Saturday, April 21, 2012

இப்போதாவது இந்தியா விழித்துக்கொள்ளுமா?


உலகின் ஒரே வல்லரசாக வேண்டுமென்ற பேராசையில் துடித்துக்கொண்டிருக்கும் சீனா,அதற்கான ஆரம்பக்கட்டப்பணிகளை 1940 களிலேயே ஆரம்பித்துவிட்டது.தற்போது அது இறுதிக்கட்டத்தினை எட்டி இருக்கிறது.சுதந்திரமான பேச்சுரிமை,எழுத்துரிமை,ஜனநாயக சுதந்திரம் சீனர்களுக்கு சீன அரசு தராவிட்டாலும்,சீன மக்களுக்குத் தேவையான பல அடிப்படைக் கட்டமைப்புகளை செய்துகொண்டே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு,சீன ராணுவம் தேசிய கணினி பாதுகாப்புக்கல்லூரி என்ற பெயரில் சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு கணினி,இணையம்,இணைய வலைப்பின்னல்களை ஊடுருவுவது பற்றியும்,சைபர் க்ரைம்களை செய்வது பற்றியும் பயிற்சியளித்தது.சுமார் 3 ஆண்டுகளுக்கு இப்படி ஒரு லட்சம் சீனர்கள் பயிற்சி பெற்றனர்.அமெரிக்காவின் கடுமையான நெருக்கடிக்குப்பின்னர்,அந்த கணினி பாதுகாப்புக்கல்லூரி மூடப்பட்டது.

இந்த கல்லூரி ஆரம்பித்ததும்,இந்தியாவின் பாதுகாப்புக்குச் சோதனைதான்! என்ன செய்ய? இந்தியாவை இத்தாலி பக்தி கொண்டவரே ஆளும்போது இந்தியாவினால் தற்காப்பு நடவடிக்கைகூட எடுக்க முடியவில்லை;எப்போதுமே கண்கெட்டப்பின்னரே சூரிய நமஸ்காரம் என்பது போல,சீனாவின் தகவல்தொழில்நுட்ப ராணுவப்பிரிவு இந்தியாவின் ராணுவ ரகசியங்களை திருடியப்பின்னர்தான், நமக்கும் அதேபோல் ராணுவ கணினி பாதுகாப்புக்கல்லூரி துவங்கும் அவசியம் புலப்பட்டது;அதுவும்,நாம் ஒரு கனடா கணினி முகமையை அணுகி,சீனா எந்தெந்த இந்திய ராணுவ ரகசியங்களைத் திருடியிருக்கிறது? என்பதினைக் கண்டறியும் படி (பணம் கொடுத்துதான்) வேண்டியபின்னரே,இந்த பிற்காப்பு(தற்காப்பு=முன்கூட்டியே செய்வது;பிற்காப்பு=அசிங்கப்பட்டப்பின்னர் செய்வது) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல,இணையம் வழியே திருடியது சீனாவுக்கு,சீனாவின் வெளியுறவுக்கொள்கைகளை எதிர்கால நோக்கில் வடிவமைப்பதற்குப் போதுமானதாக இல்லை;எனவே,சீனா அடுத்த திட்டத்தில் இறங்கியிருக்கிறது.அதுதான்,நேரடியாக சீன உளவாளிகளை,ஒற்றர்களை அனுப்புவது.இதற்காக சீனா எட்டு கல்லூரிகளை திறக்கப்போகிறது.ஆமாம்,நேஷனல் இன் டலிஜன்ஸ் காலேஜ் என்ற பெயரில் சீனா முழுக்கவும் திறக்க இருக்கிறது.அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சி.ஐ.ஏ.வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் இந்தச் செயலால்,இந்தியாவில் படிக்கவரும் சீன மாணவ மாணவிகளையும் இனி நாம் கண்காணிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாதான் அடுத்த உலக வல்லரசு என்பதை நார்ஸ்டர்டாமஸ் எப்போதோ தனது நூற்றாண்டுகள் என்ற புத்தகத்தில் தீர்க்க தரிசனமாக சொல்லிவிட்டார்.இருப்பினும்,அரசியல்,அரசு ரீதியாக நாம் என்ன செய்யப்போகிறோம்?

இந்த விஷயத்திலாவது இந்தியா விழித்துக்கொள்ளுமா? எனது முன்னோர்களாகிய சித்தர்களே! இந்தியாவின் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

No comments:

Post a Comment