும்.இதுவும் புண்ணியம் தரும் செயல்தான்!!!

தெய்வபக்தியுடன் கூடிய தேசபக்தி கொண்டிருந்த பலர் இன்றும் நமது கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபட்டுக்கொண்டு இருக்கின்றோம்;இது ஈசனின் விருப்பம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

தெருவுக்கு ஒரு ஷாகா ஆரம்பிக்க வேண்டும்;ஒவ்வொரு கோவிலிலும் திருவிளக்கு பூஜை ஆரம்பித்து விடாமல் நடத்திட வேண்டும்;மதமாற்றத்தை முழுமையாக தடுத்துவிடுவோம்;தேசபக்தியும்,தெய்வ பக்தியும் நமது இரு கண்கள் என்பதை நமது வம்சாவழியினருக்கு போதிப்போம்;

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்து சமயத்தின் பெருமைகளை போதிக்கும் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும்;2020 க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 120 ஆன்மீகப் பேச்சாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.1964 முதல் 2018 வரை நாத்திகவாதிகள் நமது இந்து தர்மத்திற்கு எதிராகச் செய்த துரோகங்களை மக்களுக்குப் புரிய வைப்போம்;

நமது ஊரில் இருக்கும் பழமையான ஆலயங்களைப் பாதுகாக்க ஆலய பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்குவோம்;

இன்றைய இளைய இந்துக்களிடம் (12 முதல் 22 வயது வரை) இந்து மதம் பற்றிய விழிப்புணர்ச்சியை அடுத்த 50 ஆண்டுகளுக்கு உருவாக்குவோம்;

வறுமையாலும்,விரக்தியாலும்,வேலையின்மையாலும் வேறு மதங்களுக்கு வழிமாறிச் சென்ற நமது சகோதர,சகோதரிகளை மீண்டும் நமது பாரம்பரியத்திற்கு கொண்டு வருவோம்;நமது பாரத நாட்டை முழுமையான  இந்து தேசமாக ஆக்கிவிடுவோம்;

மனிதர்களுடைய துன்பங்களும்,அதன் தீர்வுகளும்

உலகில் பிறந்து வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவரும் ஏன் இந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்?

ஜன்ம ஜாதகப்படி உண்டாகும் செருக்கு(பரிவர்த்தனை யோகம் என்று ஜோதிடத்தில் கூறுவர்), செல்வச் செருக்கு,கல்விச் செருக்கு(வித்யா கர்வம்),புகழால் உண்டாகும் செருக்கு,புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்ததால் உண்டான செருக்கு, மாந்திரீக வித்தை கற்றதால் உண்டான செருக்கு போன்ற சில பல செருக்குகளால் (திமிரால்) போன 4 பிறவிகளில் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இந்த பிறவி எடுத்திருக்கின்றோம்.

நாம் ஒவ்வொருவருக்குமே இந்த பிறவி எடுக்கும் வரை, இன்னும் 2,00,000 ஜன்மங்கள் பிறவிப் பாக்கி இருக்கின்றது;இந்த பிறவி முடியும் போது,அது 6,00,000 பிறவிகளாக அதிகரித்துவிடுகின்றது;
போன 4 பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்களால் இந்த பிறவியில் இந்த வாழ்க்கைத் துணை,குழந்தைச் செல்வம்,சொத்துக்கள்,புகழ்,இந்த விதமான திறமை,இன்ன தொழில்,நட்பு வட்டம் என்று அமைந்துவிடுகின்றது;

போன 4 பிறவிகளில் செய்த பாவச் செயல்களால் இந்த பிறவியில் கடன்,வங்கிக் கடன்,கந்து வட்டி,நோய்கள்,அவமானம்,எதிரிகள்,துரோகிகள்,சொந்த வீடு அமையாமல் இருப்பது,வாழ்க்கைத் துணையிடம் இருந்து பிரிந்து வாழ்வது,பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் அல்லது வாரிசுகளின் அன்பும்,அரவணைப்பும் கிடைக்காமல் இருப்பது,ஏமாற்றங்கள்,தற்கொலை முயற்சி,மனக்குழப்பமான வாழ்க்கை,இந்து தர்மத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுதல்,வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவே மதம் மாறுதல் போன்றவைகள் அமைந்துவிடுகின்றன;

ஆன்மீகத்தின் அடிப்படை உண்மைகள் அறியாமல் பல கோடி மக்கள் நமது பாரத நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்;புத்திசாலித்தனமான நாத்திகப் பிரச்சாரம்,பிரபலமான கோவில்களில் நடைபெறும் அட்டூழியங்கள்,ஜோதிடத்தில் நடைபெறும் பித்தலாட்டங்கள்,நாத்திகக் கட்சியினர் செய்யும் சூதுவாது நிறைந்த செயல்கள் போன்றவைகளால் பல கோடி மக்களுக்கு ஆன்மீகம்,தெய்வத்தின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றது;இதை போலி ஆன்மீகவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்;1964 முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் நாத்திகவாதிகள் செய்த பலவிதமான சதிச் செயல்கள்,நாத்திகப் பிரச்சாரங்களால் இப்படிப்பட்ட அவநம்பிக்கை இந்து மக்களிடையே உருவாகிவிட்டது;இது மதமாற்ற பயங்கரவாதம் வெற்றி பெற காரணமாகி விடுகின்றது;

