Friday, April 20, 2012

நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?


இந்தக் கேள்விக்கு விடை ஏற்கனவே இருக்கிறது.நாம்தான் நமது பேச்சினைக் கட்டுப்படுத்திட வேண்டும்.


நமது தினசரி,வார,மாத இதழ்கள் சினிமா கிசுகிசு என தனிப்பக்கமே போடுகின்றன.அதில் இருக்கும் நமது நடிகர்கள்,நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையைப்பற்றிய பெரும்பாலான பொய்களை நமது நட்புவட்டத்தில் பரப்புவதையே நமது ‘கடமையாக’ செய்கிறோம்.இதுதான் நாம் கஷ்டப்படக்காரணம்.சார்! புரியும்படி சொல்லுங்க. . . புரியல என்கிறீர்களா?


எண்ணினை தனது பெயரில் கொண்டிருக்கும் நடிகையின் கால்ஷீட் வேண்டுமா?அவரது மேனேஜரைத் தொடர்புகொண்டால் மட்டும் கிடைத்துவிடாது.அவருடன் நடித்த வெட்டியான் நடிகரை நேரில் சந்தித்து,கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்,கால்ஷீட் கிடைக்கும்.காரணம் வெட்டி நடிகருக்கும்,எண்ணின் நடிகையின் ---------------க்கும் இருக்கும் நெருக்கமே காரணம்.


இந்த கிசுகிசு ஒரு உதாரணம்.இந்தத் தகவலை இப்போது நாம் படிக்கிறோம்.இதில் ஒரு காமரீதியான கிக் இருக்கிறது.இதை மாய்ந்து,மாய்ந்து நமது நெருங்கிய நட்பு வட்டத்தில் பெருமையாக சொல்லுகிறோம்.இப்படிச் சொல்லுவதால்,சொல்லும் நாளன்று நாம் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேராமல்,இந்த எண்ணின் நடிகைக்குப் போய்ச்சேர்ந்துவிடும்.இதேபோல்,நாம் யாரிடமெல்லாம் சொல்லுகிறோமோ,அவர்கள் அவர்களது நட்புவட்டத்தில் இந்த காமகிசுகிசுவைப் பரப்புவார்கள்.அப்படிப் பரப்புபவர்களின் புண்ணியங்களும் எண்ணின் நடிகையைப் போய்ச்சேரும்.


சரி! நம்மில் பலர் தினசரி,வார,மாத இதழ்களைப்படிப்பதில்லை;அவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?


அவர்கள் தாம் வசிக்கும் தெருவில் இதுபோல் கேள்விப்படும் காமரீதியான கிசுகிசு(அது பெரும்பாலும் பாதி அல்லது நூற்றில் ஒரு பங்கு பொய்யாகத்தான் இருக்கும்)க்களை தனது நட்புவட்டத்தில் பரப்ப,பரப்ப அவர்கள் செய்யும் புண்ணியங்கள் அவர்களுக்குக் கிடைக்காது.


அவளைப்பத்தி தெரியாதாக்கும்;அவள் இப்படித் தானே! என்று ஆரம்பித்து ஒரு வருடம் முழுக்க எல்லோரின் காம ரீதியான அவமானங்களையும் பேசிப்பேசி நம்மைச் சுற்றியிருப்பவர்களின் ஒழுக்கத்தையும் நாம் அழித்துவிடலாம்.நாமும் யாரோ சிலருக்காக புண்ணியத்தைச் சேர்த்து,புரணி பேசி அவர்களை ‘வாழ’ வைத்து,நாம் எப்போதும் கஷ்டப்படுவோம்.சரியா?

No comments:

Post a Comment