Sunday, April 22, 2012

வாஞ்சிநாதன்:இந்து தேசத்தின் வீரனை மறக்கலாமா?




1911,ஜீன் 11 அன்றுதான் மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ்,வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாளையங்கோட்டையில் ஆஷ் கல்லறை இருக்கிறது.100 ஆண்டுகளுக்குப்பிறகு,2011 ஜீன் 11 ஆம் தேதி அவரது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்திலிருந்து நமது தமிழ்நாட்டில் இருக்கும் பாளையங்கோட்டைக்கு வந்து,இங்கிருக்கும் ஆஷ் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அவர்கள் 100 வது ஆண்டை நினைவுகூர்ந்து வந்தது நம்மிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

அதே நாளில் ஆஷைக் கொன்று தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட வாஞ்சிநாதனை மறந்துவிட்டோம்.அவருடைய நூற்றாண்டு வந்த சுவடும் தெரியவில்லை;போன சுவடும் தெரியவில்லை என்று 2.7.2011 அன்று வெளியான தினத்தந்தி தலையங்கத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆஷின் வாரிசுகள் வந்து நினைவஞ்சலி செய்ததை அனைத்து ஆங்கிலப் பத்திரிகைகளும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்ட நிலையில் வாஞ்சிநாதனை யாரும் சீண்டக்கூட வில்லை;இந்நிலையில் வாஞ்சிநாதனின் நூற்றாண்டைக் கொண்டாடவில்லை என துணிச்சலுடன் எடுத்துக்கூறிய தினத்தந்திக்கு ஒரு சபாஷ்!!!

வாஞ்சிநாதனின் தியாகத்துக்கு ஆன்மீகக்கடல் தலைவணங்குகிறது.
ஓம்சிவசிவஓம்








No comments:

Post a Comment