Monday, April 8, 2013

நமது இந்து தர்மத்துக்கு எதிராக ஒரு விளம்பரம் வந்தாலும் தாங்கள் செய்ய வேண்டியது இது.....


பாவ புண்ணியம் பற்றி (காஞ்சி) பரமாச்சாரியார் அவர்களின் உபதேசம்!!!


முருகக்கடவுளின் ஆச்சரியமூட்டும் அருளாற்றல்கள்!!!


சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-8






ஹிந்துக் கோவில்கள்=நமது ஆத்ம சக்தியைப் பெருக்கும் சக்தி மையங்கள்!!!


பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Wednesday, April 3, 2013

தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள்=2



தினமும் காலையில் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும்;இந்த பதிவை வாசித்த மறுநாளே மூன்று லிட்டர் மொத்தமாக அருந்த ஆரம்பிக்கக் கூடாது;கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்தி வர வேண்டும்;வாரம் அரைலிட்டர் வீதம் ,இவ்வாறு பழக்கப்படுத்தும் நாட்களில் இந்த தண்ணீரை அருந்திய அடுத்த அரைமணி நேரம் வரை காபி,டீ,குளிர்பானங்கள்,ஹார்லிக்ஸ்,பூஸ்ட் முதலானவைகள் எதையும் அருந்தாமல் இருக்க வேண்டும்;இப்படி தொடர்ந்து 180 நாட்கள் பழகிவிட்டால்,நமது உடல் பரிபூரணமான ஆரோக்கியமாகிவிடும்;ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீருக்கு மேல் அருந்தக் கூடாது;மாநகரங்களில் பல வீடுகளில் மூன்று வேளையும் மினரல் வாட்டர் அருந்தும் பழக்கம் வந்திருக்கிறது;மினரல் வாட்டர் மட்டும் அருந்துபவர்கள்,தமது உடல் ஆரோக்கியப் பராமரிப்பில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பது உண்மை.அதே சமயம்,மினரல் வாட்டர் உடலின் நோய் எதிர்ப்புத்திறனின் உள்கட்டமைப்பைச் சிதைத்து வருகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? இது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை பன்னாட்டு நிறுவனங்கள் பணபலத்தால் வெளிவராமல் மறைத்துவிட்டன;இயற்கையான தண்ணீரில் இருக்கும் அனைத்து சத்துக்களும் மினரல் வாட்டரில் சுத்தமாக நீக்கப்படுகின்றன;வெறும் ‘சத்தில்லாத தண்ணீர்’தான் மினரல் வாட்டராக நாம் அருந்துகிறோம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எப்போதும் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்கள் வரையிலும் எவரிடமும் பேசாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ப்ளாட்டின நிமிடங்கள் இந்த நிமிடங்களே!!!
என்னதான் வேகமான வாழ்க்கை என்று நாம் மாறினாலும் நமது உடல் இன்னும் அதற்குத் தயாராகவில்லை என்பதே உண்மை.எனவே,வேகமாக ஒவ்வொரு செயலையும் தினமும் செய்து,செய்து சில வருடங்களிலேயே  நாம் ஒவ்வொருவரும் மாரடைப்பு,ஆஸ்துமா,சுவாசக்கோளாறு,ஆண்மைக்குறைவு/பெண்மைக்குறைவு என்று மாட்டிக்கொண்டு அதன் பிறகு ஆரோக்கியத்துக்கு ஆயிரக்கணக்கில்/லட்சக்கணக்கில் செலவழிக்கலாமா?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த ஒரு இழிவான நிலையில் இருந்தாலும் சரி;அல்லது எந்த ஒரு உயர்வான புகழில் இருந்தாலும் சரி;நிச்சயமாக உங்களது பிறந்த ஜாதகப்படி முற்பிறவி கர்மாக்கள்,இந்தப் பிறவியில் செய்த பாவவினைகள் என்று ஒரு சுமை இருக்கத்தான் செய்யும்.ஒருவரது பிறந்த ஜாதகத்தை வைத்து நாம் திருமணம் செய்ய,வேலை தேட,செல்வச்செழிப்பை அடைய,ராசியான எண்ணைத் தேர்ந்தெடுக்க,ராசியான நிறத்தைத் தேர்வு செய்து அதற்கு ஏற்றாற்போல வீடு.வாகனம்,ஆடைகளைத் தேர்வு செய்யலாம்;ஆனால் அதற்காக மட்டும் கடவுள் நமக்கு அந்த ஜாதக அமைப்பில் பிறக்க வைக்கவில்லை;
இதுவரை செய்த தவறுகள்,திமிரான நடவடிக்கைகள்,பொறாமையால் பிறருக்குச் செய்த கேடுகள்,ரத்த உறவுகளுக்கும் நெருங்கிய நட்புகளுக்கும் செய்த துரோகங்களை அறிந்து அதிலிருந்து மீள்வதற்கான சூட்சுமங்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன;அந்த சூட்சுமங்களை திறமை வாய்ந்த ஜோதிடர்களைக் கொண்டு கண்டறிந்து அதிலிருந்து இந்தப் பிறவியிலேயே மீண்டு இந்த பிறவியிலும் அடுத்தப் பிறவியிலும் நிம்மதியாகவும்,வசதியாகவும்,ஜாலியாகவும் வாழவே பிறந்த ஜாதகம் இருக்கிறது;இது பலருக்குப் புரிவதில்லை;யாரையுமே நம்பாதது போல உண்மையை மட்டும் ஜாதகம் பார்த்துச் சொல்லும் ஜோதிடரையும்/அருள்வாக்கு சொல்பவரையும் சந்தேகப்படுகின்றனர்;அரிய அபூர்வமான ஆன்மீக வழிகாட்டியை தனது சந்தேகபுத்தியால் அல்லது பணக்கணக்கு போட்டு விலகிச் சென்றுவிடுகின்றனர்;

