Saturday, October 31, 2009

ஏரிக்குப்பம் சனி ஆலயம்


சனிப்பரிகாரஸ்தலங்களில் பழமையானது ஏரிக்குப்பம்

கோவில்களில் இருக்கும் தெய்வீகவிக்கிரகங்கள் அதன் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் செப்புயந்திரத்தகடுகளால்தான் தெய்வீகசக்தி பெறுகின்றன.இந்த தெய்வீகசக்திகொண்ட தகடுகள் பல லட்சம் தடவை மந்தர உரு ஏற்றப்பட்டு கோவில் மூலஸ்தானத்தில் பதிக்கப்படுகின்றன.இதன் மீது தான் தெய்வீகசிலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன.

ஆனால்,கல்லில் யந்திரத்தகடு ஒன்றை சித்தர்கள் பொருத்தி சுயம்புசனீஸ்வரரை வழிபட்டஸ்தலமே ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரபகவான் திருக்கோவில்.ஏரிக்குப்பம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் அஞ்சலில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு ஆரணியிலிருந்து நடுக்குப்பம் வழியாக படவேடு கிராமத்திற்கு செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது.
வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள சந்தவாசல் கிராமத்திலிருந்து ஆரணிக்கு வரும் வழியில் 3 கி.மீ.தூரத்தில் உள்ளது.இந்த கோவில் போகர் 3000 என்ற வைத்திய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுயம்புசனீஸ்வரனாகிய இவர் ஏராளமான அற்புதங்களை செய்து வருகிறார்.
ஏரிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வலது கை மூட்டு விலகி சிரமப்பட்டு வந்தார்.இந்தக் கோவிலுக்கு வந்துவழிபட்டு வந்ததால்,குணமாகி பழையபடி கை செயல்படத்துடங்கியுள்ளது.

சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால் வீங்கி நடக்க முடியாமலும்,கால்களை மடக்க முடியாமலும் பாதிக்கப்பட்டு இருந்த போது, ஒரு உதவியாளருடன் சனிக்கிழமைதோறும் வந்து வழிபட்டுக்கொண்டே இருந்தார்.இன்று அவரது கால்கள் குணமடைந்து யாரது உதவியுமின்றி நடமாடத்தொடங்கிவிட்டார்.

திருமணமாகாத பெண்கள் 9 வாரம் (சனிக்கிழமைதான்) இங்கே வந்து ஒவ்வொரு வாரமும் 9 விளக்குகள் ஏற்றி வழிபட்டுவந்துள்ளனர்.அவர்களுக்கு திருமணம் நடந்துவருகின்றது.

சரி! ஏரிக்குப்பம் சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்?

சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை,சனிப்பிரதோஷம் நாட்கள்,சனிப்பெயர்ச்சிநாட்கள், 8,17,26 ஆம் தேதிகளில் இங்குவந்து பீடத்தில் அமர்ந்து 108 முறை ஜபிக்கலாம்.
ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தக ப்ரசோதயாத்

நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.

நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.

கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.

சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.

கோயிலுக்கு அருகில் உள்ள காக தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபடலாம்.

கோயில் தொடர்பு முகவரி:
சுவாமி ஆர்.சீனிவாசன்
செயலாளர்,ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவில்,
ஏரிக்குப்பம்-606903.களம்பூர் அஞ்சல்,போளூர் வட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:04173-229273.93602 23428.

சனிக்கிரகம்


சனிபகவான் எப்படி செயல்படுகிறார்?


சூரியனின் புற ஊதாக்கதிர்களே சனி பகவான் ஆவார்.ஒரு மனிதனுக்கு ஏழரைச்சனி அல்லது அட்டமத்துச்சனி காலங்களில் இந்த புற ஊதாக்கதிர்கள்,இந்த மனிதனின் உடலில் எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibrations) உருவாக்கி, மந்தம், மறதி, வெறுப்புணர்வு,கோபம்,பகை,விரையம் இவற்றால் ஸ்தம்பிக்கவைக்கிறார் என்பதை இன்றைய நவீன அறிவியல் கண்டறிந்துள்ளது.

26.6.2009 முதல் 21.12.2011 வரை கன்னிராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனியும், கும்பராசிக்காரர்களுக்கு அட்டமச்சனியும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்த ராசியைச் சேர்ந்த ஆண்,பெண்,குழந்தைகள்,அலிகள்,நாடுகள்,மாநிலங்கள்,நகரங்கள் என அனைவருக்கும் மேற்கூறிய குணாதிசயங்கள் உருவாகியிருக்கும்.

நன்றி:ஜோதிட அரசு,பக்கம் 12,ஜோதிட மாத இதழ் அக்டோபர் 2009.

