Friday, April 20, 2012

thanks :dinamalar 22.12.2010


அமெரிக்காவுக்கு பதிலடி தாருங்கள்! டாக்டர் வி.நடராஜ், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: அமெரிக்க விமான நிலையங்களில், நம் அரசியல் பிரபலங்களுக்கும், தூதர்களுக்கும் மன உளைச்சல்களை தரும் சோதனைகள் நடந்து வருவது தொடர் கதையாகிவிட்டது.சில மாதங்களுக்கு முன், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல், அமெரிக்கா சென்ற போது, விமான நிலைய அதிகாரிகள் அவரை, கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளனர். ஒரு கவுரவமிக்க ஜனநாயக நாட்டின் அமைச்சர் என்று கூட அவரை மதிக்கவில்லை.இச்சம்பவத்தை தூக்கி சாப்பிடும் விதமாக, அண்மையில், அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதர் மீரா சங்கருக்கு, விமான நிலையத்தில் நடந்த அவமரியாதையை சொற்களால் விளக்க இயலாது. மீரா எங்கு சென்றாலும், நம் இந்திய பண்பாட்டு பாரம்பரிய உடையான சேலையை அணிந்து செல்வதே வழக்கம். பால்டிமோருக்கு செல்ல அவர் விமான நிலையம் வந்தபோது, அங்குள்ள செக்யூரிட்டிகள், அவரை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு பெண் அதிகாரியை கொண்டு, அவரது தலை முதல், கால்கள் வரை தடவி பார்த்து சோதனையிட்டுள்ளனர்.ஒரு மரியாதை மிக்க பெரிய நாட்டின் தூதருக்கே இந்த கதி என்றால், சாதாரண குடிமக்களுக்கு என்னென்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்!சேலை அணிந்து சென்ற ஒரே காரணத்திற்காக, அவருக்கு இவ்வகையான சோதனை நடத்தப்பட்டது என, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளது, ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.அமெரிக்கா கடைபிடித்து வரும் இந்த கேலிக்கூத்தான நடவடிக்கைகள், உலகளவில் அதன் பெருமைக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவை.மேலும், நம் நாட்டின் ஐ.நா.,வுக்கான தூதர் ஹர்தீப் பூரி என்ற சீக்கியருக்கும், ஹூஸ்டன் விமான நிலையத்தில், அவரது டர்பனை கழற்றி சோதனையிட வந்த போது, ஆத்திரத்துடன் அவர் மறுத்துள்ளார். அதனால், அவரை 30 நிமிடங்கள் காக்க வைத்து அனுப்பியுள்ளனர்.இந்திய அரசு இனியும் இம்மாதிரியான விஷயங்களில் பொறுமையை கடைபிடிக்காமல், நம் நாட்டுக்கு வரும் அமெரிக்க வி.ஐ.பி.,க்களுக்கும் இதே முறையில் சோதனை போட்டு பதிலடி தர வேண்டும்.

No comments:

Post a Comment