Wednesday, July 22, 2015

கை.வீரமுனியின் அனுபவ மொழிகள்- பகுதி 1




“(நம்மைச் சுற்றியுள்ள மற்றும் நம்முடன் பழகும்) எல்லோரும் நன்றாக இருந்தால்,நாமும் நன்றாக இருப்போம்;எனவே,நம்மோடு பழகும் எல்லோருக்கும் உதவி செய்வதே நமது கடமை;” இந்த கண்ணோட்டத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வறிய நிலையிலேயே இருக்கிறார்கள்;இந்த கண்ணொட்டமுடையவர்களின் குடும்பம் வறுமையில் தான் வாழ்ந்து வருகிறது.இது சரியான கொள்கை அல்ல;
தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்திசெய்யாதவர்கள்,எப்பேர்ப்பட்ட தியாகி இருந்தாலும் சரி;எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் சரி;வீணர்களே!!
வந்தாரை வாழ வைக்கும் ஊரு நம்ம தமிழ்நாடு;
இங்கேயே வாழ்வோரைச் சாகடிக்கும் ஊரும் நம்ம தமிழ்நாடுதான்!
எல்லோரும் நன்றாக இருந்தால் நான் நன்றாக இருப்பேன் என்ற கண்ணோட்டத்தை முகமூடியாக அணிந்து கொண்டு வெகுஜனத் தொடர்பில் வாழ்ந்து வருபவர்களே தமிழ்நாட்டில் அதிகம்;(இந்த முகமூடி கடக லக்னம்,கடக ராசி,கன்னி லக்னம்,கன்னி ராசிக்கு வெகு கச்சிதமாகவே பொருந்துகிறது;மற்றவர்களுக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை;)
நல்லவனாக வாழ்வது கடினம்;இருப்பினும் இந்த கடினமான வாழ்க்கை வாழும் தமிழர்களாலேயே தமிழ்நாடு ஒரளவு முன்னேறி வருகிறது;
நல்லவனாக நடிப்பது சுலபம்;நடிகர்கள் தான் அரசியல் துறை,சினிமாத் துறை,ஆன்மீகத் துறை,தொழில்துறை என சகல துறைகளிலும் வாழ்ந்து (நடித்து) வருகிறார்கள்;
இந்தியா ஜனநாயக நாடு;இங்கே எல்லோருக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன;நீதி,நேர்மை இன்னும் 50% வது இருக்கின்றன என்று நம்புகிறோம்;இது சுத்தப் பொய்;ஜனநாயகத்தை முகமூடியாகக் கொண்ட முதலாளித்துவ நாடாக இந்தியாவை அமெரிக்காவும்,உலக வர்த்தக அமைப்பும் மாற்றி 20 ஆண்டுகளாகிவிட்டன;அதனால் தான் இந்தியர்களாகிய நாம் இக்காலத்தில் விசுவாசத்தை,தன்னம்பிக்கையை,பக்தியை நம்புவதில்லை;சந்தர்ப்பவாதத்தையும்,பண பலம்,அரசியல் பலத்தை மட்டுமே நம்புகிறோம்;
தேசபக்தி இல்லாத தெய்வபக்தி ஒருவரை சிறந்த பக்தராக்கிவிடும்;தெய்வபக்தி இல்லாத தேசபக்தி ஒருவரை அவெஞ்சர்ஸ் ஸைப் போல ஆக்கிவிடும்;தேசபக்தியும்,தெய்வபக்தியும் சேர்ந்தால் மட்டுமே ஒருவரை ஜனநாயகவாதியாக்கிவிடும்;
இந்தியாவின் ஆத்மபலத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது இங்கிலாந்து;அதன் அடிச்சுவட்டைப் பின்பற்றி அரசாட்சி புரிந்தது காங்கிரஸ்;அதனால் தான் தேசபக்தியையே இயக்கம் வைத்து இளைஞர்களிடம் ஊட்டும் இழிநிலை உண்டானது;தேசபக்தி உலகத்தில் எந்த ஒரு நாட்டிற்கும் தேவையில்லை;ஆனால்,நமது பாரத தேசத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேசபக்தி கலந்த தெய்வபக்தி தேவைப்படுகிறது;இதை அடுத்த 25 ஆண்டுகளுக்கு விடாப்பிடியாக உருவாக்கிவிட்டால் உலகின் எந்த உளவுத்துறையாலும்,எந்த வல்லரசு நாட்டாலும் நமது தேசத்தைச் சுரண்ட முடியாது;அடிமைப்படுத்த முடியாது;அவமானப்படுத்த முடியாது;
அமெரிக்காவில் இருந்து நமது மக்களிடம் பரவலாகப் பயன்படுத்தப் படும் எதுவும் அதிக நன்மையைத் தருகிறதா? அதிகத் தீமையைத் தருகிறதா?
அமெரிக்க உளவுத்துறையின் பெயர் என்ன? உடனே சொல்லிவிடலாம்;
சீனாவின் உளவுத்துறையின் பெயர் நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

சீறும் பாம்பைக்கூட நம்பலாம்;சீனாவை உலக அரசியல் அரங்கில் நம்ப முடியுமா? சீனாவே நம்மோடு சம அந்தஸ்தில் பழக வைக்க நாம் இதுவரை செய்தது என்ன?
தன்னைப் பற்றி உயர்வாகவும்,தன்னைத் தவிர தன்னோடு பழகும் அனைவரையும் மிகவும் இழிவாகவும் நினைக்கும் மனப்பான்மை நம்மிடையே எப்போது வந்தது? யாரால் வந்தது?(வாசகர்கள் உங்கள் கருத்துக்களை நாகரீகமான விதத்தில் வெளிப்படுத்தவும்)
தனக்கு உறுதியாக லாபம் கிடைக்கும் என்று தெரிந்தால் அமெரிக்கா தனது பணபலம்;அரசியல் செல்வாக்கு மூலமாக எந்த ஒரு நாட்டிலும் ஊடுருவும்;தான் நினைப்பதைச் சாதிக்கும்;என்ற மாயையை ஹாலிவுட் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன;அதனாலேயே கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா செல்வதையும்,அங்கேயே நிரந்தரமாக வசிப்பதையும் பெருமையாக நாம் நினைக்கிறோம்;ஆனால்,அவ்வளவு பெருமை மிக்க நாடா அமெரிக்கா?
ஆன்மீக பலத்தால் அடுத்து வரக் கூடிய வருடங்களில் நமது நாடு வலிமை மிக்க நாடாக உருவெடுக்கப் போகிறது;யோகா,சித்த மருத்துவம்,நோக்கு வர்மம்,ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து,சமஸ்க்ருதம்,சித்தர்களின் பாடல்கள்,ப்ராணயாமம்,வேதங்களை பாடுதல்,பூசாரி வேலை,சிற்பக் கலை போன்றவைகளை கற்க கோடிக்கணக்கான வெளிநாட்டினர் இங்கே வரப் போகின்றனர்;அவர்களை தாங்கும் அளவுக்கு இங்கே(பாரத நாட்டில்) இவைகளை போதிக்கும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றனவா? நாம் தோற்றுவித்திருக்கிறோமா?
தமிழ்நாட்டில் யோகாவை டிப்ளமோ,டிகிரியாக சொல்லித்தரும் கல்லூரிகள் எத்தனை இருக்கின்றன?

No comments:

Post a Comment