Friday, October 30, 2009

NAVAKAILASH


நவகைலாசங்கள் இருக்கும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

எப்படி கும்பகோணம் பகுதியில் நவக்கிரகத்தின் கோயில்கள் அமைந்துள்ளனவோ,அதே போல,தென் தமிழகத்தில் நவக்கிரகங்கள் சிவபெருமானின் அம்சமாக கோயில் கொண்டுள்ளன.

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.

பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர்.


சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களின் போன்:04534-261849.

குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது செல்:9442018567,9442018077.

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,இவரது செல்:9842404559.

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார்.நாளை 31.10.2009 சனிப்பிரதோஷநாள்.நாளை ஒருநாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.
இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.போன்:04630-252117.


தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கமலேஷ் பட்டர் செல்:9365889291.

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.இதன் பூஜகர்கள் திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.


பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ.
தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20
கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6
கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4
கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

Tuesday, October 27, 2009

தூத்துக்குடியில் ஒரு கேது ஆலயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கேதுபகவானின் கோவில்

நவக்கிரகங்களில் ராகுவை விட பலம் மிக்கக்கிரகம் கேது.
ஞானமார்க்கத்தில் அளவற்ற ஈடுபாட்டைத்தருவது கேதுபகவானே!
கேதுபகவானின் அகில இந்தியஸ்தலம் ஆந்திராவில் உள்ள திருக்காளஹஸ்தி என்ற சிவாலயம் ஆகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் ஆகும்.
ஸர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம் முற்பிறவியில் செய்த காமம் சார்ந்த பாவங்களாலும்,நமது முன்னோர்கள்(தாத்தா மற்றும் அப்பா அம்மா,மற்றும் அவர்களின் முன்னோர்கள்) செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிக்கவே குழந்தை பிறக்கின்றன.
இந்த தோஷமுள்ள குழந்தைகள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பர்.

தென் தமிழ்நாட்டுமக்கள் கேதுபகவானை வழிபடுவதற்காக ஒரு புராதன ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் அமைந்துள்ளது.
ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையே ராஜபதி என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.இங்குள்ள சிவபெருமானின் அம்சமாக கேதுபகவான் இருக்கிறார்.முற்காலத்தில் அரசர்கள் போரில் வெற்றி பெறுவதற்காக இந்த கேதுபகவானை வழிபட்டிருக்கின்றனர்.தற்காலத்தில்,அரசியல்வாதிகள் அரசியல்வெற்றிபெற இவரை அடிக்கடி வழிபட்டுவருகின்றனர்.

சிதிலமடைந்த இந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்ய சிவபக்தர்கள் ஒன்றிணைந்து கைலாஷ் அறக்கட்டளையை உருவாக்கியுள்ளனர்.கி.பி.2010 ஆம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் செய்ய இருக்கின்றனர்.அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கைலாஷ் அறக்கட்டளை,94/107,தனுஷ்கோடியாபுரம் தெரு,கோவில்பட்டி-628 501.செல்:9842263681க்கு அனுப்பலாம்.இணையதளம்:www.kailsahtrust.org

ஜோதிட ஆலோசனை

இலவசமாக ஜோதிட ஆலோசனை தரும் வலைப்பூ

சென்னையிலிருந்து ஒரு வலைப்பூ ஜோதிடத்தை மையமாகக்கொண்டு இயங்கிவருகின்றது.
நாம் நமது பிறந்த நாள்,பிறந்த நேரம்,பிறந்த ஊர் குறிப்புக்களைக் கொடுத்து,கேள்விகள் கேட்டால் 15 நாட்களுக்குள் பதிலை அந்த வலைப்பூவிலேயே வெளியிட்டுவிடுகிறார்கள்(ஆங்கிலத்தில்).நம்மைப்போல கட்டணம் ஏதும் வாங்குவதில்லை.வலைப்பூவின் முகவரி:
www.online-astrovision.blogspot.com


ஜோதிடர்கள் அதிகம் வாழும் கிராமம்

விருதுநகர் மாவட்டத்தின் தூங்காநகரம் சிவகாசி.இதன் அருகில் உள்ளது வெற்றிலையூரணி.இங்கு 1000 பேர் வசிக்கிறார்கள்.இவர்களில் 350 பேர் பரம்பரை ஜோதிடர்கள் ஆவர்.இவர்கள் ஜோதிடப்பலன்கள் சொல்லுவதற்காக உலகம் முழுக்க பலநாடுகளுக்குப் பயணித்துவருகின்றனர்.அமெரிக்கா,இங்கிலாந்து,மலேஷியா,சிங்கப்பூர்,ஹாங்காங்,ஆஸ்திரேலியா,இலங்கை,துபாய்,வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி பயணித்துவருகின்றனர்.
**************************************************************

