Friday, April 20, 2012

mocking srilanka government:thanks tamil webdunia


வன்னி முகாமில் உணவு, மருந்துக்கு தவிக்கும் தமிழர்கள்: பாக்.கிற்கு நிவாரணம் அனுப்பிய இலங்கை
கொழும்பு, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010( 13:02 IST )

வன்னி முகாமில் உணவுக்கும், மருந்துக்கும் தவித்துகொண்டிருக்கும் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது இலங்கை அரசு. இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 18 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இலங்கை விமான படைக்கு சொந்தமான சி - 130 விமானத்தின் மூலம் இந்த பொருட்கள் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாகிஸ்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு, பாகிஸ்தான் மேலுள்ள தனது ஆதரவை வெளிக்காட்ட, 18 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.வன்னியில் இன்னும் எத்தனையோ அகதிகள் உணவிற்கும், மருந்திற்கும் அல்லாடும் நிலையில், பாகிஸ்தானுக்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்கிறது, சிங்களப் பேரினவாத அரசு. தமிழர்களை தங்கள் நாட்டு குடிமக்கள்தான் என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை நிரூபிக்கும் மற்றொரு செயல்தான் மேற்கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment