இன்னொருவர் அவரது வயது 41.இவர் தினமும் ஓம்சிவசிவஒம் ஒரு முறை மட்டும் ஜபித்துவருகிறார்.காலையில் 30 நிமிடம் வீதம் தினமும் ஜபித்துவருகிறார்.இந்த கடும் குளிர்காலமான மார்கழி மாதத்திலும் எழுந்து,காலை 5.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு 30 நிமிடத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.
அப்படி ஜபித்துவரும் 56 ஆம் நாளில் இவருக்கு ஒரு புதிய நட்பு கிடைத்தது.இவருக்கு அகத்திய மகரிஷியை நேரில் சந்திக்கும் ஆசை பல்லாண்டுகளாக இருக்கிறது.அகத்திய மகரிஷியை சந்திக்கும் விதமான மந்திர உபதேசம் அந்த புதிய நட்பின் மூலமாக கிடைத்திருக்கிறது.
உருது மொழியில் மூன்று வார்த்தைகளில் அந்த மந்திர உபதேசம் இவருக்குக் கிடைத்திருக்கிறது.இந்த மந்திரத்தை ஒரே ஒரு நாளில் 108 முறை ஜபித்தாலே,நீங்கள் அகத்தியரை நேரில் சந்திக்க முடியும்.சிலருக்கு மட்டும் தினமும் 108 முறைவீதம்,45 நாட்கள் வரை ஜபித்துவரவேண்டும்.தினமும் இரவு ஏதாவது ஒரு மணிநேரம் இந்த மந்திரம் ஜபிக்க வேண்டும்.(108 முறை ஜபிக்க 15 நிமிடங்களே ஆகின்றன.அதுவும் எண்ணாமல் ஜபித்தாலே மெதுவாக ஜெபித்தாலும்,வேகமாக ஜெபித்தாலும் 15 நிமிடங்களில் 108 எண்ணிக்கையை தொட்டுவிட முடிகிறது)அப்படி ஜபிக்கும் அறையை 45 நாட்கள் வரையிலும் மாற்றக்கூடாது.தினமும்,இந்த உருது மந்திரத்தை ஜபிக்கும் முன்பாக,அந்த அறையின் ஜன்னல்கள்,கதவுகளை மூடிவிட வேண்டும்.அந்த அறையினை தண்ணீரால் கழுவி காய வைக்க வேண்டுமாம்.காய்ந்தபின்னர்,சுத்தமான பன்னீரும்,தண்ணீரும் கலந்த கலவையை அந்த அறை முழுக்கவும் தெளிக்க வேண்டும்.பரவலாக! அந்த ஈரமும் காய்ந்த பின்னர்,அந்த உருது மந்திரத்தை ஜபிக்க வேண்டுமாம்.
இந்த மந்திர உபதேசத்தால் இவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை;இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து,அகத்திய மகரிஷியின் தரிசனத்தை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.அன்றைய இரவில் தனது டைரியைப் பார்த்திருக்கிறார்.ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்க ஆரம்பித்து 56 நாட்கள் ஆகியிருக்கிறது.அகத்தியரது தரிசன மந்திர ஜபம் ஆரம்பித்துவிட்டால்,ஓம்சிவசிவஓம் ஜபிப்பது பாதிக்கப்படும்.இரண்டையும் சேர்த்தே ஜபிப்பது சரியா? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.ஆனால்,ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் மகிமை ‘தனது நியாயமான நீண்டகால ஏக்கத்தை நிறைவேற்றிவிட்டதை’ நினைத்து பெருமைப்படுகிறார்.ஓராண்டு வரையிலும் ஓம்சிவசிவஓம் மட்டும் ஜபிப்பது என்ற வைராக்கியம் அவரது மனதில் எழுந்திருக்கிறது.
more details at http://www.omshivashivaom.blogspot.com/http://www.omshivashivaom.blogspot.com/
No comments:
Post a Comment