இருப்பினும்,சரியான ஆன்மீக குருவை இந்தப்பிறவியிலேயே சந்திக்க விரும்புவோர் ஒரு எளிய வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்;அது என்னவெனில்,மாதம் ஒரு வியாழக்கிழமை தோறும் அண்ணாமலைக்குச் சென்று அன்று இரவுக்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;இவ்வாறு மாதம் ஒரு வியாழக்கிழமை வீதம்,குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து கிரிவலம் சென்றால், நிச்சயமாக அவரவரின் சுபாவம்,பிறந்த நட்சத்திரம்,செய்யும் தொழில் இவற்றுக்கு ஏற்றாற்போல ஒரு சரியான ஆன்மீக குருவை அடைவர்.வியாழக்கிழமை செல்ல முடியாதவர்கள் அவரவரின் வாரவிடுமுறைநாளில் இவ்வாறு மூன்று ஆண்டுகளுக்கு கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு செல்லும்போது மஞ்சள் நிற ஆடை அணிந்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு மனதுக்குள் “ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ” ஜபித்தவாறு கிரிவலதூரம் முழுவதும்(பதினான்கு கி.மீ) யாரிடமும் பேசாமல் பயணிக்க வேண்டும்;தொடர்ந்து இவ்வாறு ஐந்து முதல் பத்து வரை பயணித்தப் பின்னர்,உள்பிரகார கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமையும்;(தற்போது இந்த கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் சட்டப்படி தடைவிதித்திருக்கிறது);


அவ்வாறு உட்பிரகார கிரிவலம் ஐந்துமுறை வரை சென்றப்பின்னர்,உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தின் மூலமாக சரியான ஆன்மீக குருவை அடைவீர்கள்;அதன் பிறகும்,மூன்று ஆண்டுகள் வரை அதாவது முப்பத்தாறு தடவை வரை வியாழக்கிழமை அல்லது வாரவிடுமுறைநாட்களில் கிரிவலம் சென்றால் மட்டுமே அந்த ஆன்மீக குருவின் நெருங்கியத் தொடர்புக்கு வருவீர்கள்;நீங்கள் உரிமையோடு அவரை எப்போதும்,முன் அனுமதியின்றி சந்திக்கும் பாக்கியம் உண்டாகும்.(நம்மவர்கள் எதையும் சோடா பாட்டில் உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்;ஓ! ஸாரி!!! பெப்ஸி பாட்டில் உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்;அதோடு சரி;ஒரு வழிமுறையை முழுமையாகப் பின்பற்றுவோர் மிக மிகக் குறைவு.இப்படிப்பட்டவர்களுக்கு மன உறுதி குறைவு;ஆன்மீகம் பற்றிய விஷயத்தில் ஆர்வக் கோளாறு மட்டுமே உண்டு)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழில் ஏராளமானவர்கள் வலைப்பூக்கள் எழுதுகிறார்கள்;எழுத்தாற்றலை வலைப்பூ மூலமாகவே வளர்த்துக்  கொள்கிறார்கள்;பலருக்கு ஒரே ஒரு ஜிமெயிலைக்கொண்டே சுமார் 300 வலைப்பூக்கள் இலவசமாக நடத்திட முடியும் என்ற தொழில்நுட்ப உண்மை தெரியாது;1970களில் பிறந்தவர்கள் வலைப்பூக்களிலும்,1980களில் பிறந்தவர்கள் முகநூலிலும்,1990 களில் பிறந்தவர்கள் முகநூல்,ஜிப்ளஸ்ஸிலும்,ட்விட்டரிலும், ஐக்கியமாகிவிட்டார்கள்;மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத் துறைகளிலும்(அரசியல்,ஆன்மீகம்,ஜோதிடம்,மருத்துவம்,சித்த மருத்துவம்,மாந்திரீகம்,வைஷ்ணவம்,சைவம்,பயணம்,சமையல்,காம வக்கிரம்,நகைச்சுவை,இணையத் தொழில்நுட்பம்,கேலிகிண்டல்,வரலாறு,சிந்தனை,நாத்திகம்,மார்க்ஸிஸம்,ஆத்திகம்,கட்சிக்கொள்கை,பத்திரிகையுலக அனுபவம்,காவல்துறை அனுபவம்,ஓவியப் படைப்புகள்,புகைப்படம் பற்றிய அடிப்படை,செல்போன் வாங்குவது பற்றிய அடிப்படை,பெண்ணியம்,தலித் இலக்கியம்,தமிழ் இலக்கியம்,சரசக் கலை,மருந்துகளின் வரவுகள்,கணினியைப்பாதுகாக்கும் இலவச தொழில் நுட்பம்,ஈழ அரசியல்,சட்ட நுணுக்கம்,இணையம் வழியாக சம்பாதிக்கும் வழிமுறை,பேனா நட்பு,காம நட்பு,தியானம்,சினிமா தொழில் அனுபவம்,சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்,சினிமா கிசுகிசு,ஹாலிவுட் திரைப்படங்கள் விமரிசனம்,தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வீடியோவாகவும்,ஆடியோவாகவும் பதிவேற்றுதல்,ஆன்மீகப்பாடல்களை சேகரித்தல்,மகான்களின் வாழ்க்கக வரலாற்றைச் சேகரித்தல்,புதிய கண்டுபிடிப்புக்களைப் பற்றி எழுதுதல்,வட்டாரப் பிரச்னைகளை விரிவாக ஆதாரத்துடன் வெளியிடுதல்) எழுதித் தள்ளுகிறார்கள்;இதில் அவர்களாகவே ஒரு குழுவாக பிரிந்து இன்னொரு குழுவை கிழிகிழி என்று கிழிக்கிறார்கள்;ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவுக்குள் உளவாளியை ஊடுருவி அந்தக் குழுவை பிளக்கிறார்கள்;நடைமுறைக்கு ஒவ்வாத வலைப்பூக்களை தொடர்ந்து எழுதுகிறார்கள்;தொடர்ந்து நடத்த முடியாமல் புதுபுது வலைப்பூக்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள்;
மறுபக்கம் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் இருக்கும் இணைய ஜாம்பவான்கள் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்;அவ்வாறு அறிமுகப்படுத்தும் முன்பே எந்த தொழில்நுட்பம் எந்த நாட்டில் பிரபலமாகும் என்பதை அவர்கள் முன் கூட்டியே மதிப்பிட்டுத்தான் அறிமுகப்படுத்துகிறார்கள்;ஏனெனில்,300 ஆண்டுகளாக நம்மை ஆண்ட கிறிஸ்தவ ஆங்கிலேயனால் இந்தியாவின் ஆணிவேர்களை அசைக்க முடியவில்லை;யார் எந்த விதத்தில் திறமையானவர்கள் என்பதைக் கண்டறியமுடியவில்லை;அதற்கென்று தகுதியான உளவாளிகளை அவர்களால் உருவாக்கிட முடியவில்லை;அவர்களைப் பொறுத்த வரையிலும் உலக அரசியலில் தம்மைத் தவிர எந்த நாடும் பணபலத்தோடு எழுந்துவிடக்கூடாது என்ற ஒரே ஒரு நோக்கமே இந்த தொழில்நுட்பத்தை உலக அளவில் பிரபலப்படுத்தக் காரணம்! ஒரு காலம் வரும்! அது கி.பி.2100 ஆக இருக்கலாம்;அல்லது கி.பி.2400 ஆகவும் இருக்கலாம்;தேவைப்படும் போது நமது நாட்டில் இருக்கும் இந்து தர்மத்தின் துறைவாரியான வல்லுநர்களை தமது மதத்திற்கு மாறச் சொல்வார்கள்;அவ்வாறு மாறாதவர்களை கொல்வார்கள்;இதை வாசிக்கும் போது இது ஏதோ பைத்தியக்காரன் எழுதியது போலத்தான் இருக்கும்;ஆனால்,இந்து தர்மத்தை அழித்தொழிப்பதில் இறுதிக்கட்டமே இந்த தொழில்நுட்பயுகத்தின் நோக்கம்!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க ஒரு சுலபமான வழி உண்டு;அது என்னவெனில்,தினமும் ஐந்து பக்கங்களுக்கு ஏதாவது ஒரு கதை,கட்டுரையை நோட்டு/காகிதத்தில் எழுத வேண்டும்;இணையம் அல்லது எம்.எஸ்.வேர்டில் எழுதக் கூடாது;அதே சமயம்,அந்த கதை/கட்டுரையானது வேறு ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து எழுதாமல் உங்கள் சிந்தனையில் இருந்து புறப்பட்டதாக இருக்க வேண்டும்;மேலும்,அப்படி ஐந்து பக்கங்களுக்கு எழுதி முடிக்கும் வரையிலும் வேறு எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது;செல்போன்,டிவி,இணையம் என்று வேறு எந்த கவனத்திசைதிருப்பலும் இல்லாமல் எழுத வேண்டும்;இவ்வாறு தினமும் எழுதிக்கொண்டே வந்தால் நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும்;இந்த உண்மையானது மனோதத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட உடலியல் உண்மை ஆகும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எப்போதும் இது நடக்காது;அது முடியாது;எனக்குத்தான் அப்பவே தெரியும்ல, நான் தான் அன்றைக்கே சொன்னேனே,இது முடியாது என்று எப்போதும் நெகடிவ்வாகப் பேசுபவர்கள்,எப்போதும் எதையும் குறை சொல்பவர்களை உங்கள் அருகில் வைத்துக்  கொள்ளாதீர்கள்;இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையையும் தகர்த்து உங்களை நடைபிணமாக ஆக்கிவிடுவார்கள்;இப்படிப்பட்டவர்களின் உறவை முறித்துவிடுங்கள்;இவர்கள் தானும் வளரமாட்டார்கள்;நம்மையும் வளரவிட மாட்டார்கள்;இவர்கள் உங்கள் அறைத்தோழராக/தோழியாக/உடன் பணிபுரிபவராக இருந்தால் இவர்களை விட்டு எவ்வ்வ்வளவு வேகமாக விலகுகிறீர்களோ அவ்வளவு நல்லது என்பதை உணருங்கள்;
இந்த குணமுடையவர்கள் வீட்டிற்கு ஒருபோதும் செல்லாதீர்கள்;அவ்வாறு செல்லும் சூழ்நிலை(ஒருவேளை) உண்டானால் முப்பது நொடிகளுக்கு மேல் அங்கே இருக்காதீர்கள்;இப்படிப்பட்டவர்களின் வீட்டில் பிரகாசமான விளக்குகள் எரிந்தாலும்,ஒருவித ஏக்கம் பரவியிருக்கும்;நீங்கள் முப்பது நொடிகளுக்கும் மேலாக அங்கே இருந்தால் உங்களது தன்னம்பிக்கையைத் தகர்த்துவிடும்;
இந்த குணமுடையவர்களிடம் ஒருபோதும் உங்களது சிறு சாதனையைக் கூடச் சொல்லாதீர்கள்;உங்களது சிறு சாதனையைப் பற்றிய செய்தி கூட செல்லாதபடி கவனமாக இருங்கள்;அதேபோல உங்களுடைய சிறு அவமானங்கள்/தோல்விகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்;உங்களை மனோரீதியாக முடமாக்கிவிடுவார்கள்;சிலருக்கு இப்படிப்பட்டவர்களே வாழ்க்கைத் துணையாக அமைந்துவிடுவதுண்டு;அது அவர்களின் விதி என்றுதான் சொல்ல வேண்டும்;
பிறவி சுபாவம்,ஆயுள் இந்த இரண்டையும் அவ்வளவு சுலபத்தில் ஜாதக ரீதியாகவோ,ஜாதக மனோதத்துவ வழிகாட்டுதல் படியோ மாற்றிவிட முடியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பல ஆன்மீக எழுத்தாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்கள் ஏராளமான சிவமந்திரங்களை ஜோதிட மாத இதழ்களிலும்,வலைப்பூக்களிலும்,மின் அஞ்சல் வழியாகவும் வெளியிடுகிறார்கள்.இதில் மாந்திரீக மந்திரங்களும் உண்டு;அவ்வாறு யார் முதலில் எழுதி வெளியிடுகிறார்களோ அவர்கள் அடுத்த சில வாரங்களில் இருந்து எதிர்பாராத சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள்;அவர்களுக்கு ஏற்படும் அந்தச் சிக்கல்களுக்கான காரணம் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியாது;ஒரு ஆன்மீகக்கட்டுரையை வெளியிட்டால்,அதை வாசித்த உடனே பலர் அதை காப்பி,பேஸ்ட் செய்து தமது வலைப்பூ அல்லது இணையதளம்,முகநூல்,டுவிட்டர் மற்றும் மின் அஞ்சல் வழியாக வெளியிடுகிறார்கள்;பரப்புகிறார்கள்;அது பெரும்பாலும் தவறான ஆட்களைப் போய்ச்சேருகிறது;அந்த தவறான ஆட்கள் அதை தினமும் ஜபிக்க ஆரம்பிக்கிறார்கள்;அதுவும் நாம் சொல்லியுள்ள வழிமுறையில் மட்டும் ஜபிக்காமல் தமது சொந்த சிந்தனைப்படி ஜபிக்க ஆரம்பிக்க,அவ்வாறு செய்பவர்களின் உடல் ஆரோக்கியம்,மனவலிமை கெட்டுப்போகிறது;


தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே தகுதியான சிவமந்திரத்தை(எந்த மந்திரத்தையும்) நேரில் போதிக்க வேண்டும்;(சொல்லிக் கொடுக்க வேண்டும்)கூடவே,அவர்கள் அதை ஒழுங்காக ஜபிக்கிறார்களா ? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.முறையாக ஜபித்தால்,அந்த மந்திரத்தை ஜபிக்க சொல்லிக்கொடுத்தவரது ஆன்ம சக்தி அதிகரிக்கும்;முறையாக ஒரே ஒருவர் மட்டும் அந்த மந்திரத்தை ஜபிக்காவிடில்,நேரில் உபதேசம் வாங்கியவர்களுக்கு பலவிதமான சோதனைகள்,பிரச்னைகள்,உடல் உபாதைகள் வரும்;எனவே,வலைப்பூக்கள் நடத்துபவர்கள் இதுவரை தாங்கள் வெளியிட்டிருக்கும் சிவமந்திரங்கள் பற்றிய பதிவுகளை உடனடியாக நீக்கிவிடுவது நல்லது;
நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று,நீச்சலே தெரியாவனுக்கு நீந்தச் சொல்லித்தருவது போன்றது யார் வேண்டுமானாலும் மந்திரங்களைப் பற்றி பதிவுகள் எழுதி வெளியிடுவது;சரியாக நீந்தத் தெரியாதவர்களால் நீந்தச் சொல்லிக் கொடுப்பவரையே அது ஆழ்கடலுக்குள் ஆழ்த்திக் கொன்றுவிடும்.ஜாக்கிரதை!!!


