ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஆறு மாதங்களில் ஓம்சிவசிவஓம் ஒரு லட்சம் ஜப எண்ணிக்கையைத் தொடுவது எளிய அதே நேரம் வலிமையான ஜபமுறையாகும்.ஆனால்,நமது வாழ்க்கைதான் வேகமாகிவிட்டதே! உடனே நாம் கேட்டது கிடைத்தால் நல்லது என நினைக்கிறோம்.
பணிபுரிபவர்கள் தங்களது விடுமுறைநாட்களில் மூன்று மணிநேரம் அல்லது ஆறு மணிநேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.ஒருமணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தப்பின்னர்,சுமார் 20 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு,அடுத்த ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.இப்படி எவ்வளவு அதிக நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கிறோமோ,அவ்வளவு எண்ணிக்கை அதிகரிக்கும்.ஒரு கணக்கீட்டின்படி,ஒரு மணிநேரத்திற்கு ஒப்பிப்பதுபோல,ஓம்சிவசிவஓம் ஜபித்தால் 1200 முதல் 1500 எண்ணிக்கை அளவிற்கு ஜபித்திருப்போம்.கணக்கு போட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மூன்று மணிநேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,(குறைந்தது)1200 x 3 = 3600; (அதிகபட்சம்)1500 x 3 = 4500 எண்ணிக்கையைத் தொட்டுவிடும். 3600 x 20 = 72000 அல்லது 4500 x 20 =90000 என ஒரு லட்சத்தை நெருங்கிவிட முடியும்.
அதுசரி! எதற்காக ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?
நல்ல கேள்வி! தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நாம் ஒரு சேமிப்புக்கணக்கு ஆரம்பிக்க குறைந்தபட்ச இருப்பு ரூ.500/- இருக்க வேண்டும்.தனியார் வங்கி எனில் இதே குறைந்த பட்ச இருப்பு ரூ.5000/- ரூ.10,000/- சுவிஸ் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு ரூ.10,00,000/- என நியதி இருக்கிறதல்லவா? அதே போல, ஒரு லட்சம் தடவை ஒரு மந்திரத்தை நாம் ஜபித்தால்,அந்த மந்திரம் நமக்கு உயிருள்ள மந்திரக்கோலைப்போல/கேட்பதெல்லாம் தரும் கற்பகதருவைப் போல/காமதேனுவைப்போல நமது வாழ்க்கையை இயக்க ஆரம்பிக்கும்,ஒரு லட்சத்துக்குப்பிறகு,தினமும் ஒரு மணி நேரமோ,அரை மணிநேரமோ ஓம்சிவசிவஓம் ஜபித்தால் போதும்.நமது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,ஆறாமிடத்து திசையால் வரும் மீள முடியாத கடன்,தீரவே திராத வழக்கு,துரத்தி வரும் தேவையற்ற எதிரி அனைத்தும் நாசமாகிவிடும்.அனுபவத்தில் உணர்ந்துவிட்டதால்,உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment