சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.
ஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும்.
எனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும். ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது. எனவே அவர்கள் ரத்த வங்கியில் இருந்து வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு ரத்ததானம் செய்யலாம். இதிலும் ஓரளவு பலன் கிடைக்கும்.
அதாவது விபத்து ஏற்பட்டு அதன் மூலம் ரத்தம் இழப்பதை விட, தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து விட்டால், விபத்துகளில் சிக்குவதையும் தவிர்க்க முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறைப் பரிகாரத்தை (ரத்த தானம்) செவ்வாய் மோசமாக இருப்பவர்களுக்கு வலியுறுத்துகிறேன்.
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Wednesday, January 4, 2012
மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?
40, 45 வயதைக் கடக்கும் போது, வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நாம் யாரையாவது திட்டியிருக்கிறோம், அவமானப்படுத்தியிருக்கிறோம் என்ற சிந்தனை வருகிறது. அவரை அப்படி சொல்லியிருக்கக் கூடாது, அவரைப் போய் அப்படி திட்டிவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வயதில் நாம் கூட வளராமல் இருந்திருப்போம். இப்படிப்பட்ட சிந்தனை வரும்போது, மீண்டும் அவர்களிடம் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பும் இருக்காது. இப்படிப்பட்ட உள் உளைச்சல் இருக்கும்போது என்ன பரிகாரம் செய்யலாம்.
இந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.
இதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.

கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் என்ன?
கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
கால சர்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும்.
எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

கால பைரவர் சிறப்பு என்ன?
பைரவர்களுடைய வகைகளில் வரக்கூடியவர்தான் கால பைரவர். மன்னர்களுடைய வழிபாட்டில் பெரிதும் கால பைரவர் இருந்தார். சங்க காலத்தில் பார்த்தால், மன்னர்களுக்கென்று கால பைரவர் வழிபாடு தனியாக இருந்தது. அவர் எல்லா காலத்தையும் மாற்றக்கூடியவர். எந்தக் காலத்தில், எந்த நேரத்தில் அரசன் சிலவற்றை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர். வெளி மாநிலங்களில் மட்டுமல்ல, சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் கால பைரவர் இருக்கிறார்.
கால பைரவரின் சிறப்பு என்னவென்றால், ஒருவருக்கு எந்த கெட்ட நேரம் நடந்தாலும் அதனை மாற்றக்கூடியவர். முத்திரைகள், தரிக்கக்கூடிய ஆயுதங்கள் இதெல்லாம் ஒவ்வொரு பைரவருக்கும் வித்யாசப்படும். அதனால் கால பைரவர் கொஞ்சம் உக்கிரமாக இருந்து எல்லாவற்றையும் செய்யக்கூடியவர்.

அஷ்டமி, நவமி அன்று எதையும் தொடங்க பயப்படுவது ஏன்?
சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள்.
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.
அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.
நவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

திருவொற்றியூர் வடிவுடை அம்மன் - பரிகாரத் தலம்
திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தலம் மிகவும் விசேஷமானது. இந்த அம்மனை சென்னை மாநகரத்தினுடைய ஈசானியக்காளி என்று சொல்லலாம். அந்தக் காலத்தில் சோழர்கள் ஒவ்வொரு திக்கிலும் காளியை வைத்து வழிபடுவார்கள். சோழ சாம்பிராஜ்ஜியத்தினுடைய ஒரு திசையில் இருக்கக்கூடிய காளிதான் திருவக்கரை வக்கிரக்காளி. திண்டிவனம் பக்கத்தில் இருக்கிறது. அதோடு சோழ சாம்பிராஜ்ஜியம் முடிந்தது. அதன்பிறகு, அவர்கள் பல்லவ சாம்பிராஜ்ஜியத்தைப் பிடிப்பதற்காக அந்தக் காளியை அங்கு பிரதிஷ்டை செய்தார்கள். அதன்பிறகுதான் போர் தொடுத்தார்கள். அதன்பிறகுதான்
சோழர்களுக்கு முழு வெற்றியும் கிடைத்தது.
அந்தக் காலத்தில் மன்னர்கள் அஷ்ட திக்குகளிலும் கோயில்களை எழுப்புவார்கள். அதில் வன தெய்வங்களுக்கு அவர்கள் முக்கியத்தும் தருவார்கள். அந்தக் காளியினுடைய பார்வை, பாவிக்கிறார்களே அதனை கொஞ்சம் குறுக்காக எதிரியின் எல்லையை நோக்கியது போல் வைப்பார்கள். நேரடியாக வட திசையையோ, கிழக்கு திசையையோ நோக்கி முகத்தை வைக்காமல், கொஞ்சம் கோணத்தை மாற்றி வைப்பார்கள். அதுபோன்று இருக்கும் அம்மனுக்கு சம்கார குணம் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சம்கார குணம் மற்றும் சாத்வீக குணம் இரண்டும் அமைந்ததுதான் திருவொற்றியூர் வடிவடை அம்மன். அதைச் சுற்றிலும் பட்டிணத்தடிகளார் ஜீவ சமாதி எல்லாம் அமைந்திருக்கிறது.
சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு மற்றும் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு ஊருக்கும் எல்லைத் தெய்வம் உண்டு. அதுபோல, சென்னை நகரத்தினுடைய ஈசானி எல்லை, அதாவது வடகிழக்குப் பகுதி எல்லைத் தெய்வமாக திருவொற்றியூர் வடிவுடை அம்மன் இருக்கிறார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது, அங்கு ஈசானி லிங்கம் என்று ஒன்று உண்டு. அதுபோன்றுதான் ஈசானிய அம்மன், ஈசானிய காளி. இந்த ஈசானிய அம்மனை வழிபட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும்.

Subscribe to:
Posts (Atom)