ஓம் அகத்தீசாய நமஹ; ஓம் அருணாச்சலாய நமஹ என்ற மந்திரத் தொகுப்பை யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;இரண்டே இரண்டு கட்டுப்பாடுகள் தான் அதை ஜபிக்கத் தேவை;ஒன்று இருபத்தோரு வயதுநிரம்பியிருக்க வேண்டும்;இரண்டு :=அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தியிருக்க வேண்டும்.


நான் இரண்டு ஆண்டுகளாக தினமும் காலையில் ஒரு மணி நேரம்,மாலையில் ஒரு மணி நேரம் என்று ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தேன்;அதன் மூலமாக எனது கடும் மனப்பிரச்னைகள் தீர்ந்தன;பிரிந்திருந்த எனது குடும்பம் ஒன்றானது;அதன் பிறகு,எனது ஆன்மீக குரு அருணாச்சலேஸ்வரரிடம் அனுமதி கேட்டேன்;அவர் ஒப்புதல் அளித்தமையால் ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ என்ற மந்திரத் தொகுப்பினைப் பரப்பிட தனி இயக்கம் ஒன்றைத் துவக்கியிருக்கின்றோம்;    ஆனால்,மந்திரங்களை வெளியிடுவோர் அப்படியா செய்தார்கள்?
#########################################################                                         சிவன் சொத்து குல நாசம்;பெருமாள் சொத்து பெரு நாசம் என்பவையெல்லாம் இன்றும் நிரூபிக்கப்படும் உண்மைகள்;இந்த பழமொழியை நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்;கோவிலுக்குச் சென்றால்,கோவிலில் தரப்படும் விபூதி,குங்குமத்தைக் கூட அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகிறோம்.இது மாபெரும் தவறு.கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள்,கடைகளை ஆக்கிரமித்துக் கொண்டு அல்லது உரிய வாடகை/விளைச்சல்களைத் தராமல் இருந்தால் மட்டுமே சிவன் சொத்து குலநாசம் என்பது செயல்படும்.                         ##########################################################
பல கோவில்களில் நமக்குத்தரப்படும் விபூதிகளை வீட்டிற்குக் கொண்டு செல்ல சதுரமான காகிதங்கள் முறையாக கிழிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும்;இவைகள் பெரும்பாலும் தினசரி(செய்தித்தாள்கள்)களில் இருந்து கிழிக்கப்படுகின்றன;இவ்வாறு தினசரி செய்தித்தாள்களை கிழித்து வைப்பது தவறு;ஏன் என்பதை நமது ஆன்மீககுருவிடம் கேட்டபோது, “நாம் கோவிலுக்குச் சென்று நமது பிரச்னைகளை மனப்பூர்வமாக நினைத்து வேண்டுகிறோம்;நமது பிரார்த்தனை வெற்றிபெறவே விபூதி,குங்குமம்,மஞ்சள் காப்பு போன்றவைகள் தரப்படுகின்றன;அவ்வாறு நாம் வாங்கும் விபூதி,குங்குமம்,மஞ்சள்காப்பு போன்றவைகள் அச்சிடப்படாத காகிதங்களில் மடிக்கப்பட்டு நாம் எடுத்துச் சென்றால் நமது கோரிக்கைகள் உடனே நிறைவேறும்;எனவே,கோவில்களுக்கு விபூதி மடிக்க காகிதம் வடிவாக கிழிப்பவர்கள் வெற்று வெள்ளைக்காகிதம் அல்லது மஞ்சள் நிறக்காகிதத்தைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;உரிய கோவிலுக்கும்,வழிபட வரும் பக்தர்களுக்கும்!!!

Monday, April 1, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழிபாடு!!!




நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;


கடந்த  மூன்று ஆண்டுகளாக ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த ஆராய்ச்சியை  செய்து,கிடைத்த அற்புத முடிவு இது;இந்த ஆராய்ச்சியில் இருபது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சிக்க்கு ஒத்துழைப்புக் கொடுத்து,தமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை உணர்ந்து பகிர்ந்து கொண்டனர்.


பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)                             28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.


பங்குனி மாதத்து தேய்பிறை அஷ்டமி 3.4.13 புதன்கிழமை முழுவதும் வருகிறது.இந்த நாளில் ராகுகாலம் மதியம் 12 மணி முதல் 1.30 வரை வருகிறது.எனவே,உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:விஜய வருடத்தின் முதல் மற்றும் சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=2.5.13 வியாழக்கிழமை காலை பத்து மணி இருபத்தைந்து நிமிடத்தில் இருந்து 3.5.13 வெள்ளி காலை மணி எட்டு,நிமிடம் இருபத்தெட்டு வரை அமைந்திருக்கிறது.


ஓம் சிவசிவ ஓம்