Saturday, April 21, 2012

பொறாமையை எதிர்கொள்வது எப்படி?


யாருக்கெல்லாம் மனதில் உறுதி இல்லையோ,யாருக்கெல்லாம் அதிசயத்தின் மீது பற்றுகொண்டு,உழைக்காமல் அல்லது தனது தேவையான அளவுக்கு உழைக்க வில்லையோ அவர்களுக்கு பொறாமை உண்டாகிறது.1995 முதல் உலகமயமாக்கலின் விளைவாக,கேபிள் டிவி தொழிலில் ஒரு புரட்சி வந்தது.சன் டிவி உருவாகி,இன்று தனது திட்டமிட்ட நிர்வாகத்திறமை மற்றும் அரசியல் செல்வாக்கினால் தமிழ்நாட்டுக்குடும்பங்களின் உறுப்பினர்கள் அளவுக்கு வளர்ந்துவிட்டது.சன் டிவி குழுமம் தான் மெகா தொடர்களை அறிமுகப்படுத்தியதோடு,குடும்ப உறவுகளை கொச்சைப்படுத்தியதோடு,முறையற்ற உறவுகளுக்கு ஒரு அங்கீகாரம் வாங்கித்தந்தது.மேலும்,எப்படியெல்லாம் பொறாமைப்படுவது? நிம்மதியாக,யாருக்கும் கெடுதி தராத உறவுகளை எப்படி பிரிப்பது? என்ற நரித்தனத்தை தமிழ்நாட்டுக்கே சொல்லித்தந்தது.இதனால்,பல நல்ல தமிழ் உள்ளங்கள் முழுவதும் நச்சு நிறைந்த நயவஞ்சக மனமாகி,நிம்மதியில்லாத தமிழ்நாடாகிவிட்டது.இதுபற்றி,ஓ.ஆர்.ஜி. ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தால் நல்லது.அப்படி எடுக்க யார் பணம் தருவார்?






சரி மேட்டருக்கு வருவோம்.






எனது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.அவள் தினமும் ஐந்துமணிக்கு எழுந்து,ஆறுமணிக்குள் தயாராகிவிடுவாள்;ஆறு மணிமுதல்,இரவு வரையிலும் சுறுசுறுப்பாக அவளது கடமைகளைச் செய்வாள்.ஒருநாள்,அவள் தனது வகுப்புத் தோழியிடம் கூறினாள்: நான் தினமும் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவேன்.அது குளிர்காலமாக இருந்தாலும் சரி,மழைக்காலமாக இருந்தாலும் சரி






இப்படிச் சொன்ன மறு நாளிலிருந்து,அவளால் ஆறுமணிக்கு மேல்தான் எழுந்திருக்கவே முடிகிறது.தற்போது,அவளது தினசரி வாழ்க்கை அரக்க பரக்க ஓடிக்கொண்டிருக்கிறது.


ஏன் இப்படி எனது மகளுக்கு ஆனது?






நண்பர்களின்/உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது,சில நாட்களில் வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லுவார்கள்.அப்படிச் சாப்பிடும்போது,அவர்களின் கண்களை கவனிப்பேன்;அதில் ஒரு எதிர்பார்ப்பு தெரியும்.


சாப்பிட்டு முடித்த சில மணிநேரங்களிலேயே, எனக்கு வயிற்றுப்போக்கு வந்துவிடும்.இப்படி என்றாவது ஒரு நாள் நிகழ்ந்தால் அது தப்பில்லை;அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.இதனால்,சொந்த ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டேன்.ஏன் இப்படி எனக்கு நிகழ்கிறது?










சில ஜோதிட மாத இதழ்களில் ஜோதிடம் சார்ந்த கட்டுரைகள் எழுதத் துவங்கியிருக்கிறேன்.அப்படி எழுதி,அவற்றை திருத்தி,அவற்றில் எனது சிந்தையில் விடுபட்டவற்றை மீண்டும் சேர்த்து,அனுப்பினாலும்,ஒரு சில கட்டுரைகள் மட்டுமே வெளிவருகின்றன.அதில், எனது பெயர்,முகவரி,செல் எண்ணை வெளியிடுகின்றனர்.என்னதான் பிறரின் பொறாமையிலிருந்து தப்பிக்க நினைத்தாலும்,நமது நட்பு மற்றும் உறவு வட்டத்தில் நமது மதிப்பை அதிகரிக்க ஏதாவது பில்ட் அப் செய்வது பிறரின் சுபாவம்;நான் என்ன செய்து வருகிறேன்? என்பதை வெளிப்படுத்துவது எனது குணம்.எனது ஜோதிட நண்பர்கள் மத்தியில் இப்படி எனது ஜோதிடக்கட்டுரை வெளிவந்திருக்கிறது என நான் சொல்லும் நாட்களிலெல்லாம் அவர்களின் கண்களிலிருந்து ஒரு வித சூட்சும அலை,மொத்தமாகப் புறப்பட்டு என்னைத் தாக்கும்.அப்படி நான் அவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாக சொன்ன நாட்களில்,எனது ஜோதிடத் தொழில் டல்லடிக்கும்;அல்லது எனது நெருங்கிய உறவில் திட்டு வாங்கியிருக்கிறேன்.






ஒருதடவை,எனது பக்கத்துவீட்டு அம்மாவிடம்,அம்மா,நாளைக்கு ஆடி அமாவாசை! நான் ராமேஸ்வரம் போகப்போகிறேன்.என்றேன்.அதற்கு அந்த அம்மா,ஆடி அமாவாசைக்கு எதுக்கு அங்கே போறீங்க? எனக் கேட்டார்.


உடனே,ஆடி அமாவாசையின் பெருமைகளை விவரித்து,ராமேஸ்வரம் சென்று நான் அங்கு செய்ய இருக்கும் பித்ரு தர்ப்பணங்களைப் பற்றி விலாவாரியாகச் சொன்னேன்.அப்படிச் சொன்ன உற்சாகத்தில்,அவர்களின் கண்களைக் கவனிக்க வில்லை;மறுநாள்,விடிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து தூங்கியும் கூட,அந்த அலாரம் ஐந்து முறை அலறியும் கூட,நான் தூங்கி எழுந்தது காலை 6 மணிக்குத்தான்.பிறகென்ன? ராமேஸ்வரம் செல்லவில்லை.


இதற்குப் பெயரும் அதுதான்!!!






ஆக,மிஸ்டிக் செல்வம் ஐயா சொன்னது போல்,மனிதனுக்கு விஷகலை அதிகம்.அதனால்தான் அவன் நடக்கும் இடத்தில் புல் முளைப்பதில்லை;பிறரது பொறாமை,சாபங்கள்,வயிற்றெரிச்சல் நம்மையும்,நமது தொழிலையும்,நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்காமல் இருக்க நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.






1.தினமும் ஏதாவது ஒரு ரூபத்தில் மஞ்சள் நிற ஆடை/கர்ச்சீப்/பனியன்/சட்டை பயன்படுத்த வேண்டும்.மஞ்சள் நிறப்பொருளில்,ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் தரப்படும் எலுமிச்சை பழம் வைத்திருக்கலாம்.மஞ்சள் நிற ஆடை/கர்ச்சீப் பிறரது பொறாமையிலிருந்து நம்மைக் காக்கும்.அந்த தீய எண்ணங்களை ஈர்த்துக்கொள்ளும்.






2.நம்மைச் சுற்றியுள்ளவர்களே நமது உலகம்.அவர்களிடம் நமது பெருமைகளையும்,அவமானங்களையும் ஒரு போதும் சொல்லக்கூடாது.ஆனால்,நமது மனம் நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பாராட்டுக்கு ஏங்கும்.அது அவசியம்தான்.அப்படி அவர்களின் பாராட்டு உங்களுக்கு வேண்டுமானால்,உங்களின் வளர்ச்சி/சாதனையை நீங்களே தம்பட்டம் அடிக்கக்கூடாது.(அவர்களிடம் சொல்லக்கூடாது).


நமது பெருமையை நாமே சொன்னால்,அது தற்பெருமைதான்.நம் மீது நிஜமாகவே மரியாதை வைத்திருக்கும் ஓரிரு உளறுவாயர்களை நாம் பாக்கெட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.அவர்களிடம் நமது பெருமைகள்/சாதனைகள்/முன்னேற்றங்களை மொத்தமாக அவர்களிடம் சொல்லக்கூடாது.அவர்கள் மறந்துவிடுவார்கள்.






போன தடவை/போன மாதம்/போன புராஜக்ட்/போன வருடம் செய்த சாதனையைத் தான் இப்போது அவர்களிடம் ரகசியமாக சொல்லி, ‘யாரிடமும் சொல்லாதே’ என்று தெரிவித்தவாறு,அவர்களை சிறு சிறு பரிசு கொடுத்து,அவர்களை வளர்க்க வேண்டும்.






பொறாமைபிடித்தவர்கள் இதை உறுதிபடுத்திட, நம்மிடம் ‘நல்ல மூடு’ இருக்கும்போது கேட்பார்கள்.அதை நாம் சந்தோஷமாகவும்,பெருமையாகவும் ஆமா என சொல்லக்கூடாது.அது போன மாசமே நடந்திருச்சே என தெரிவிப்பதன் மூலமாக,அவர்களின் பொறாமை பொங்காமல் சிறுத்து,சிதறிவிடும்.






அதே சமயம்,ஏதோ அதிர்ஷ்டத்தால் நடந்தது என்றவாறு சொல்லிவிட வேண்டும்.






ஓம்சிவசிவஓம்








No comments:

Post a Comment