Tuesday, January 9, 2018

பசுவதையை முழுமையாகத் தடைசெய்யுங்கள்:உச்சநீதிமன்றம்!!!



உலகத்தின் பூஜையறையாகவும்,உலகின் வழிகாட்டியாகவும் இருந்த நாடுதான் நமது பாரத தேசம்! கி.பி.1750 உடன் முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை உலகின் ஒரே வல்லரசு நாடாகவும்,செல்வ வளம் மிக்க நாடாகவும் இருந்தது நமது பாரதம் மட்டும் தான்;

இதற்கு உரிய காரணங்கள் நான்கே நான்கு மட்டுமே! கோவில்,பசு,விவசாயம்,பெண் இனம் இந்த நான்கின் ஆன்மீகப் பின்னணி அறிந்த இந்துக்களாகிய நமது முன்னோர்கள் உயர்ந்த மதிப்புடன் பராமரித்துவந்தார்கள்;

பாரதம் என்ற தேசத்தில் மட்டுமே பசு,கோவில்,பெண்,விவசாயம் இந்த நான்கும் போற்றப்பட்டும்;பாதுகாக்கப்பட்டும் வந்தது;800 ஆண்டு கால இஸ்லாமியப் படையெடுப்பின் போது கூட இவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பும்,ஆபத்தும் ஏற்படவில்லை;வெறும் 300 ஆண்டுகளாக நம்மை ஆள்கின்றேன் என்ற பெயரில் சுரண்டிய கிறிஸ்தவ ஆங்கிலேயன் காலத்தில் உண்டான ஆபத்துக்களும்,சிக்கல்களும் இன்று வரை 8.1.2018 தீர்க்கப்படவில்லை;

கோமாதா என்ற பசுவின் காயத்ரி மந்திரம்:

ஓம் மாதா பாலாயை ச வித்மஹே
மந்த்ர தேவதா தேஹாயை ச தீமஹி
தந்நோ ஸ்ரீ கோதேவி ப்ரசோதயாத்

எப்பேர்ப்பட்ட தெய்வீக அம்சங்களுடன் பசு என்ற விலங்கு இருந்தால்,அதற்கு என்று காயத்ரி மந்திரத்தை நமது முன்னோர்களாகிய ரிஷிகள் உருவாக்கியிருப்பார்கள்?!?

குருகுலக் கல்வியும்,திண்ணைப் பள்ளிக்கூடங்களும் பசுவின் பெருமைகளை போதித்துவந்தன;இவைகளை நிர்மூலமாக்கினான் கிறிஸ்தவ ஆங்கிலேயன்;அந்த இடத்திற்கு திமிர் பிடித்த மனிதர்களை உருவாக்கும் மெக்காலே கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தான்;1875 இல் கொண்டு வந்த இந்த முட்டாள்த்தனமான கல்வித்திட்டத்தை மாற்றி,நமது பாரம்பரியத்தை போதிக்கும் கல்வித்திட்டத்தை இன்றுவரை கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை ஒரு போதும் காங்கிரஸ் அரசுகளுக்கு இருந்தது இல்லை;

கோமாதாவின் பெருமைகளை மீண்டும் இந்துக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் முன்பு,அதை முழுமையாக அழித்துவிட்டு,அழித்ததன் அடையாளம் தெரியாமல் இருக்கவே ஆன்மீகப் பின்னணி இல்லாத செயற்கைப் பசுவாகிய ஜெர்ஸிப்பசுவை கிறிஸ்தவ ஆங்கிலேயன் உருவாக்கி,இந்து விவசாயிகளுக்கு இலவசமாகவே தானம் செய்தான்;கிறிஸ்தவ ஆங்கிலேயன் என்ற முகமூடி அணிந்து கொண்டு இதைச் செயல்படுத்தியது இலுமுனாட்டிகள் என்பதையும் நினைவில் கொள்ளவும்;


