Thursday, July 30, 2015

ஆன்மீக முன்னேற்றத்திற்கு காம இச்சை தடையாக இருக்கிறதா?



ஒருபோதும் இல்லை;இல்லறமே ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது;பல நூற்றாண்டுகளாக துறவிகள் தனியாக வனத்துக்குள் சென்று தவம் செய்துள்ளார்கள் என்று படித்திருப்போம்;அது முழு உண்மையல்ல;தனது தர்மபத்தினியோடுதான் வனத்துக்குள் சென்று ஆசிரமம் அமைத்து தினசரி தவம் செய்துள்ளனர்;அந்த காலகட்டத்தில் தர்மபத்தினியோடு தாம்பத்தியமும் நடைபெற்றுள்ளது;சில பத்தாண்டுகளுக்குப் பிறகு,ஆன்மீகத்தில் சில உயர்ந்த நிலையை எட்டியப் பின்னர் அவர்களுக்கு தாம்பத்திய உணர்வே அழிந்திருக்கிறது;இவையெல்லாம் ஆன்மீக ஆராய்ச்சியில் கிடைத்த அளப்பரிய உண்மைகள்;
காம உணர்ச்சியானது இயல்பானது;நமது மரணத்திற்குப் பிறகு,நமக்கு என்று பித்ரு காரியங்கள் செய்வதற்கு நமது வாரிசுகள் பூமியில் இருந்தால் மட்டுமே நம்மால் மேல் உலகத்தில் நிம்மதியாகவும்,வசதியாகவும்,இறை ஆசியோடும் வாழ முடியும்;அதற்காகவே தாம்பத்தியம் அவசியம் ஆகிறது;தாம்பத்தியம் இல்லாவிடில் உலகம் உயிர்த்துடிப்பாக இயங்க முடியாது;
நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் பல லட்சம் இந்துக்கள் இல்லறத்தில் இருந்தவாறே தினசரி சிவாலயம் சென்று சிவத் தொண்டு ஆற்றி சிவனுடன் இரண்டறக் கலந்துள்ளனர்;
நாமும் புது மணத் தம்பதியாக இருந்தாலும் சரி;இனிமேல் திருமணம் செய்ய இருப்பவர்களாக இருந்தாலும் சரி(இளம் பெண்களாக இருந்தாலும் சரி) ஒரு நாளுக்கு 108 முறை ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபித்துவந்தாலே போதுமானது;
தமிழ்நாட்டில் பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவரும்,தமிழராக பூமியில் எந்த நாட்டில் வாழும் நாம் ஒவ்வொருவருமே சித்தர் பரம்பரையைச் சேர்ந்தவரே! நம்மால் மட்டுமே இறை அனுக்கிரகத்தை இல்லறத்தில் இருந்தவாறு ஆன்மீகத்தில் முன்னுக்கு வரமுடியும்;
இன்று முதல் துவங்குவோமா?
வாழ்க பைரவ அறமுடன்! வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment