Thursday, July 30, 2015

நாமும் நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகமும்!!!


தலைப்பு சூப்பராக இருக்கிறதா? இந்தத் தலைப்பில் பத்து லட்சம் பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகமே எழுதலாம்;சுமாராக ஆயிரம் பாகங்கள் எழுதலாம்;
தினமும் கணபதி காயத்ரி மந்திரம் ஜபித்துக் கொண்டே இருந்தால்,ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியன்று(விநாயகர் சதுர்த்தி) அதிகாலையில் விநாயகர் தரிசனம் கிட்டும்;அப்படி கிட்ட வேண்டும் எனில்,ஒரு நாளுக்கு பத்து மணி நேரம் வீதம் குறைந்தது 10 மாதங்கள் வரை தினமும் விநாயகர் காயத்ரி மந்திரத்தை ஜபித்திருக்க வேண்டும்;
விநாயகர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது;பயணிக்கும் போது,சாப்பிடும் போது,நடந்து செல்லும் போது,குளிக்கும் போது, _______போது என எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம்;எந்தவித கட்டுப்பாடும் கிடையாது;
வேறு எந்தக் கடவுளின் காயத்ரி மந்திரத்தையும் இப்படி சுதந்திரமாக ஜபிக்கக் கூடாது;மீறி ஜபித்தால் தடுமாறிவிழுவோம்;அல்லது அந்தக் கடவுளின் வாகனமாக இருக்கும் மிருகத்தால் தாக்கப்படுவோம்;
நாத்திகத்தால் பக்தியுணர்ச்சியுள்ளவர்கள்,கட்சித் தலைவன் மீது பக்தியுள்ளவர்களாக மாறத் துவங்கியுள்ளனர்;நாத்திகப் பிரச்சாரமே தமிழ்நாட்டில் முதன் முதலில் பரிகாரக் கோவில்கள் அதிகம் இருக்கும் கும்பகோணத்தில் இருந்துதான் துவக்கப்பட்டது என்பதை அறிவீர்களா?
எதையும் மறுப்பது புத்திசாலித்தனம் என்ற பொய்க்கருத்து பரப்பப் பட்டதால்,20,00,000 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த மரபுகளை இரண்டு தலைமுறை தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடிந்திருக்கிறது;இதை மீட்க இனி 200 ஆண்டுகள் தேவைப்படும்;
கடவுள்களில் முருகக்கடவுளையும்,சதாசிவனையும் தரிசிப்பது மிக மிகக் கடினம்;ஏன் எனில்,இவர்கள் தரிசனம் கிட்டியவர்களுக்கு முக்தி உடனே கிட்டிவிடும்;வேறு எந்தக் கடவுளையும் தரிசிப்பதற்கு அதிகபட்சமாக 90 நாட்கள் போதுமானது;
முருக தரிசனம் அல்லது சதாசிவன் தரிசனம் கிட்டிட குறைந்த பட்சம் ஏழு பிறவிகள் நமது தெய்வீக முயற்சிகள் இருக்க வேண்டும்;அதிகபட்சம் 3000 பிறவிகளாக நாம் தெய்வீக முயற்சி எடுக்க வேண்டும்;
ஒவ்வொரு பிறவியிலும் ஈசனை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்;அல்லது முருக தரிசனம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தால் அடுத்த சில பிறவிகளுக்குப் பிறகு அதற்குரிய வழிமுறை நம்மைத் தேடிவரும்;
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment