ஆதிசிவன் என்று அழைக்கப்படும் அண்ணாமலையைத் தவிர,இந்த பூமியில் மனிதர்களாகிய
நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களுமே ஆவிநிலையில் இருப்பவையே! சராசரி மக்களிடம் இதைச்
சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகம்;
பூமியில் இதுவரை இருக்கும் மதங்களிலும்,இனிமேல் உருவாகப் போகும் மதங்களிலும்
இருக்கப் போவது ஒரே ஒரு கருத்துதான்:- இறைவன் ஒருவனே!
அந்த ஒரு இறைவனை மனிதர்கள் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள்;
மனித நிலையில் இருந்து இறைநிலையை அடைய முயலும் போது ஏராளமான ஆன்மீக முன்னேற்றங்களைக்
கடக்க வேண்டியிருக்கிறது;அப்படி முன்னேறும் போது உருவாகும் ஒரு நிரந்தர நிலையே சித்தர்கள்
நிலை;
ஒரு சித்தர் பிறவி முழுவதும்
எந்த தெய்வத்தை வழிபட்டாரோ,அந்த தெய்வம் இருக்கும் இடமே நாம் வாழும் கலியுகத்தில் பிரபல
கோவிலாக வளர்ந்திருக்கிறது;
உதாரணமாக போகர் தனது வாழ்நாள் முழுவதும் முருகக் கடவுளை வழிபட்டார்;அதனால்
அவர் வழிபட்ட முருகக்கடவுள் பழம் நீ என்ற பெயரில் பிரபலமான ஆலயமாக ஆகியிருக்கிறது.இன்றும்
பழனிமலைக்கு அடியில் ஒரு குகையில் போகர் சித்தர் தவம் செய்வதாகவும்,கலியுகம் முடியும்
போது அவர் வெளியே வருவார் என்றும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்;
படத்தில் நீங்கள் பார்ப்பது குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;இவர்
ஒரு பிறவி முழுவதும் வினாயகரை வழிபட்டு வந்துள்ளார்;
இன்னும் நிறைய பார்ப்போம். . .