Wednesday, July 8, 2015

ஈசன் அருளைப் பெற்றுத் தரும் பதிகமும்,பாடும் முறையும்!



தினமும் காலையில் காலைக் கடமைகளை முடித்துவிட்டு,வீட்டுப் பூஜையறையில் பாராயணம் செய்து வர ஈசன் அருள் கிட்டும்;
ஒவ்வொரு நாளும் திருநீறு பூசும் போது ஓம் நமச்சிவாய என்று அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஓம் அண்ணாமலையே போற்றி என்று(ஏதாவது ஒன்றை மட்டும்) நினைக்க வேண்டும்;
மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு நோக்கி அந்தத் துண்டின் மீது அமர வேண்டும்;முதலில் நமது குலதெய்வத்தை எண்ணிக்கொள்ள வேண்டும்;(உதாரணமாக, ஒம் பாண்டி முனீஸ்வராய நமஹ என ஒருமுறை நினைத்துக் கொள்ள வேண்டும்)அப்படி நினைத்தால் தான் குலதெய்வத்தின் அருளாசியோடு இறை வழிபாட்டைத் துவக்குவதாக அர்த்தம்;

பின்வரும் விநாயகர் துதியை ஒருமுறை ஜபிக்க வேண்டும்;

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே


பிறகு,நால்வர் துதியை ஜபிக்க  வேண்டும்;

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவுரர் திருத்தாள் போற்றி


என ஜபித்தப் பின்னர்,திருச்சிற்றம்பலம் என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகே உரிய பதிகம் ஜபிக்க வேண்டும்;பதிகம் ஜபித்துமுடித்தப் பின்னர்,இறுதியிலும் ஒருமுறை திருச்சிற்றம்பலம் என்று சொல்லி முடிக்க வேண்டும்;

இந்த வழிமுறைப்படி கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது முன்னோர்கள் சிவ வழிபாடு செய்து சிவதரிசனம் பெற்றனர்;தமது குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்தனர்;ருணத்தில் இருந்து மீண்டனர்;செல்வ வளம் பெற்றனர்;அரசப் பதவி பெற்றனர்;மாந்திரீகத் தாக்கத்திலிருந்து மீண்டனர்;சிவ கணம் ஆயினர்;குழந்தைச் செல்வம் பெற்றனர்;புதையல் பெற்றனர்;சிவ அடியார்களின் அருளைப் பெற்றனர்; உலகத்தையே வசப்படுத்தினர்;வேறு உலகங்களுக்குப் பயணித்தனர்;இந்திரப் பதவி பெற்றனர்;இன்றும் லட்சக்கணக்கானவர்கள் தினமும் பதிகம் பாடி தமது தேவைகளை இறைவனருளால் பெறுவதோடு,சிவனோடு கலக்கவும் செய்து வருகின்றனர்;

ஓம் சிவாய நம
ஒம் சிவாய சிவ
ஒம் நமசிவாய நம




No comments:

Post a Comment