நேற்றைய நாளிதழை கையால் தட்டிக்கட்டி, “என்ன அநியாயம்? தேர்வுக்கு முன் அரசுபள்ளி வளாகத்தில் அப்பா அம்மாவுக்கு பாத பூஜை செய்கிறார்கள் மாணவ மாணவிகள்.கொஞ்சம் ஓவர் இல்லையா?’ என்று குமுறியபடி வீட்டுக்குள் வந்தார் எதிர்வீட்டு எட்வர்டு.அப்பாவின் நண்பரான அவர்,நேற்றைய நாளிதழைத் தந்துவிட்டு,இன்றைய தினசரியை எடுத்துப்போவது அவரது வாடிக்கை.அப்பா மறுபேச்சு பேசவில்லை;
மகன் மாரிமுத்து, “அப்பா,நேற்று பேப்பரைப் பார்த்துவிட்டு,நீங்கள் தேடிய தகவல் ‘நெட்’டில் தேடியதில் கிடைத்தது.இதோ”என்று ஒரு அச்சடித்த காகிதத்தைக் கொடுத்தான்.அதை உரக்கப் படித்தார் அப்பா.
“டாக்டர் சூ கிம் பென்ஸில்வேனியா பல்கலை.யில் அறுவை சிகிச்சை நிபுணர்;ஜேன் கிம் பிலடெல்பிய குழந்தைகள் மருத்துவமனை சட்ட ஆலோசகர்;குடியேற்ற விவகாரங்கள் நிபுணர்.இருவரும் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இது: ‘அமெரிக்காவில் படிக்கும் ஆசிய மாணவ,மாணவிகளில் இந்து மாணவ,மாணவியர் படிப்பில் அபாரமான சாதனை புரிவதன் ரகசியம்=அப்பா,அம்மா உள்ளிட்ட குடும்பப்பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதால் எதிர்காலம் சுபிட்சமாகும் என்ற அவர்களின் நம்பிக்கை”
இதைக்கேட்டுக்கொண்டிருந்த எட்வர்டு அங்கிள், இன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டினார்.மாரிமுத்து முகத்தில் புன்முறுவல்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 5,வெளியீடு 27.4.2012
mutrilum unmai
ReplyDelete