உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் படைத்தவர் உருவம் இல்லாத ஈசன்!
அந்த ஈசன் சிவலிங்க வடிவில் உலகம் முழுவதும் அருள்பாலித்துவருகின்றார்;கலியுகம் உருவாகும்
வரையில்,இன்றைக்கு 5119 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் 1000 கோடி சிவாலயங்கள்
இருந்திருக்கின்றன;தற்போது,பாரத நாட்டில் மட்டும் 1 கோடி ஆலயங்களாக மிஞ்சி இருக்கின்றன;ஈசனின்
முதல் படைப்பு தான் முருகக் கடவுள்!
ஈசனையும்,முருகனையும் மனிதனாகிய நாம் நேரடியாக தரிசிக்க வேண்டும் என்றால்,குறைந்த
பட்சம் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;அப்படி விடாமுயற்சி செய்தால்,12 வது
அல்லது 13 வது பிறவியில் சிவதரிசனம் அல்லது முருகக் கடவுள் தரிசனம் கிடைக்கலாம்;
ரெஜித்குமார் என்பவர் திருச்சூரில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றார்;இவருக்கு
சிறுவயது முதல் முருக பக்தி அதிகம்;இவரது தாயும்,தந்தையும் இறந்த பின்னர் கடும் மன
அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்;அதன் விளைவாக,நாத்திகவாதியாக மாறிவிட்டார்;அப்போதும்,அவரது
தேடல் தொடர்ந்திருக்கின்றது;அதன் முடிவாக மீண்டும் முருக பக்தராகவும்,ஆராய்ச்சியாளராகவும்
ஆகியிருக்கின்றார்;
பழனிமலைக்கு கேரள மக்கள் பல நூற்றாண்டுகளாக வருகை தந்து வழிபடுவது வழக்கம்;இது
குமரிக்கண்டம் தோன்றியதில் இருந்து (சுமார் 50,00,000 ஆண்டுகள்) இன்றுவரை தொடருகின்றது;
2006 முதல் 2013 வரை திரு.ரெஜித்குமார் உலகம் முழுவதும் பயணித்திருக்கின்றார்;முருக
கடவுள் வழிபாடு உலகில் எந்தெந்த நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதை அறியவே பயணம் செய்து
ஆதாரங்களையும் வரலாற்றுப் பூர்வமாகவும்,தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் திரட்டிவிட்டார்;
குமரிக் கண்டம் என்ற லெமூரியக் கண்டத்தில் குமரக் கடவுள் என்ற முருகக்கடவுள்
வழிபாடு உச்சத்தில் இருந்திருக்கின்றது;மனிதன் நாகரீகம் அடைந்து முதன் முதலில் வாழ்ந்த
இடம் குறிஞ்சி!இங்கே வேட்டையாடுவதுதான் மனிதனின் ப்ரதான தொழில்! வேடர் குலப் பெண் வள்ளியை
முருகக் கடவுள் திருமணம் செய்தார் என்று வாசித்திருக்கின்றோம்;இதுதான் முதல் ஆதாரம்;
பூடான் நாட்டில் டைகர் மலையானது,திபத் மதத்தின் முதல் மத குரு (ரிம்போச்சே)
பத்ம சம்பவர் வாழ்ந்த இடம் ஆகும்;இங்கே முருகக் கடவுள் வழிபாடு இருந்திருப்பதை பத்ம
சம்பவர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது;
பாலித் தீவு இந்தோனோஷியாவில் ஒரு பகுதி ஆகும்;இங்கே புரா பெசாகி(PURA
BESAKIH) 86 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன;இங்கே,வாசுகி என்ற நாகம் முருகக்
கடவுளை வழிபட்டது;இப்பகுதியில் காணப்படும் புராணக் கதை மூலமாக இதை உணரலாம்;
தாய்லாந்தில் பட்டாயா என்ற இடத்தில் தி ட்ரூத் (Sanctuary of Truth)
ஆலயம் சென்ற போது,அங்கிருந்த பழமையான ஓவியத்தில் இருந்த திரு உருவம் முருகப் பெருமானின்
ஆதி வடிவை ஒத்திருந்தது;இதை அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்;
திருச்செந்தூரில் பஞ்சலிங்கத்தை வழிபட்டுவிட்டு,முருகக் கடவுள் அன்றைய
போர்க்களத்தில் 2000 கி மீ தொலைவு வரை போரிட்டவாறே சென்று இன்றைய ஆஸ்திரேலியாவின் நீல
மலைப்பகுதியில் சூரனை சம்ஹாரம் செய்திருக்கின்றார்;ஒரு ராணுவம் 2000 சதுர கி மீ பரப்பளவுக்கு
பரவியிருந்து போரிட்டு இருந்தால் எத்தனை கோடி போர்வீரர்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள்!!!
நீலமலையில் ஜெலோவின் கேவ்ஸ் எனப்படும் குகையில் முருகப் பெருமானின் திருப்பாதம் பதிந்திருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்;
தென் கொரியா,வடகொரியா,மலேசியா,சிங்கப்பூர் என தென் கிழக்கு ஆசிய நாடுகள்
முழுவதும் முருகக் கடவுளின் வழிபாடும் சித்தர் பெருமக்களின் நடமாட்டங்களும் இன்று வரை
அதிகமாக இருக்கின்றன;
ஆதியில் குமரிக் கண்டத்தில் தோன்றிய குமரக்கடவுள் வழிபாடு,உலகம் எங்கும்
மீண்டும் தழைத்தோங்க ஆரம்பிக்கும்;அப்போது,உலகில் சத்தியமும்,தர்மமும் ஓங்கி நிற்கும்;
லயன் மயூரா ராயல் கிங்டம் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகின்றார்;நன்றி:சக்தி
விகடன்,பக்கங்கள் 78 டூ 81,வெளியீடு 9.10.2018 மற்றும் பல முருக பக்தர்கள் மற்றும் முருகக் கடவுள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் வெளியீடுகள்
ஒரு கோடி முறை முருகா,முருகா என்று இப்பிறவிக்குள் யார் ஜபிக்கின்றார்களோ
அவர்களுக்கு முருக சித்தர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கத் துவங்கும்;