எந்த ஒரு மந்திரவாதியும் தான் கற்ற மாந்திரீக வித்தைகளை,தனக்குச் சமமான இன்னொரு மந்திரவாதியிடம் காட்டுவது கிடையாது;ஆன்மீகம்,தெய்வ நம்பிக்கையோடு மட்டும் வாழும் அப்பாவி மக்களிடம் தான் தனது மாந்திரீக வித்தையை காட்டுவது வழக்கம்;

இந்த கொடூரமான கலியுகத்திலும் கூட,பல லட்சம் இந்து மக்கள் அற்புதமான ஆன்மீக முன்னேற்றம் அடையவே மனிதப் பிறவி எடுத்துள்ளார்கள்;அதை அவர்கள் உணரும் முன்பாகவே,தீமை மட்டும் செய்யும் மந்திரவாதிகளால் அந்த ஆன்மீக முன்னேற்றத்தை இழந்துவிடுகின்றார்கள்;

1.பல நாட்கள்,பல மாதங்கள்,பல ஆண்டுகள் பறந்து செல்வது போன்று கனவு காண்பது

2.பறக்கும் குதிரையை கனவில் அடிக்கடி காண்பது

3.சூரியனை நோக்கி பறந்து செல்வது போன்று அடிக்கடி கனவு காண்பது

4.பறக்கும் யானையை கனவில் அடிக்கடி காண்பது

5.மிகவும் பழமையான கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு சன்னதியிலும் சாமி கும்பிடுவது போல அடிக்கடி கனவு காண்பது

6.தெய்வ உருவங்களை மிக அருகில் தரிசிப்பது போன்று அடிக்கடி கனவில் பார்ப்பது

7.கிராபிக்ஸ் செய்யப்பட்ட பறக்கும் பாம்பினை அடிக்கடி கனவில் பார்ப்பது;அதன் மேல் தோலானது பளபளப்பாக மின்னுவது போல தெரிவது

8.தேவலோகத்தை அடிக்கடி கனவில் பார்ப்பது

இப்படிப்பட்ட கனவுகளில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கனவு ஒருவருக்கு பல ஆண்டுகளாக வந்தால்,அவருக்கு இந்த பிறவியில் மிக முக்கியமான ஆன்மீக முன்னேற்றம் கிடைக்க இருக்கின்றது என்று அர்த்தம்;அந்த ஆன்மீக முன்னேற்றத்தை அடையும் வரையிலும் இந்தமாதிரியான கனவு வந்து கொண்டே இருக்கும்;

பெரும்பாலானவர்களுக்கு 12 வயது அல்லது 15 வயது முதல் இம்மாதிரியான கனவினை அடிக்கடி காண ஆரம்பிப்பார்கள்;ஆனால்,இவர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் 30 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் கிடைக்கும்;

இதன் உள்ளார்த்தம் இன்று பலருக்குத் தெரிவதில்லை;இதன் அர்த்தம் தெரியும் முன்பாகவே இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கான வாய்ப்பினை போலி ஆன்மீகவாதிகளால் இழந்துவிடுகின்றார்கள்;

இழந்த ஆன்மீக முன்னேற்றத்தை திரும்பப் பெற வராஹி ஜபம் தினமும் செய்து வர வேண்டும்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் முதல் குறைந்தது மூன்று ஆண்டுகள்,அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை வராஹி ஜபம் செய்து வந்தால்,இழந்த ஆன்மீக முன்னேற்றம் திரும்ப கிடைத்துவிடும்;பலருக்கு திரும்பக் கிடைத்திருக்கின்றது;

வராஹி ஜபத்தை எப்போதும் இரவில் மட்டுமே ஜபிக்க வேண்டும்;ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் ஜபிக்க வேண்டும்;

ரகசிய ஜபமுறைகளில் முக்கியமானது வராகி ஜபம்;எனவே,எல்லோருக்கும் தெரியும்படியாக வராகி ஜபம் செய்வதை தவிர்க்க வேண்டும்;உங்களிடம் பழகுபவர்கள் அனைவரும் உங்களை நேசிப்பார்கள் என்று எண்ண வேண்டாம்;

கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாருமே கிடையாது;ஆனால்,நம்முடைய கஷ்டத்தைப் பிறரிடம் சொல்லும் போதுதான் ஒரு திருப்தி கிடைக்கின்றது;கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் போனால் பலவிதமான நோய்கள் வருகின்றன;ஆஸ்துமா,ரத்த அழுத்தம்,ஞாபக மறதி போன்ற நோய்கள் வந்துவிடுகின்றன;நமது கஷ்டத்தை வெளியில் சொன்னால் ஒரு ஆத்ம திருப்தி;ஆனால்,எல்லோரிடமும் நம் கஷ்டத்தைச் சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்ல முடியாது;மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரியாது;
பிறகு,யாரிடம் போய் நமது கஷ்டத்தைச் சொல்வது?

ஈசனாகிய அருணாச்சலேஸ்வரரிடம் மட்டும் தான் நமது கஷ்டத்தை சொல்ல வேண்டும்;அதுவும் கிரிவலம் புறப்படும் போது சொன்னால்,அதை காது கொடுத்துக் கேட்பார் நமது ஜன்மாந்திர அப்பா அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்!கிரிவலத்தை முடித்த உடனே நமது கஷ்டங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அருள் புரிவார்;கடந்த 25 ஆண்டுகளில் அடியேன் அனுபவத்தில் கண்ட ஆன்மீக  உண்மை இது;

அதே சமயம்,நமது கஷ்டங்களை எல்லாம் அருணாச்சலேஸ்வரரிடம் கூறி பிரார்த்தனை செய்தால்,நமது கஷ்டத்தை நிவர்த்தி செய்தாலும் சரி; அல்லது செய்த பாவத்திற்கு தண்டனை கொடுத்தாலும் சரி;அல்லது கஷ்டத்தை மாற்றாமலேயே அதைத் தாங்குகின்ற மனப் பக்குவத்தை நமக்கு கொடுத்தாலும் சரி;என்ற மனோபாவம் எப்போது நமக்கு வருகின்றதோ,அப்போது ஈசனாகிய அருணாச்சலேஸ்வரர் நமது கஷ்டங்களை வாங்கிக் கொண்டு நமக்கு மன உளைச்சல் இல்லாத வாழ்க்கையை தருகின்றார்;

கஷ்டங்கள் நிரந்தரமாகத் தீர பலவிதமான பரிகாரங்கள்,பூஜைகள்,தியான முறைகள் இருக்கின்றன;மிக எளிமையான பரிகாரம் என்னவென்றால் ஒவ்வொரு சிவராத்திரிக்கும் அண்ணாமலை கிரிவலம் வருவதுதான்;3 ஆண்டுகளுக்குள் 108 முறையும்,10 ஆண்டுகளுக்குள் 1008 முறையும் அண்ணாமலை செல்வதுதான்;

108 முறை கிரிவலம் நிறைவு செய்துவிட்டாலே இப்பிறவி முழுவதும் கஷ்டங்கள் தீர்ந்து சுகமான வாழ்க்கை வாழ முடியும் என்பது அனுபவ உண்மை ஆகும்;

1008 முறை கிரிவலம் நிறைவு செய்துவிட்டாலே இதுவரை எத்தனை பிறவிகளில் செய்த அனைத்து கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;இதில் புண்ணிய கர்மாவும்,பாவ கர்மாவும் சேர்ந்தே தீர்ந்துவிடும்;திரும்பவும் இந்த பூமியில் பிறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது;முக்தி கிடைத்துவிடும்;

நமது நட்சத்திர சத்குருவின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவோம்;இதனால்,நமது அடுத்த கட்ட ஆன்மீக வாழ்க்கைக்கு தயாராகிவிடுவோம்;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Wednesday, December 12, 2018

தமிழர்களின் ஆதிகுரு அகத்தீஸ்வரர் ஆலயங்கள் பட்டியல்-52

தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;

இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)

26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.

38.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,காலடிப்பேட்டை,திருவொற்றியூர் அருகில்,சென்னை;

39.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

40.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

41.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

42.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

44.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

45.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

46.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

47.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

48.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

49.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

50.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

51.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;

நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;

அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;

எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;

அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;
அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!
தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

Thursday, November 29, 2018

ஒரு நாள் வழிபாட்டினால் ஒரு மாதம் வருமானம் அதிகரிக்கின்றது!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)

ஹேவிளம்பி வருடம்,    கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 30.11.2018 வெள்ளிக்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை  இருக்கின்றது.

 வெள்ளிக்கிழமை   இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணி வரை அமைந்திருக்கின்றது.

இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;

(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!

18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி: 29.12.2018 சனிக்கிழமை காலை 8.45 முதல் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.59 வரை அமைந்திருக்கின்றது;சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியாக இருப்பதால்,ரிஷபம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியில் பிறந்தவர்கள் ,இந்த நாளில் பைரவ ஜபம் செய்தால் சனியின் கடுமையான தாக்கத்தில் இருந்து மீள வழி கிடைக்கும்;

Wednesday, November 28, 2018

அகத்தீஸ்வரர் ஆலயங்களின் பட்டியல் 50

தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;

இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;