திங்கள், 3 ஜனவரி 2011( 14:44 IST )
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாதான் உதவுகிறதே தவிர, அமெரிக்காவால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாவதில்லை என்று மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து வெளியாகும் சியாட்டில் டைம்ஸ் எனும் நாளிதழின் கருத்துப் பக்கத்தில் எழுதியுள்ள சோம் மிட்டல், “இந்தியாவால்தான் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு உருவாகிறது, அமெரிக்காவால் இந்தியர்கள் பயனடையவில்லை. இந்திய - அமெரிக்க பொருளாதார உறவால் அமெரிக்காவின் பொருளாதாரமும், வேலைச் சந்தையும் மிக முக்கியமாக பலன் பெறுகின்றன” என்று எழுதியுள்ளார்.
\
“இந்தியர்களின் முதன்மையான முதலீட்டு நாடாகவும் அமெரிக்கா ஆகியுள்ளது. உண்மையைக் கூறுவதெனில், அமெரிக்காவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது” என்றும் சோம் மிட்டல் எழுதியுள்ளார். thanks:www.tamilwebdunia.com
No comments:
Post a Comment