Saturday, April 21, 2012

ஜன்மச்சனி & அஷ்டமச்சனியை எப்படி எதிர்கொள்வது?




ஏழரைச்சனி என்பது ஏழரை ஆண்டுகளாக தொடரும் சனி ஆட்சிகாலமாகும்.நமது ராசிக்கு முந்தைய ராசியில் இரண்டரை ஆண்டுகள் விரையச்சனியாகவும்,நமது ராசியில் இரண்டரை ஆண்டுகள் ஜன்மச்சனியாகவும்,நமது ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை ஆண்டுகள் வாக்குச்சனி அல்லது பாதச்சனியாகவும் செயல்படும்.

26.6.2008 முதல் 30.11.2011 வரையிலும் சிம்மராசிக்கு வாக்குச்சனியாகவும்,கன்னிராசிக்கு ஜன்மச்சனியாகவும்,துலாம் ராசிக்கு விரையச்சனியாகவும் செயல்பட்டுவருகிறது.இதே காலகட்டத்தில் கும்பராசிக்கு அஷ்டமச்சனியாகவும் செயல்பட்டுவருகிறது.

ஏழரைச்சனிகாலத்தில் ஒருவர் என்னவெல்லாம் கஷ்டப்படுவாரோ,அதே கஷ்டத்தை அஷ்டமச்சனிகாலமாகிய இரண்டரை ஆண்டுகளில் பட்டுவிடுவார்.

30.11.2011 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2014 வரையிலும் கன்னிராசிக்கு வாக்குச்சனியாகவும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியாகவும்,விருச்சிகராசிக்கு விரையச்சனியாகவும் ஏழரைச்சனி பரிமளிக்கிறது.மீனராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியாகவும் இந்த காலம் இருக்கும்.

ஒருமனிதனின் 30 ஆண்டுகள் வாழ்க்கையில் வெறும் பத்தாண்டுகள் மட்டுமே சனியின் தொல்லையில்லாமல் நிம்மதியில்லாமல் வாழ முடியும்.

ஏழரைச்சனிகாலத்தில் நமது உழைப்புக்குரிய மரியாதை,அங்கீகாரம் இராது.நிரந்தர வருமானத்தில் இருக்க முடியாது;எல்லோரும் நம்மை உதாசீனப்படுத்துவர்.ஒரே தடவையில் ஒரு சின்ன வேலையை முடிக்க முடியாது.நாமெல்லாம் ஏன் உயிர் வாழணும்? என்ற எண்ணத்தை உருவாக்கிய சில மாதங்களில் ஜன்மச்சனி நம்மை விட்டுவிலகிவிடும்.இது உண்மையா?இல்லையா? என்பதை அறிய உங்களுக்குத் தெரிந்த கன்னிராசிக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்து பனிரெண்டரை ஆண்டுகள் வரை மட்டுமே நிம்மதியாக வாழமுடியும்.அஷ்டமச்சனி ஒருவருக்கு முடிந்தால்,அது முடிந்த ஏழரை ஆண்டுகள் வரை மட்டுமே நிம்மதியாகவும்,வேலை/தொழில் முன்னேற்றத்துடன் இருக்க முடியும்.

ஏழரைச்சனி முடிந்து பனிரெண்டரை ஆண்டுகளில் தொழில் அல்லது வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.வருமானம் கூடும்.நமது இயற்கையான சுபாவமும் வெளிப்படும்.இந்த பனிரெண்டரை ஆண்டுகளில் முடிந்தவரையில் யாருக்கும் மனதாலோ,உடலாலே தீங்கு செய்தால்,அதற்கான பிரதிபலன் உடனடியாகக் கிடைத்துவிடாது.அஷ்டமச்சனியில் மொத்தமாகக் கிடைக்கும்.ஏழரைச்சனி வரும் முன்பு,நீங்கள் பரம ஒழுக்கமானவராக இருந்தால்,அது வாழ்க்கையின் மறுபக்கத்தை ஏழரைச்சனிகாலத்தில் காட்டும்.

அதே சமயம்,ஏழரைச்சனி வரும் முன்பு,நீங்கள் மனம்போன போக்கில் வாழ்ந்துவந்தால்,ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர வைக்கும்.

இந்த விதி,சிலருக்கு மட்டும் பொருந்தாது.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலத்தில் கூட,சிலருக்கு சனியின் தீமை சிறிதும் பாதிக்காது.அவர்கள் ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணங்களில் சனி நின்றால்,அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் யோகமும் வளர்ச்சியும் நிறைந்த கால கட்டமாக அமையும்.சனி உச்சமாக இருந்தாலும் இதே நிலைதான்.


சரி போகட்டும்.சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

விநாயகரை வழிபட சனி துன்பம் விலகும்.சிவனை வழிபட சனித்தொல்லை இராது என கேள்விப்பட்டிருப்போம்.ஆனால்,அப்படி செய்தவர்களுக்கு சனித்தொல்லை இருந்திருக்கிறது.
சனி தொல்லை நீங்கிட,சுலப வழி பைரவர் வழிபாடுதான்.இதை ஆராய்ந்து நமக்காக அறுதியிட்டவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

அவரது ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகளை உங்களுக்குத் தருவதில் ஆன்மீகக்கடல் பெருமைப்படுகிறது:
30.11.2011 முதல் 2014 வரையிலும் ஜன்மச்சனி இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது.
1.அசைவம் சாப்பிடுவதை 30.11.2011 முதல் 2014 வரையிலும் கைவிடுவது.முடியாதவர்கள் சனிக்கிழமைகளில் மட்டுமாவது கைவிடுவது அவசியம்.நிரந்தரமாக கைவிடுவதே சிறந்தது.

2.சனிக்கிழமைகளில் வரும் ராகு காலமாகிய காலை 9 முதல் 10.30 வரையிலும் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,பாதி நெய்,பாதி இலுப்பையெண்ணெய் கலக்கி அதில் நிரப்ப வேண்டும்.ஒரு சொட்டு எலுமிச்சை சாறு அதில் கலக்கி பைரவர் சன்னிதியில் விளக்கேற்ற வேண்டும்.

இதை மகன்/மகளுக்காக அம்மா/அப்பா/சகோதரன்/சகோதரி/கணவன்/மனைவி செய்துவரலாம்.உரியவரே செய்துவருவது மிகவும் உத்தமம்.

3.துலாம் ராசிக்காரர்கள் ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஷேவிங் செய்வது நன்று.
4.சனிக்கிழமைகளில் அனாதைகளுக்கு ஒரு வேளை மட்டுமாவது அன்னதானம் செய்துவருவது அவசியம்.

5.சனிக்கிழமைகளில் மட்டுமல்லாமல்,எப்போதும் பைரவருடைய காயத்ரி மந்திரத்தை மனதுக்குள் ஜபிப்பது அவசியம்.

30.11.2011 முதல் 2014 வரை அஷ்டமச்சனியை எதிர்கொள்ள இருக்கும் மீனராசியினர் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்:

1.சனிக்கிழமை தவறாமல் இரவு 7.30க்குமேல் 9.30க்குள் பைரவருக்கு கருப்புப் பட்டு அணிவித்து( வாரம் ஒரு முறை முடியாதவர்கள் ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை கூட போதும்)உளுந்துவடைமாலை,கருங்குவளை மாலை/நீலோர்பல மாலை அணிவித்து,புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் படையலிட்டு,இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

2.சனிக்கிழமைகளில் அசைவம் வீட்டிலும்,வெளியிலும் சாப்பிடக்கூடாது.இந்த இரண்டரை ஆண்டுகள் முழுவதும் சாப்பிடாமலிருப்பதே நன்று.

3.சனிக்கிழமைகளில் அனாதைகள்/ஊனமுற்றோர்கள்/நிராதரவாக இருக்கும் வயதானவர்களுக்கு உணவு அளிப்பது(அன்னதானம் தான்) மிகவும் நல்ல செயல் ஆகும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment