Saturday, April 28, 2012

அவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் துவாதசி திதி வரும் நாட்கள் பட்டியல்








நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு என்ற ஆன்மீகப் பேருண்மையை ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளாகிய நீங்கள், உங்களின் அனைத்துப்  பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா? ,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)
அதென்ன முக்தி?: 84,00,000 விதமான உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன.இந்த 84,00,000 விதமான உயிரினங்களாக நாம் பிறந்து,பிறந்து,பிறந்து கடைசியில் நமக்கு கடவுளால் வழங்கப்படுவது மனிதப்பிறவி!!!
மனிதனாகப் பிறந்த பின்னர்,நமது தீய எண்ணங்களால் பாவங்களையும்,நல்ல எண்ணங்களால் புண்ணியத்தையும் ஒவ்வொரு மனித பிறவியிலும் சேகரிக்கிறோம்;இந்த மனித இயல்பினால்,ஒவ்வொரு ஐந்து மனித பிறவிகளுக்கும் ஒரு முறை    நாம் பணக்காரனாகவோ,பரம ஏழையாகவோ பிறந்துகொண்டே இருப்போம்;

இந்த மனித பிறப்பு,மனித இறப்பு சுழலில் இருந்து விடுபட நாம் பல ஜன்மங்களாக தியானம்,தவம்,அன்னதானம்,ஆடைதானம்,ருத்ராட்ச தானம்,தீபதானம்,கோவில் கட்டுதல்,கல்வி தானம்,தண்ணீர் தானம் என பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தாலும்,நமது பாவக்கணக்கு ஜீரோ பேலன்ஸ் வரும் வரை பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.


நிறைய்ய புண்ணியம் செய்தால்,இந்திர உலகம்,சந்திர உலகம்,வைகுண்டம்,சிவ லோகம் ,சங்கு உலகம்,சக்கர உலகம் என இவற்றில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று சகல விதமான போகங்களை(ஜாலிகளை!!!) அனுபவித்துவிட்டு,மீண்டும் மனித பிறப்பாக பிறக்க வேண்டும்.

நிறைய்ய பாவங்களை செய்தால்,பூமிக்கு கீழே(தெற்கு திசையில் விண்வெளியில் சூட்சுமமாக இருக்கும்) நாக உலகம்,பேய் உலகம்,பைசாச உலகம்,நரக உலகம் போன்றவைகளுக்குப் போய் பூமியில் இதுவரையில்லாத கொடூரமான சித்திரவதைகளை பல ஆயிரம்(?!?!!) ஆண்டுகளாக அனுபவித்துவிட்டு,மீண்டும் ரொம்ப சாதாரண மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்.ஆக,இந்த பூமியே கர்ம பூமி; மற்றவை அனைத்தும் மோட்ச பூமி;

இந்த பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க துவாதசி திதி அன்னதானம் செய்வதன் மூலமாக ஒரு போதும் பூமியில் நாம் மனித பிறவியெடுக்காமலேயே போவதுதான் முக்தி!!!
அசைவ அன்னதானம் செய்யக்கூடாது;நள்ளிரவு அன்னதானம் செய்யக்கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக்கூடாது;வீடு வாசல் இல்லாதவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தால் மட்டுமே அது அன்னதானம் என்று கருதப்படும்.அன்னதானம் பெறுபவர்களை ஒரு விநாடி மானசீகமாக நன்றி செலுத்த வேண்டும்.(முடிந்தால் கையெடுத்தும் கும்பிடலாம்)

இந்த நாட்களில் ஏதாவது ஒரே ஒரு நாளை நாம் தேர்ந்தெடுத்து நமது குடும்பத்தோடு அண்ணாமலைக்குச் செல்வோம்;குறைந்தது காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் வீதம் அன்னதானம் செய்வோம்;முடிந்தால் மதிய நேர அன்னதானத்தை எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் இருக்கும் பகுதியில் செய்வது மிகுந்த நன்மைகளையும்,புண்ணியத்தையும் தரும்.மேலும் நமது வாதைகளை அறவே நீக்கும்.

