Wednesday, July 22, 2015

ஆம்வே நிறுவனத்தின் இந்திய சேர்மன் மற்றும் இயக்குநர்கள் கைது !


உங்களில் பலருக்கும் நினைவிருக்கும்! 1996 – 2001ல்தான் சினேகா, அனுபவ், ஆர்.பி.எஃப்., பாரதி, பாலு ஜூவல்லர்ஸ், கலைமகள் சபா என பலவகையான நிதி நிறுவனங்களின் மோசடிகள் அம்பலமாகி பூட்டுகள் தொங்க விடப்பட்டன.அதை நடத்திவந்த நிறுவன அதிபர்கள் சிறைக்குச் சென்றார்கள்.அத் துடன் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனுக்கள் குவிந்தபடியே இருந்தன. (ஆனால், முதலீட்டாளர்களுக்கு இன்றுவரை பணம் வந்து சேரவில்லை என்பது தனிகதை). இப்படி நிதி நிறுவனங்கள் மீதான முதற்கட்ட நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான், எம்.எல்.எம். என்கிற சங்கிலித் தொடர் வணிக மோசடிக்கு படாடோபமாக பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டது .
அடுத்த சில ஆண்டுகளில்தான், உடல்ஆரோக்கியத்திற்க ான காந்த படுக்கை தருவதாகக் கூறி சங்கிலித் தொடர் வணிகத்தில் ஈடுபட்ட வீகேன் நிறுவனத்தின் மோசடிகள் குறித்த புகார் பெருமளவில் எழுந்தது. “இந்த நிறுவனங்களே இப்படித்தான்” என அப்போது புலம்பிய மக்கள், அடுத்தசில ஆண்டுகளில் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் தங்க காசுக்கு ஆசைப்பட்டு ஏமாந்து நிற்பதை பார்த்தோம்.சமீப காலமாக ஈமு கோழிமோசடியும் அம்பலத்து வந்தது நினைவிருக்கும்.
இதற்கிடையில் மெல்லக் கொல்லும் விஷம் மாதிரி பரவி வந்த மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்.) எனப்படும் சங்கிலித் தொடர் வணிகம் வளர்ந்து வந்தது. இந்த எம் எல் எம் என்பது, “நீங்கள் எங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி உறுப்பினராகுங்கள். அதன் பின்னர் நீங்கள் பல உறுப்பினர்களை எங்களுக்குச் சேர்த்து விடுங்கள். எவ்வளவுக்கெவ்வள வு உறுப்பினர்கள் சேர்கிறார்களோ அதன்படி உங்களின் வருமானம் பல மடங்காகும்” என்ற அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இதனைக் கேட்கும்போது காது இனிக்கும்.
ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாய் கட்டி உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு, அதன்பிறகு நமக்குத் தெரிந்த 10 உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால ் மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்குமே என மக்கள் நினைக்கிறார்கள் . ஆனால், இந்தியா போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடுகளில் பல உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதத ாகவே காணப்படுகிறது. இதுதான் சங்கிலித் தொடர் வணிகத்தின் தோல்விக்கும், அந்த நிறுவனங்கள் மீதான மோசடிப் புகார்களுக்கும் அடிப்படைக் காரணம்.
இது போன்ற சங்கிலித் தொடர் வணிகத்தின் முன்னோடியாக விளங்குவது ‘ஆம்வே’ என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக்டோபஸ் கால்கள் போல இந்தியாவிலும் கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தை 1959இல் ஜாய் வான் ஆன்டேல், ரிச்டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள ். சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த நிறுவனம் தாக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இது மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் சோப்பு, எண்ணெய், ஷாம்பூ, தேயிலைத்தூள் போன்ற பொருட்களை மட்டுமே தனது சங்கிலி தொடர் வணிகத்தில் முன்னிலைப்படுத் துவதுதான்.
இதில் ஆரம்பத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகி இத்தகையப் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறவர்களால் மேற்கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாவிட்டாலும ், கட்டிய காசுக்கு இதுவாவது கிடைத்ததே என திருப்திப்பட்டு க்கொண்டு ஷாம்பூவைத் தேய்த்து தலை முழுகிவிடலாம்.
இந்த ஆம்வே நிறுவனம் தாக்குப்பிடிப்ப தற்கான காரணம் இதுவென்றாலும், அந்த நிறுவனமும் அவ்வப்போது படாடோபமான விழாக்களைநடத்தி, “எங்கள் உறுப்பினர்கள் உலகப் பணக்காரரர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத உலகத்திற்கு வாருங்கள்” என ஆளை மயக்கும் பரப்புரைகளை நடத்தியே வருகிறது. அந்த விழாவுக்குச் செல்லும் ஆம்வே உறுப்பினர்கள் கோட் சூட் அணிந்து காரில் செல்வதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கம் நாமும் அந்த நிலைக்கு உடனடியாக வரவேண்டும் என்ற ஆசையில் உறுப்பினராக முன்வருகிறது.
இவ்வாறு ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒரு காலத்தில் இது பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால் காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும் நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவான தென்றே தெரியாமல் போனது.
இந்நிலையில்தான் ஆம்வேயின் இந்திய தலைமை செயல் அதிகாரி ஸ்காட் பின்க்னே மற்றும் 2 நிர்வாக இயக்குநர்கள் மோசடிப் புகாரில் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் தாம் ஆம்வே பொருட்களை விற்பனை செய்ததில் சுமார் ரூ3 லட்சம் நட்டம் ஏற்பட்டது என்று போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.அப்போது ரூ37 மதிப்புள்ள பொருளை ரூ395க்கு ஆம்வே நிறுவனம் விற்பனை செய்ததும் இந்த விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆம்வே நிறுவனத்தின் மோசடிகள் தொடர்பாகவழக்குகளில் ஆம்வே தலைமை செயல் அதிகாரி ஸ்காட் முன்ஜாமின் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இருவித மோசடி வழக்குகளில் கேரள மாநிலம் வயநாட்டில் ஸ்காட் மற்றும் அந்நிறுவன இயக்குநர்கள் சஞ்சய் மல்கோத்ரா மற்றும் அஞ்சு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள னர். அத்துடன் ரூ. 2.5 கோடி மதிப்பிலான ஆம்வே பொருட்கள் குடோன்களில் இருந்தும் பறிமுதல்செய்யபட்டன. மேலும் ஆம்வே நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டம் தொடர்பாகவும் பல்வேரு புகார்கள் எழுந்துள்ளதாகவும். இது தொடர்பாகவும் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன் .
வழக்கம் போல் இந்த கைது நடவடிக்கை ‘புஸ்வாணம். ஆகி விடக் கூடாது என்பதே பொது ஜனத்தின் எதிர்பார்ப்பு!.
நன்றி
தகவல்-மைலஞ்ஜி

No comments:

Post a Comment