டெக்னாலஜியின் வளர்ச்சியால் இன்று பலவிதமான வசதிகள் நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன;வசதிகளின் விலை குறைந்துவருவதோடு,கூடுதல் வசதிகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன;இதனால்,வாழ்க்கை மிக எளிதாக மாறிக்கொண்டிருந்தாலும்,மனித நேயம்,அன்பு,விட்டுக்கொடுத்தல்,குடும்ப ஒற்றுமை போன்றவை காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன;சுலபமாகக் கிடைக்க வேண்டிய யோகாசனம்,தியானப் பயிற்சி,மூலிகை மருந்துகள்,சுத்தமான தண்ணீர்,சுத்தமான காற்று,ஆரோக்கியமான உணவு போன்றவைகளைத் தேடக்கூடிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.
அதே சமயம் மனதைக் கெடுக்கும் மது,உடலையும்,மனதையும் நாசமாக்கி வக்கிர எண்ணங்களை மட்டுமே உண்டாக்கும் காமத்தை மையப்படுத்தும் டிவி நெடுந்தொடர்கள்,கேவலமான சினிமாப்பாடல்கள்,அந்தரங்கமாக செய்ய வேண்டிய தாம்பத்தியம் இன்று புளூடூத் மூலமாகவும்,இணையம் மூலமாகவும் சில நிமிடங்களில் பல கோடி பேர்களைச் சென்றடைந்துகொண்டே இருக்கின்றன.இதை சேமிப்பதையும்,பிறருக்கு பரப்புவதையும் பெருமையாக நினைக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கிவிட்டோம்;
வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டும்,விட்டுக்கொடுத்தும் வாழ வேண்டிய கணவன் மனைவிக்குள்ளே இந்த ஆபாச அரக்கன்,வக்கிர எண்ணமாகப் புகுந்து,சாட்சியில்லாத உண்மையை ப்ளாக் மெயில் ஆயுதமாக்கிக்கொண்டிருப்பதால் குடும்ப தத்துவமே சிதையத் துவங்கிவிட்டது;
அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டின் ஆத்ம பலத்தைப் பாதுகாக்கும் எண்ணமே இல்லையோ? என்ற அளவுக்கு அவர்களில் செயல்பாடுகள் இருக்கின்றன.நம்மையும்,நமது குடும்பத்தையும் நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆபாசத்துக்கெதிராக நாம்தான் எதிர்த்து கடுமையாக குரல் கொடுக்க வேண்டும்;இல்லாவிட்டால்,இதே ஆபாச வெள்ளத்தில் நாமும்,நமது இந்து தர்மமும் மூழ்கி அழிந்துபோய்விடும் வாய்ப்பு சிறிது சிறிதாக உருவாகிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையை மேற்கு நாடுகள் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்பது சத்தியம்!!!
இந்த சூழ்நிலையில் வக்கிர எண்ணங்களிலிருந்து விடுபட விரும்பும் யாராக இருந்தாலும்,ஒரு நாளுக்கு 40 நிமிடம் வீதம் ஓராண்டு வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.இவ்வாறு செய்வதால்,நமது மனதில் புதைந்திருக்கும் வக்கிர எண்ணங்கள் சுத்திகரிக்கப்பட்டு,பரிசுத்தமான மனமாக மாறிவிடும்.ஏராளமான நமது வாசக,வாசகிகளின் ஓம்சிவசிவஓம் ஜபத்தின் அனுபவத்தின் மூலமாக இதை உணர முடிந்திருக்கிறது.
சுய கட்டுப்பாடு என்பது மீண்டும் அந்த ஆபாச படங்களை தினமும் பார்க்காமல் இருக்குமளவுக்கு தன்னைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.இது ரொம்ப முக்கியம் ஆகும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment