Tuesday, April 24, 2012

சிவன் கோவில் தண்ணீரை உறிஞ்சும் பாகிஸ்தான் சிமென்ட் நிறுவனங்கள்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல கட்டாஸ்ராஜ் சிவன் கோவில் குளம் வற்றி வருகிறது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கட்டாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது. தட்சன், யாகத்திற்கு பிறகு தனது மகள் தாட்சாயணியை எரித்ததால் சிவபெருமான் கண்ணீர் விட்டு அழுததாகவும், அந்த கண்ணீர் தான், கட்டாஸ்ராஜ் சிவன் கோவில் குளமாக உள்ளதாக, புராணத்தில் கூறப்பட்டுள்ளது.கட்டாஸ்ராஜ் கோவில் குளம் பெரியது என்பதால், இந்த குளத்தின் நீர் சைடன் ஷா மற்றும் வாலா கிராமங்களின் குடிநீருக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது மூன்று சிமென்ட் தொழிற்சாலைகளும் இந்த குளத்தில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி வருகின்றன. இதனால், குளத்தின் தண்ணீர் வேகமாக குறைந்து வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பிட்ட அளவு தண்ணீர் தான் இந்த குளத்திலிருந்து எடுக்க வேண்டும். பற்றாக்குறை நீரை, ஜீலம் நதியில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை, இந்த சிமென்ட் தொழிற்சாலைகள் மீறுவதால் தான், குளத்தின் தண்ணீர் வேகமாக வற்றி வருவதாக, கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
thanks:dinamalar 24.4.12

No comments:

Post a Comment