Saturday, April 21, 2012

துலாம் சனிப்பெயர்ச்சி என்ன செய்யும்?


உலகத்தின் தலையெழுத்தை மாற்றிடப்பிறந்த நவக்கிரகமே சனிபகவான் ஆவார்.ஆமாம்! வெறும் காடு,மலை,வனம் என்றிருந்த இந்த பூமியை இன்று தொழில்நுட்ப உலகமாக மாற்றிய பெருமை சனியைச் சேரும்.சனி மட்டுமல்ல;ஒன்பது நவக்கிரகங்களும் ஒருங்கிணைந்து பணிபுரிந்துதான் இந்த கணிப்பொறியும்,இணையமும் சார்ந்த உலகத்தை வடிவமைத்துள்ளார்கள் என்பது நிரூபிக்கப்படாத நிஜம்!!!

30.11.2011 அன்றுவரையிலும் முடிவடைந்த இரண்டரைஆண்டு  வரையிலும்  கன்னிராசியில் இருந்த சனிபகவான்,30.11.2011 முதல் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.இது வானியல் எனப்படும் அஸ்ட்ரானமியில் சாதாரண விஷயம் ஆகும்.ஆனால்,இந்துதர்மப்படி,துலாம் ராசியில் சனிபகவான் பெயர்ச்சி ஆவதன் மூலமாக துலாம்ராசிக்கு ஏழரைச்சனியில் கடுமையான காலகட்டமான ஜன்மச்சனியும்,மீனராசிக்கு கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை தணிக்கை செய்யும் அஷ்டமச்சனியும்,மேஷராசிக்கு கண்டகச்சனியும்,உலகத்தின் தலைவர்கள் பிறந்த கடகராசியில் பிறந்தவர்களுக்கு அர்த்தாஷ்டகச்சனியும் ஆரம்பமாகிறது.

துலாம் ராசியானது தர்மம் நீதி நியாயம் இந்த பூமியில் நிலைநிறுத்திடப்பிறந்த ராசியாக இருப்பதால்,துலாம் சனியானது இந்த உலகின் இந்துதர்மத்தை நிலைநிறுத்திடப்பெயர்ச்சி ஆகப்போகிறது. எனவே,இன்று முதலே மேற்கூறிய ராசிக்காரர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.அல்லது தினமும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வது நன்று.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டகச்சனி நடக்கும்போது  விநாயகரை வழிபடக்கூடாது என்பது அனுபவ நிஜம்.அப்படி வழிபட்டால்,நிம்மதி குறையும்.சிவனை வழிபட்டாலும்,இதே நிலைதான்.சனியின் குருவாகிய பைரவரை வழிபடுவதன் மூலமாக நிம்மதியும் பிரச்னையில்லாத வாழ்க்கையும் அமையும்.

30.11.2011 முதல் ரிஷபராசிக்காரர்கள் அபாரமான வளர்ச்சி அடைவார்கள்.மிதுனராசிக்காரர்கள் 2016 வரையிலும் சிக்கலில்லாத முன்னேற்றத்தை எட்டுவார்கள்.

கும்பம்,மகரம்,சிம்மம்,தனுசு ராசிக்காரர்கள் படிப்படியான தொழில் வளர்ச்சியை எட்டுவார்கள்.பிரிந்தவர்கள் சேருவார்கள்;
புதிய கோடீஸ்வரர்கள் தோன்றுவார்கள்.

கடகராசிக்காரர்களின் புத்திசாலித்தனம் செயலிழ்ந்துபோகுமளவுக்கு பல சிக்கல்கள் உருவாகும்.ஆனால்,அந்த சிக்கல்களின் விளைவுகள் பாதிப்பை உருவாக்காது.

ஓம்சிவசிவஓம்

பின்குறிப்பு:இவை பொதுப்பலன்களே! முழு மற்றும் துல்லிய விபரங்கள் வேண்டுவோர் மின் அஞ்சல் அனுப்பி விபரங்கேட்டுக்கொள்ளவும்.

No comments:

Post a Comment