Saturday, April 14, 2012

ourtraditionalwealth


எப்போது நாம் நமது பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கப்போகிறோம்?

நமது தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி மறுக்கின்றது.ஆனால்,இலங்கையில் இளநீர்,கள்,கருப்பட்டி, தேங்காயை கலந்து மது தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.இந்த மது உடலுக்கு தீங்குதருவதில்லை.
அதே சமயம், கிக் ஏற்றுவதோடு, முழு சுறுசுறுப்பு தருகின்றது.இதனால்,இந்த மது பானத்துக்கு வெளிநாடுகளில் பயங்கரமான வரவேற்பு!!!

நாம் இன்னும் அதே பழைய பல்லவியில் வாழ்கின்றோம்.எனக்குத் தெரிந்து ஜப்பானில் அரிசியிலிருந்து பீர் தயாரித்து தினசரி உணவாக பயன்படுத்திவருகின்றனர்.நாம் இன்னும் அதே இட்லி,தோசை . . .

தமிழ்நாட்டில் பனையிலிருந்து எடுக்கப்படும் கள்ளைக் கொண்டு சுமார் 200 விதமான மதுபானங்கள் தயாரிக்கலாம்.தென்மாவட்டங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்கள் நிறைந்த மாவட்டங்களாக மாற இது ஒரு அரிய வாய்ப்பு.
யார் இதைச் செய்வது?

No comments:

Post a Comment