Monday, October 26, 2009

கணிப் பொறிக் கல்வி

கணினிக்கல்வியைத் தேர்ந்தெடுக்க சில ஆலோசனைகள்


கம்யூட்டர் படித்தால் மாதம் ரூ.50,000/-சம்பளம் என தமிழ்நாடு முழுக்க விளம்பரப்போஸ்டர்களை ஆண்டு முழுக்க ஒட்டித்தீர்த்து கம்யூட்டர் படிக்க ஏராளமான கணினி நிறுவனங்கள் அழைக்கின்றன.இது மிகவும் நல்ல விஷயம் தான்.ஆனால் மாதம் அல்ல வாரம் ரூ.50,000/- சம்பாதிப்பது யாரெனில் இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள்தான்.இதுகூட தப்பில்லை.இந்த பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் நடத்துபவர்களுக்கு 95% ராகு மகாதிசை நடக்கும்.நிர்வாகச்செலவு 30% மட்டுமே.லாபம் 70%.ஏற்றுமதியில் கூட இவ்வளவு லாபம் கிடைக்காது.ஆனால்,இந்த கணினி பயிற்சிப்பள்ளிகள் நடத்துபவர்கள் சொல்லும் பொய்யால் எத்தனைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது யாருக்குத் தெரியும்?

இதில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவ மாணவிகள்,அவர்களின் பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?
முதலில்,
இரண்டு மாதங்களுக்கு தட்டச்சு எனப்படும் டைப் ரைட்டிங் கற்றுக்கொள்ளவேண்டும்.(டைப்ரைட்டிங்கில் இருக்கும் கீ போடும் கணிப்பொறி கீபோடும் ஒரே விதமான வடிவமைப்புதான்)ஆங்கிலத்தை பாரா பாராவாக சிறு பிழையின்றி டைப் செய்யும் திறமை வந்தபின்னர் (டைப்ரைட்டிங் படிப்பில் தேர்வு அவ்வளவு அவசியமில்லை.அரசுப்பணியில் சேருபவர்கள் மற்றும் ஸ்டெனோடைப்பிஸ்டு வேலைக்கு மட்டும் டைப் தேர்வுகள் அவசியம்)அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.

அதுதான்
ஸ்போக்கன் இங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலப்பேச்சுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.இப்பயிற்சி 4 மாதங்கள் வரை இருக்கும்.
ஆங்கிலத்தைப் பொருத்தவரை இக்காலத்தில் பெரும்பாலான கம்யூட்டர்பயிற்சி நிறுவனங்களே இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியை நடத்துகின்றன.இதில் 10% கூட தரம் இருப்பதில்லை என்பது நேரில் கண்ட அனுபவ உண்மை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் என தனியாக நடத்துபவர்களின் அனுபவம் கம்யூட்டர் பயிற்சிநிலையங்களில் இருப்பதில்லை.

ஆங்கிலமொழியைப் பொருத்தவரை,ஒரு நாளுக்கு புதிதாக 300 புதிய ஆங்கில வார்த்தைகள் உருவாகின்றன.ஒருவருடத்துக்கு சுமார் 1,20,000 புதிய வார்த்தைகள் ஆங்கிலமொழியில் சேருகின்றன.இன்று 26.10.2009 ஆங்கிலமொழியில் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை 5,00,000.ஆனால்,இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் கற்கவேண்டியது வெறும் 3000 ஆங்கில வார்த்தைகள் மட்டுமே!
வெறும் 20 நாளில் சரளமாக ஆங்கிலம் ஒருவரால் பேச ஆரம்பிக்க முடியும்.வெறும் 100 நாளில் சரளமாகவும்,முழுமையாகவும் ஆங்கிலம் பேசமுடியும்.ஆனால்,இந்த சாதனையை எட்ட 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.படித்துக்கொண்டிருப்பவராக இருந்தால்,9ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும்.தற்காலத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளில் பலர் வெறும் 100 நாள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியால் சரளமாக ஆங்கிலம் பேசிவிடுகின்றனர் என்பது பெருமைக்குரிய உண்மை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் பயில சரியான தருணம் 9ஆம் வகுப்பு முடிக்கும்போதுதான்.(பல இடங்களில் 6 ஆம் வகுப்பிலேயே சேர்த்துவிடுகின்றனர்.)
நாம் தமிழில் என்ன நினைக்கிறோமோ,அதை ஆங்கிலத்தில் சுயமாக பேசவும் எழுதவும் முடிகின்றவரை ஆங்கிலம் பயிலவேண்டும்.

இதற்குப்பிறகே,கணினிப்பயிற்சியில் சேரவேண்டும்.இந்த வரிசைப்படி,பயின்றுகொண்டு வந்தால் கம்யூட்டர் எனப்படும் கணினிப்பயிற்சியில் சேரும் மாணவ மாணவிகள் மிகவும் திறமைசாலிகளாக கற்பார்கள்.இந்தத்திறன்கள் பள்ளிப்படிப்புமுடித்து டிப்ளமோ அல்லது டிகிரி முடிக்கும்போது அவர்களுக்கு காம்பஸ் இன் டர்வியூவிலேயே மிகச்சிறந்த வேலை கிடைக்கும்.இதற்குப்பெயர்தான் சாஃப்ட் ஸ்கில் லேபர் எனப்படும் தனித்திறன் நிறைந்த பணியாளர்.இந்தத் தகுதியைத் தான் இன்றைக்கு சென்னையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

அதுவும் எந்த(பள்ளி,பாலிடெக்னிக்,டிகிரி,சர்டிபிகேட்) படிப்பு படித்திருந்தாலும்,முதலில் எம்.எஸ்.ஆபிஸ் கற்பது அவசியமாகும்.

அது முடித்தபின்னர்,படம் வரையும் திறன் உள்ளவர்கள் DTP எனப்படும் டெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பது நன்று.

அக்கவுண்டன் ட் வேலைக்குச் செல்ல நினைப்பவர்கள் கணக்குப்பதிவியல் படிப்பவர்கள்,படித்தவர்கள், பி.காம் படிப்பவர்கள் டேலி படிக்க வேண்டும்.

நிறைய்ய செலவு செய்யும் வசதியுள்ளவர்கள், DTP படித்தப்பின்பு, அனிமேஷன், கிராபிக்ஸ் எனப்படும் வரைகலை கற்கலாம்.

சிவில்,மெக்கானிக்கல்,எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் படிப்பவர்கள் ஆட்டோகேட் படிக்கவேண்டும்.
ECE,EEE,DCE,DCT படிப்பவர்கள் கம்யூட்டர் பழுதுநீக்குதல் எனப்படும் கம்யூட்டர் ஹார்டுவேர் கற்கவேண்டும்.அதன்பிறகு,நெட்வொர்க் கற்கலாம்.அதற்குப்பிறகு,சைபர்க்ரைம் கற்கலாம்.அல்லது ஐ.பி.எம்மின் ஏ.எஸ்.440 கற்கலாம்.

சாப்ட்வேர்துறைக்குச் செல்ல விரும்புவர்கள் சி.சி# ,விசுவல் பேசிக் கற்க வேண்டும்.


ஆனால்,இந்த அடிப்படை விழிப்புணர்வு எத்தனை பேருக்குத்தெரியும்?

பிரம்மாண்டமான விளம்பரம் செய்யும் கம்யூட்டர்பயிற்சிப்பள்ளிகள்,இன்ஸ்டிடியூட்கள் செய்வது என்ன தெரியுமா?
PGDCA/DCA/DCP இவற்றில் ஏதாவது ஒன்று படித்தால் மட்டுமே கம்யூட்டரே படித்ததாக அர்த்தம் என ஒரே தவணையில் ரூ.8000/- அல்லது ரூ.10,000/- கறந்துவிடுகின்றனர்.இதனால் என்ன எனக்கேட்கிறீர்களா?

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சி தேவையா?
எல்லா சாப்ட்வேர்களையும் கொஞ்சம்,கொஞ்சம் படித்து எதிலும் தேர்ச்சி பெறாமல் போவதுதான்.இதை எந்த பெற்றோரால் உணரமுடியும்?

பாவம் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள் ஏழையாக இருந்தால் காட்டையும்,மாட்டையும் விற்று கம்யூட்டர் படிக்கவைக்கின்றனர்.

சில நகரங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி நடைபெறுகிறது.பாடங்கள் என்ன தெரியுமா? எம்.எஸ்.ஆபீஸ்,சி.,மட்டுமே.

சரி பி.ஈ. அல்லது டிப்ளமோ படித்துவிட்டு நேராக சென்னைக்கு வேலைதேடிச் சென்றால் அங்கே ஆங்கிலத்தின் முக்கியத்துவம் புரிகின்றது.அங்கேயே ஆங்கிலம் மொழியைக் கற்கச் சென்றால் ஸ்போக்கன் இங்கிலீஷின் மாதக்கட்டணம் ரூ.10,000/-மட்டுமே!

லட்சியத்தை அடைய

ஒரு லட்சியத்தை அடைய, ஒருவருக்கு இருக்கவேண்டிய இயல்பான குணங்கள்

1)தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் குணம்
2)கற்பனைத் திறமையுடன் எதையும் பார்க்கும் குணம்
3)ஆழ்ந்து சிந்தித்து வேலைகளை ஒழுங்குபடுத்தி அமைக்கும் குணம்
4)சிந்தனையைச் சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமுடன் செயல்படுவது
5)நேரம்,பணம் இந்த இரண்டையும் திட்டமிட்டு செலவு செய்வது
6)எப்போதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் மனதை வைத்திருப்பது
7)தன்னை அடக்கி திருத்திக்கொள்ளுதல்

நன்றி:எனது கி.பி.1992 ஆம் ஆண்டு டைரி