கலியுகாதி 5118 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்;பசுக்களின் பெருமைகளை பூமியில் பரப்பிட சித்தர்கள் பலர் கலியுகத்தின் ஆரம்பத்தில் நமது பாரத தேசம் முழுவதும் வாழ்ந்துவந்தார்கள்;அவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வாழ்நாளின் முடிவில் ஆன்மீக பூமியான தமிழ்நாட்டுக்கு வருகை தந்து முக்தியை சுலபமாகத் தரும் அண்ணாமலையில் வாழ்ந்தார்கள்;பசும்பால் சித்தர்,பசு மடத்துக் கோனார்,பால் சோறு சித்தர் என்ற புனை பெயர்களில் விண்ணுலகில் இருந்து பாரத நாட்டிற்கு வருகை தந்து கோமாதா என்ற நாட்டுப் பசுக்களின் பெருமைகளைப் பரப்பினார்கள்;1900 வரையிலும் கூட ஒருவன் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருகின்றான் என்பதை வைத்து அவனை சமுதாயம் மதிப்பதில்லை;எத்தனைப் பசுக்களைப் பராமரிக்கின்றான் என்பதைக் கொண்டே ஒருவனை செல்வந்தனாக மதித்தார்கள்;


தெரியாமல் ஒரு பசுவை   ஒருவன் மிதித்துவிட்டாலே,மிதித்தவனது அடுத்த 100 பிறவிகளில் வறுமையால் வாடவேண்டும்;ஏனென்றால்,ஒரே ஒரு பசுவின் உடல் முழுவதும் 300 விதமான தெய்வீக சக்திகள் குடிகொண்டிருக்கின்றன;இதை இன்றைய நவீன விஞ்ஞானம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க 1000 ஆண்டுகள் ஆகும்;

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆன்மீக பூமியான பாரத நாடு தனது ஆத்ம பலத்தை இழக்க வேண்டும் என்பதற்காக 1947 வரை சுமார் 276 பசுவதைக் கூடங்களை கிறிஸ்தவ ஆங்கிலேயன் உருவாக்கினான்;அது இன்று 30,000 பசுவதைக் கூடங்களாக விஸ்வரூபம் எடுத்து ஒரு நாளுக்கு 1,00,000 கோமாதாக்களைக் கொடூரமான முறையில் (24 மணி நேரமும்) கொன்று கொண்டு இருக்கின்றது;இந்துக்களாகிய நாம் கோமாதவின் தெய்வீகப் பெருமைகளைச் சிறிதும் உணராமல் இருப்பதால் தான் இவைகள் இன்றும் 8.1.2018 கூட இயங்கி வருகின்றன;


இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு கோமாதா என்ற பசுப்பாதுகாப்பில் நாட்டம் உடையோர் சிலர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்;அகில பாரதிய கோசேவக் சங்கம்,அகிம்சா சேனா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இதில் முனைப்பு காட்டின;அகில பாரதிய கோசேவக் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான ராஜீவ் பாய் எப்படியாவது பசுவதையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்ற தாகத்துடன் சட்டரீதியான போராட்டத்தில் இறங்கினார்;

125 கோடி இந்தியர்கள் பாரத தேசத்தில் வாழ்ந்து வந்தாலும் கிறிஸ்தவ ஆங்கிலேயனின் மெக்காலே கல்வித் திட்டத்தினால் கோமாதாவின் பெருமைகளை அறிந்தவர்கள் 0.000001% அளவுக்கு சுருங்கிவிட்டார்கள்;இன்றைய கால கட்டத்தில் பாரத நாடு முழுவதும் வாழும் இந்துக்கள் மட்டுமா தினசரி வருமான ஏற்றத்தாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்? இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்,சீக்கியர்களும்,பவுத்தர்களும், சமணர்களும் தான் சிரமப்பட்டுவருகின்றார்கள்!!!இதற்குக் காரணம் பசுவை தினமும் வதைத்துக் கொல்வதுதான் காரணம்....

