Saturday, April 14, 2012

RECALLS2AANMIGAKKADALREADERS




ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு சில நினைவூட்டல்கள்

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் 7.10.2009 முதல் 15.5.2010 வரை பவளமோதிரம் ஒன்று அணிவது அவசியம்.ஏன் என்பதை அறிய ஆன்மீகக்கடல் வலைப்பூ மொத்தத்தையும் துழாவவும்.

எல்லோரும் பணக்காரர்களாக ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட நாளில் திரு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்ல வேண்டும்.இந்த கிரிவலத்தின் பெயர் குபேர கிரிவலம் என நாமாக பெயர் குறிப்பிட்டுக்கொள்ளலாம்.அந்த குபேர கிரிவலம் 14.12.2009 அன்று வருகிறது.அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்கத்தின் சன்னதியில் நாம் சந்திப்போம்.இதுபற்றி விபரம் அறிய ஆகஸ்டு 2009 ஆம் மாத வலைப்பூக்களை நமது ஆன்மீகக்கடலில் தேடவும்.
தீராத கடன் பல சகோதரர்களுக்கு இருக்கின்றது.இதற்கு மைத்ர முகூர்த்தம் என்பதைப் பயன்படுத்தவும்.இதற்கு ‘உங்கள் கடன் தீர ஒரு சூப்பர் ஐடியா’ என்ற கட்டுரையை ஆன்மீகக்கடலில் தேடிப்படியுங்கள்.
நிம்மதியாக வாழ விரும்புகிறீர்களா? தினமும் ஒரு மணி நேரம் உங்கள் இருப்பிடத்தில் ஒரு மந்திர ஜபம் செய்ய முடியுமா? உங்களது முன்னோர்களில் ஒருவர் சித்தராக இருந்திருப்பார்.அவரைக்கண்டுபிடித்து, அவரிடம் சீடனாகச் சேரலாம்.சித்தர்களை நேரில் சந்திக்க ஒரு ஆன்மீக வழி என்ற தலைப்பை ஆன்மீகக்கடலில் தேடுங்கள்.வெறும் 90 நாளில் சித்தர்களில் ஒருவரை உங்கள் ஒவ்வொருவரலும் சந்திக்க முடியும்.

உங்கள் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? இதுபற்றி ஒரு கட்டுரை நமது ஆன்மீகக்கடலில் மிதக்கிறது.தேடுங்கள்.பொறுப்பான,உங்களை விடச் சிறந்த தலைமுறையை உருவாக்குங்கள்.

ஆன்மீகக்கடல் வலைப்பூ வாசகர்கள் ஒவ்வொருவரும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்போடும்,புகழோடும் வாழ்க வளமுடன் & நலமுடன்.

No comments:

Post a Comment