வசதியிருப்பவர்கள் எட்டு லிங்கங்களின் வாசல்களிலும் அன்னதானம் செய்வது நன்று.ஒவ்வொரு லிங்கத்திலும் இருக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்ய நவக்கிரகங்களினால் ஏற்பட இருக்கும் பிரச்னைகள்,கர்மங்கள் முழுமையாக விலகிவிடும்.இதை துவாதசி திதி அன்னதானம் செய்த சில நாட்களிலேயே உணரலாம்.எல்லாம் அருணாச்சலத்தின் மகிமை!!!

நந்தன ஆண்டின் துவாதசி திதி வரும் நாட்கள்

17.4.12 செவ்வாய் காலை 8.12 முதல் 18.4.12 காலை 8.52 வரை;

2.5.12 புதன் மாலை 6.49 முதல் 3.5.12 வியாழன் மாலை 4.54 வரை;

16.5.12 புதன் இரவு 10.39 முதல் 17.5.12 வியாழன் நள்ளிரவு 12.09 வரை(17.5.12 முழுவதும் என்று எடுத்துக் கொள்ளவும்);

1.6.12 வெள்ளி முழுவதும்;

15.6.12 வெள்ளி மதியம் 1.48 முதல் 16.6.12 சனி மதியம் 3.42 வரை;

30.6.12 சனி காலை 10.07 முதல் 1.7.12 ஞாயிறு காலை 7.10 வரை;

15.7.12 ஞாயிறு முழுவதும்;

29.7.12 ஞாயிறு மாலை 5 முதல் 30.7.12 திங்கள் மதியம் 2.46 வரை;

14.8.12 செவ்வாய் முழுவதும்(இரவு 9.14 வரை);

28.8.12 செவ்வாய் முழுவதும்;

12.9.12 புதன் காலை 10.18 முதல் 13.9.12 வியாழன் காலை 10.36 வரை;

26.9.12 புதன் காலை 10.20 முதல் 27.9.12 வியாழன் காலை 9.20 வரை;

12.10.12 வெள்ளி முழுவதும்;

26.10.12 வெள்ளி முழுவதும்;

10.11.12 சனி காலை 11.54 முதல் 11.11.12 ஞாயிறு காலை 10.26 வரை;

24.11.12 சனி மதியம் 1.40 முதல் 25.11.12 ஞாயிறு மதியம் 2.45 வரை;

10.12.12 திங்கள் முழுவதும்;

24.12.12 திங்கள் காலை 7.34 முதல் இன்று முழுவதும்;

8.1.13 செவ்வாய் காலை 10.20 முதல் 9.1.13 புதன் காலை 8.02 வரை;

23.1.13 புதன் முழுவதும்;

7.2.13 வியாழன் முழுவதும்(மாலை 6.36 வரை);

22.2.13 வெள்ளி முழுவதும்;

8.3.13 வெள்ளி முழுவதும்;

23.3.13 சனி மாலை 4 முதல் 24.3.13 ஞாயிறு மாலை 4.39 வரை;

6.4.13 சனி மாலை 5.46 முதல் 7.4.13 ஞாயிறு மாலை 4.36 வரை;

இந்துக்காலக்கணக்குப்படி,ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான காலமே ஒரு நாள் எனப்படும்.ஆனால்,இந்த பட்டியலில் பல துவாதசி திதி நாட்கள் ஒரு நாள் மதியம் அல்லது மாலையில் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை அமைந்திருக்கின்றன.அந்த நாட்களைத் தவிர,முழுநாட்களில் வரும் துவாதசி திதி நாட்களைப் பயன்படுத்தவும்.


ஒரு  நாளில்,காலை நேரம் என்பது  4.30 முதல் 11 மணிவரையிலான காலகட்டம் ஆகும்;
மதிய நேரம் என்பது மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையிலான காலகட்டம் ஆகும்;
இரவு நேரம் என்பது இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான காலகட்டம் ஆகும்.ஆக,இந்த நேரங்களுக்குள் அன்னதானம் செய்துவிட வேண்டும்.




ஓம்சிவசிவஓம்


No comments:

Post a Comment