இது மிகவும் முக்கியமான தேசிய பிரச்சினை என்பதால் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் சரியாக இருக்காது;அரசியல் சாஸன அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று ராஜீவ் பாய் வற்புறுத்தினார்;மூன்று ஆண்டுகள் காலப் போராட்டத்திற்குப் பிறகு,உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது;கி.பி.2004 இல் துவங்கிய வாதம் கி.பி.2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நீடித்தது;

கோமாதா என்ற பசுக்களைக் கொல்ல வேண்டும் என்று வாதிட்ட தரப்பினர் பொருளாதார ரீதியாக மிகுந்த வசதி படைத்தவர்கள்!!! அவர்கள் பிரபல வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தார்கள்;சோலி சாரப்ஜி (இவரது கட்டணம் ரூ.20,00,000/-);கபில்சிபில்(இவரது கட்டண ரூ.22,00,000/-)ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி(இவரது கட்டணம் ரூ.33,00,000/-)ஆகியோர் கசாப்புக் கடைக்காரர்கள் சார்பில் வாதிட்டார்கள்;

அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞரை அமர்த்த ராஜீவ் பாயிடம் பணம் இல்லை;எனவே,உங்களுக்காக நீதிமன்றமே வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து தரும் என்று தலைமை நீதிபதி கூறினார்;இதன் அடிப்படையில் வழக்கறிஞர் எம்.இ.எஸ்குரி அமர்த்தப்பட்டார்;

“கிழட்டுப் பசுவைப் பராமரிப்பது பொருளாதார ரீதியாக மிகுந்த சுமையை அளிக்கும்;மாறாக,பசுவைக் கொன்று அதன் மாமிசத்தை ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி ஈட்டலாம்;வறட்சி காரணமாக மகசூல் குறைந்துள்ளது;வைக்கோலோ அல்லது புல்லோ போதுமான அளவில் கிடைக்கவில்லை;எனவே,பட்டினியால் கால்நடைகள் சாவதைவிட அவற்றை(பெற்ற தாயைக் கொல்வது போல) வெட்டிக்கொன்று இறைச்சியை விற்பனை செய்தால் கணிசமான தொகையை ஈட்டலாம்;மக்களுக்கெ வாழ்க்கை நடத்த போதுமான இடவசதி இல்லை;கால்நடைகளை பராமரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்புடையது அல்ல;எனவே,செண்டிமென்ட் பார்க்காமல் பசுக்களைக் கொன்று குவிப்பதில் தவறில்லை;”என்று அபத்தமான வாதங்களை ராஜீவ் பாய் தனது ஆணித்தரமான வாதங்களால் தூள் தூளாக்கினார்;

ஒரு பசுவைக் கொன்றால் அதிகபட்சம் ரூ.10,000/-தான் கிடைக்கும்;ஆனால்,சாணம்,கோமியம் ஆகியவற்றை செம்மையான முறையில் பயன்படுத்தினால் பல கோடி ரூபாய்கள் வருமானம் ஈட்ட முடியும்;

பசு தினம் தோறும் 10 கிலோ சாணம் தருகின்றது; 3 கிலோ கோமியம் தருகின்றது; 1 கிலோ சாணத்தைப் பயன்படுத்தினால் 33 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்;இந்த ஆர்கானிக் உரத்திற்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் இருக்கின்றது;வருடம் தோறும் இதுபற்றிய விழிப்புணர்ச்சியால் இதன் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது;

1 கிலோ சாணத்தைப் பயன்படுத்தி எப்படி 33 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்? என்று ராஜீவ் பாயிடம் கேட்டார் நீதிபதி! 

இதை நிரூபித்துக் காட்டுகின்றேன் என்று ராஜீவ் பாய் கூறினார்;செயல் விளக்கத்தின் மூலம் ராஜீவ் பாய் நிரூபித்துக் காட்டியதைக் கண்டு நீதிபதி வியப்பில் மூழ்கிவிட்டார்;விஞ்ஞானிகளும் இதை ஆய்வு செய்து உறுதிபடுத்தினார்கள்;

ரசாயன உரங்களில் 2 அல்லது 3 நுண்ணூட்டச் சத்துக்கள் மட்டுமே உள்ளன;ஆனால்,சாணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரத்தில் மங்கனீஸ்,பாஸ்பேட்,கோபால்ட்,சிலிகான்,பொட்டாசியம்,
இரும்புச்சத்து,சுண்ணாம்புச்சத்து என 18 நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன;

எங்கள் கிராமத்துக்கு வாருங்கள்;எனது பெற்றோர் 15 ஆண்டுகளாக இந்த உரத்தைத் தயாரித்து வருகின்றார்கள்;இதை நேரில் காணுங்கள் என்று ராஜீவ் பாய் விடுத்த அழைப்பை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்;இயற்கை உரம் தயாரிப்பதன் மூலமாக கிராமீயப் பொருளாதாரம் மலர்ச்சி அடைகின்றது;பல மாநிலங்களில் இதன் மூலமாக சில நூறு கிராமங்கள் பொருளாதாரத் தன்னிறைவை எட்டியுள்ளன;

ஒரு கிலோ இயற்கை உரம்,சர்வதேச சந்தையில் ரூ.6/-க்கு விற்பனை செய்யப்படுகின்றது;365 நாட்களும் பசுவிடம் இருந்து சாணம் கிடைக்கின்றது;இதைக் கொண்டு தினம் தோறும் குறைந்த பட்சம் 300 கிலோ இயற்கை உரம் தயாரிக்க முடியும்;இந்தத்தயாரிப்பு மூலமாக வருடத்திற்குக் கிடைக்கும் தொகை ரூ.6,57,000/-இருபது ஆண்டுகள் கோமாதா என்ற பசுவின் மூலமாக கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.1,31,40,000/-இதனால்தான் சாணத்தில் செல்வத்தின் கடவுளாகிய திருமகள் வாசம் செய்வதாக இந்துக்கள் நம்புகின்றார்கள்;


இனி அடுத்தபடியாக கோமியத்தைப் பற்றி பார்ப்போம்;

ஒரு பசு தினம்தோறும் 2 அல்லது 2.5 லிட்டர் கோமியம் தருகின்றது;புற்றுநோய்,நீரழிவு,மூட்டுநோய்,சுவாசக் கோளாறு உள்ளிட்ட 50 நோய்களுக்கு கோமியத்தில் இருந்துதான் மருந்து தயாரிக்கின்றார்கள்;ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.500/-சர்வதேச சந்தையில் ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.1,500/-இதை திட்டமிட்டு சந்தைப்படுத்தினால்,தினம் தோறும் ரூ.3000/-கிடைக்கும்;ஒரு வருடத்திற்கு ரூ.10,00,000/-என்று கணக்கிட்டால்,இருபது ஆண்டுகளில் கோமியம் மூலமாக மட்டுமே ரூ.2,00,00,000/-கிடைக்கும்;சாணத்தில் இருந்து மீத்தேன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும்;

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல் பி ஜியை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டுவதைப் போல சாணத்தில் இருந்து பெறப்படும் மீத்தேன் வாயுவை உபயோகித்து இருசக்கர வாகனங்களை மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களையும் இயக்க முடியும்;நீதிபதியின் அனுமதியுடன் அவரது கார் மீத்தேன் வாயுவைக் கொண்டு இயக்கப்பட்டது;இதனால்,புகை வெளிப்பாடு குறைந்துவிடும்;ஒலி மாசுவும் குறைந்துவிட்டது;பொருளாதார ரீதியாகவும் இது மிகுந்த ஆதாயம் அளிக்கக் கூடியது;

டீசலைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4 வரை ஆகின்றது;ஆனால்,மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தினால் 50 காசு மட்டுமே ஆகின்றது;மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தினால் பில்லியன் கணக்கில் பணத்தையும்,அன்னியச் செலாவணியையும் மிச்சப்படுத்த முடியும்;பாரத நாட்டில் 17 கோடி பசுக்களும்,மாடுகளும் உள்ளன;இவற்றின் மூலமாக பெறப்படும் சாணத்தில் இருந்து மீத்தேன் வாயுவை தயாரிப்பதை முடுக்கிவிட்டால்,அரபு நாடுகளிடம் எண்ணெய்க்காக கையேந்த வேண்டியதில்லை;அமெரிக்காவிடம் டாலருக்காக யாசகம் கேட்கவேண்டியதில்லை;பாரதத்தின் பொருளாதாரம் 1750 வரை இருந்தது போலவே மீண்டும் சுயச்சார்பு (தன்னிறைவு) பெற முடியும்;

இந்த வாதங்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டா உச்சநீதி மன்ற நீதிபதிகள்,கசாப்புக் கடைக்காரர்களை நோக்கி வேறு ஏதேனும் வாதத்தை முன் வைக்கின்றீர்களா? என்று கேட்டனர்;

அதற்கு அவர்கள், “மதரீதியாக பசுக்களையும்,மாடுகளையும் வெட்டலாம்;மத உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது” என்று கூறினார்கள்;

