Friday, April 20, 2012

Problems creating by christians:thanks to www.tamilhindu.com


மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?



சுவேதன்


27 Dec 2010



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகில் புதிய சர்ச் கட்ட கிறிஸ்தவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளனர். இதனால் இந்து இயக்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.














“மண்டைக்காடு” - இது தமிழகம் முழுவதும் அறிந்த பிரபலமான இடம். ”பெண்களின் சபரிமலை” என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பகவதி அம்மன் ஆலயம் அமைந்திருக்கும் இடம். 41 நாட்கள் விரதமிருந்து மாசிமாதம் இருமுடி சுமந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து பகவதி அம்மனை தரிசித்துச் செல்வார்கள். 1982ம் ஆண்டு இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனின் தீர்த்தமான கடலில் கால் நனைக்கச் சென்றபோது கடற்கரையிலிருந்த கிறிஸ்தவர்கள் பக்தர்களிடம் சில்மிஷம் செய்தனர். இதைத் தட்டிக்கேட்ட பக்தர்களும் தாக்கப்பட்டனர்.






இதனால் ஏற்பட்ட கலவரத்தில் வலையில் சுற்றி கடலில் வீசப்பட்டும், காதறுக்கப்பட்டும் 13 இந்துக்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப் பட்டனர். அப்போது முதல்வரக இருந்த திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கலவரபூமியாக மாறிய மண்டைக்காட்டிற்கு நேரில் வந்து பார்வையிட்டதுடன் கலவரத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார்.














ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் அருகில் மற்றொரு மத வழிபாட்டுத்தலம் இருப்பது மதக்கலவரம் ஏற்பட வழிவகுப்பதால், இரண்டுக்குமிடையில் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என வேணுகோபால் கமிஷன் அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் பலமுறை மீறி, இந்துக் கோவில்களுக்கு மிக அருகிலேயே உயரமான சர்ச்சுகளை கட்டியெழுப்பியுள்ளனர். இதற்கு சில அரசு அதிகாரிகளும், வாக்குவங்கியைக் கருத்தில்கொண்டு சில அரசியல் கட்சிகளும், அக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு கொடுத்துள்ளனர்.






இப்படி அரசின் சட்டத்தையும் மீறி குமரி முழுதும் முளைத்திருக்கின்றன சர்ச்சுகள். தற்போது, எதற்காக வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டதோ, எந்த மதக்கலவரத்தால் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைத் திரும்பிப் பார்த்ததோ, அந்த மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோவிலின் அருகிலேயே புதிதாக சர்ச் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. டிசம்பர் 13-2010 என்ற தேதியிட்டு மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் இருந்து 250 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் சுனாமி காலனியில் புதிய சர்ச்சுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.














இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மண்டைக்காடு பேரூராட்சி அலுவலகம் முன்பு அதே 13ம் தேதி பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சர்ச்சுக்காக நடப்பட்ட அடிக்கல்லை அப்புறப்படுத்த ஊர்வலமாக புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 150 பேரை நெல்லை சரக டி.ஜி.பி சண்முகராஜேஸ்வரன் மற்றும் குமரி மாவட்ட எஸ்.பி. பவானீஸ்வரி தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் கைது செய்தனர். பின்பு மாலையில் விடுவித்து விட்டனர்.






டிசம்பர் 20ம் தேதிக்குள் மண்டைக்காட்டில் புதிய சர்ச்சுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கல்லை அப்புறப் படுத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர். மண்டைக்காட்டில் மீண்டும் 1982ம் ஆண்டு நடந்ததைப் போன்று அச்சம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Posted by ஆன்மீகக்கடல் 2 comments   Links to this post

No comments:

Post a Comment