இதை முறியடிக்கவும் ராஜீவ்பாய் பல ஆதாரங்களைத் தொகுத்து அளித்தார்; “எல்லா முஸ்லீம்களுமே மாடுகளை வெட்ட வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது;முஸ்லீம்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே இன்னும் சொல்லப்போனால், குரேஷி என்ற உபபிரிவினர் மட்டுமே மாடுகளைக் கொல்வதில் தீவிரமாக உள்ளனர்;மாடுகளைக் கொல்வது இஸ்லாமுக்கு உடன்பாடானது என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை;திருக்குரானில் இதற்குச் சான்று கிடையாது;

பாரதத்தை ஆண்ட பல முஸ்லீம் மன்னர்கள் பசுவதைக்கு தடை விதித்து இருந்தார்கள்;முகலாய வம்சத்தின் முதல் மன்னரான பாபர்,பசுவதைக்குத் தடைவிதித்திருந்தார் என்பதற்கான சான்று அவரது சுயசரிதையான பாபர் நாமாவிலேயே உள்ளது;அவரது மகன் ஹூமாயூனும் இதையே பின்பற்றினார்;அடுத்தடுத்து வந்தவர்களும் இதே தடத்தில் பின்பற்றினார்கள்;இஸ்லாமிய வெறியர் என்று கூறப்படும் ஓளரங்கசீப் காலத்திலும் பசுவதைக்குத் தடை நீடித்தது;

தென்பாரதத்தை எடுத்துக் கொண்டால்,திப்புச்சுல்தானின் தந்தையாகிய ஹைதர் அலி மிகக் கடுமையான சட்டத்தை இயற்றியிருந்தார்;யாரேனும் பசுவைக் கொன்றால் அவரது தலையை வெட்டி எறிய வேண்டும் என்பதுதான் தண்டனை;திப்புச் சுல்தான் காலத்திலும் பசுவதைக்குத் தடை நீடித்தது;ஆனால்,தண்டனையை மென்மைப்படுத்திவிட்டார்;தலையை வெட்ட வேண்டாம்;கைகளை மட்டும் வெட்டினால் போதும் என்பது திப்புச் சுல்தான் காலத்து நிலவரம்;திருக்குரான்,ஹதீஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்த ராஜீவ்பாய் எந்த இடத்திலும் பசுவதைக்கு ஆதரவான வாசகம் எதுவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்;இன்னும் ஒரு படி மேலாக பேகம்பூர் முகமது சாகிப்,பசுவைக் கொன்றவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளதை ராஜீவ் பாய் சுட்டிக் காட்டியுள்ளார்;

இந்த எதிர்வாதங்களைக் கேட்டு கதிகலங்கிப் போன,கசாப்புக் கடைக்காரர்கள் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள்;நீதிமன்றமும் இசைவு தந்தது.ஆனால்,அவர்களால் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை;


இதையடுத்து 26.10.2005 அன்று உச்சநீதி மன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது;இந்த 66 பக்க தீர்ப்பில் ‘கோமாதா என்ற பசு இனத்தை பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை மட்டுமல்ல;மாநில அரசுகள்,யூனியன் பிரதேச அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது;

கோமாதா என்னும் பசுவை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகன்களின் கடமை என்று தீர்ப்பளித்துள்ளது;

பொருளாதார ரீதியாகவும்

சுற்றுச்சூழல் ரீதியாகவும்

ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோமாதா என்ற பசுவை கண் எனக் காப்போம்;

பசுவளத்துறை என்ற தனி இலாகாவை மத்திய அரசும்,மாநில அரசுகளும்,யூனியன் பிரதேச அரசுகளும் உடனடியாக உருவாக்க வேண்டும்;

அவைகளை செம்மையான முறையில் இயங்க வைத்து,பொருளாதாரத்தை ஓங்க வைக்க வேண்டும் என்பது கோமாதா என்ற பசுவின் ஆர்வலர்களின் விருப்பமும்,கோரிக்கையும் ஆகும்;

ஆதாரம்:விஜயபாரதம்,பக்கங்கள்42 டூ 46;வெளியீடு 12.1.2018




கர்மவினைகளைக் கரைக்கும் துவாதசி திதி அன்னதானம் 2018 முதல் 2019 வரை!!!



நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,காலத்தை வரையறுத்துத் தந்த பைரவ சித்தர் ஸ்ரீவாரதாரகர் சித்தருக்கு நன்றிகள் தெரிவித்துவிட்டு,துவாதசி திதியின் பெருமைகளை அறிந்து கொள்வோம்;இவர்தான் 12 ராசிகளையும்,27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வரையறுத்துள்ளார்;

மஹா கால பைரவ உலகம் என்று ஒரு உலகம் இருக்கின்றது;இந்த உலகத்தில் வசித்துவரும் இவர் தான்,கால தேவனாகிய மஹா கால பைரவப் பெருமானின் அருளால் நமக்கு ஜோதிடத்தின் அடிப்படையான நட்சத்திரங்கள்,கிரகங்கள்,ராசிகளை பிரபஞ்ச வரலாற்றில் போதித்தார்;

இவர் வருடத்தின் சில குறிப்பிட்ட  அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்;ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி நேரம் முழுவதும் அண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றார்; கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி நேரத்தில் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழாபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று முறைப்படி பூஜைகள் செய்கின்றார்;எல்லா பைரவ சித்தர்களும் இம்முறைப்படி வழிபட்டு பைரவப் பெருமானின் அருட் கடாட்சத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்;

ஒவ்வொரு மாதமும் இரண்டு துவாதசி திதிகள் வருகின்றன;இந்துக் காலக் கணக்கின்படி,ஒரு சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் வரை இருக்கும் கால அளவுதான் ஒரு நாள் ஆகும்;பெரும்பாலான துவாதசி திதிகள் ஒரு நாள் மதியம் துவங்கி மறு நாள் மதியம் அல்லது மாலை வரை வருவதால் அந்த திதி நாட்களை இங்கே குறிப்பிடவில்லை;முழுத் துவாதசி திதி வரும் நாட்களை மட்டுமே பஞ்சாங்கத்தின் துணை கொண்டு அண்ணாமலையாரின் ஆசிகளோடு இங்கே வெளியிடுகின்றோம்;


துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;


இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;


அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; இந்த வழிபாட்டுமுறையை நமக்கு போதித்த சத்குரு ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுக்கு நன்றிகளை இக்கணத்தில் தெரிவிப்பது நமது கடமை ஆகும்;இந்த சத்குருவானவர் சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய ஸ்ரீஅகத்தியர் அவர்களின் வம்சாவழியில் உதித்த நமது சத்குரு ஆவார்;


நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;


சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;
இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;


ஹேவிளம்பி & விளம்பி வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள்;


13.1.2018 சனி

28.1.2018 ஞாயிறு

12.2.2018 திங்கள்

28.3.2018 புதன்

12.5.2018 சனி

26.5.2018 சனி

24.7.2018 செவ்வாய்

8.8.2018 புதன்

21.9.2018 வெள்ளி

21,10.2018 ஞாயிறு

4.11.2018 ஞாயிறு

19.12.2018 புதன்

2.1.2019 புதன்

1.2.2019 வெள்ளி

16.2.2019 சனி

மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்;தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;



தமது சீவனுக்குள் இருக்கும் சிவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற தவிப்பில் வாழ்ந்து வருபவர்களும் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

ஓம் அகத்தீசாய நமஹ


ஓம் அருணாச்சலாய நமஹ


உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள் 2018 முதல் 2019 வரை!!!



உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;


மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;


இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;


மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;


சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(29 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)


ஹேவிளம்பி & விளம்பி வருட மைத்ர முகூர்த்தங்கள்;


12.1.18 வெள்ளி நள்ளிரவு 2.08 முதல் 4.08

25.1.18 வியாழன் காலை 11.20 முதல் மதியம் 1.20

8.2.18 வியாழன் இரவு 12.20 முதல் 2.20

20.2.18 செவ்வாய் காலை 9.24 முதல் 11.24

8.3.18 வியாழன் இரவு 10.28 முதல் 12.28

20.3.18 செவ்வாய் காலை 8.20 முதல் 10.20

4.4.18 புதன் இரவு 8.40 முதல் 10.40

15.4.2018 ஞாயிறு காலை 6.06 முதல் 8.06 வரை;

1.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.58 முதல் இரவு 8.58 வரை

14.5.2018 திங்கட்கிழமை அதிகாலை 3.54 முதல் 5.54 வரை(கடல் வாணிகம் மற்றும் ஏற்றுமதி செய்பவர்களுக்காகவும்,எப்போதும் பிஸியாக இருந்து தமது சொந்தத்தொழிலை நேசிப்பவர்களுக்காகவும் இந்த நேரம் கைகொடுக்கும்)

29.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.50 முதல் இரவு 8.50 வரை

10.6.2018 ஞாயிறு அதிகாலை 4.10 முதல் 6.10 வரை

25.6.2018 திங்கட்கிழமை மாலை 3.51 முதல் 5.51 வரை

7.7.2018 சனி நள்ளிரவு 1.57 முதல் 3.57 வரை

22.7.2018 ஞாயிறு மாலை 3.13 முதல் 4 வரை

23.7.2018 திங்கட்கிழமை மதியம் 2 முதல் மாலை 4 வரை

3.8.2018 வெள்ளி இரவு 10.56 முதல் 12.56 வரை

19.8.2018 ஞாயிறு மதியம் 12.08 முதல் 2.08 வரை

30.8.2018 வியாழன் இரவு 8.56 முதல் 10.56 வரை

15.9.2018 சனி காலை 10.08 முதல் 12.08 வரை

22.9.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;
மதியம் 2.20 முதல் மாலை 4.20 வரை;
இரவு 8.20 முதல் 10.20 வரை;
நள்ளிரவு 2.20 முதல் 4.20 வரை;

27.9.2018 வியாழன் இரவு 8.40 முதல் 10.40 வரை;

6.10.2018 சனி காலை 6.55 முதல் 8.55 வரை;
மதியம் 12.55 முதல் 2.55 வரை;
மாலை 6.55 முதல் 8.55 வரை;
இரவு 12.55 முதல் நள்ளிரவு 2.55 வரை;

13.10.2018 சனி காலை 8.20 முதல் 10.20 வரை;

24.10.2018 புதன் மாலை 6.28 முதல் 8.28 வரை;

9.11.2018 வெள்ளி காலை 6.36 முதல் 8.36 வரை;

20.11.2018 செவ்வாய் மாலை 5.10 முதல் 6.19 வரை;

21.11.2018 சனி மாலை 4.23 முதல் 6.23 வரை;

6.12.2018 வியாழன் காலை 6.40 முதல் 8.40 வரை;

18.12.2018 செவ்வாய் மதியம் 2.30 முதல் மால 4.30 வரை;

3.1.2019 வியாழன் அதிகாலை 5.12 முதல் காலை 7.12 வரை;

14.1.2019 திங்கள் மதியம் 12.30 முதல் 2.30 வரை;

29.1.2019 செவ்வாய் நள்ளிரவு 1.35 முதல் 3.35 வரை;

2.2.2019 சனி காலை & இரவு 7.19 முதல் 9.19 வரை;
மதியம் & நள்ளிரவு 1.19 முதல் 3.19 வரை;

11.2.2019 திங்கள் காலை 10.35 முதல் மதியம் 12.35 வரை;

26.2.2019 செவ்வாய் இரவு 11.38 முதல் நள்ளிரவு 1.38 வரை;

10.3.2019 ஞாயிறு காலை 8.49 முதல் 10.49 வரை;

25.3.2019 திங்கள் இரவு 10.13 முதல் 12.13 வரை;

7.4.2019 ஞாயிறு காலை 6.43 முதல் 8.43 வரை;





இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;


Monday, January 8, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 9.1.2018 செவ்வாய்க்கிழமை முழுவதும் இருக்கின்றது;


ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம்   12 முதல் 1.30 வரை இருக்கின்றது;

 செவ்வாய்க்கிழமை இராகு காலம் மாலை 3  முதல்  4.30    மணி வரை அமைந்திருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம்,கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:தை மாத தேய்பிறை அஷ்டமி  7.2.2018 புதன் கிழமை மதியம் 12.58 முதல் 8.2.2018 வியாழக்கிழமை மதியம் 2.02 வரை அமைந்திருக்கின்றது;



இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;