எனதருமை ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு,ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!
நமது ஆன்மீகக்கடல் துவங்கி ஓராண்டு நிறைவடையப்போகிறது.இதை முன்னிட்டு,இன்று முதல் இலவச ஜோதிட ஆலோசனைப்பகுதி கேள்வி பதில் பகுதியாகத் துவங்குகிறேன்.
இதில் எனது குருநாதர்களில் ஒருவரும்,எனது சீடர்களில் இருவரும் இணைந்து நான்கு பேராக செயல்படத்துவங்கியுள்ளோம்.
இதன்படி தாங்கள் தங்களின் பிறந்த ஜாதகத்தை அல்லது பிறந்த நாள்(ஆங்கிலத்தேதி),பிறந்த நேரம்,பிறந்த ஊர்,பெயர்,பெற்றோர்களின் பெயர்,(திருமணம் ஆனவர் எனில் தனது வாழ்க்கைத்துணையின் பெயர்) முதலியவற்றையும்,தாங்கள் ஜாதகப்படி அறிய விரும்பும் எதிர்காலம்,திருமணம்,வேலைவாய்ப்பு,தொழில்பிரச்னைகள்,காதல், நோய் என எந்த பிரச்னையாக இருந்தாலும் இதில் எந்த விஷயத்தில் உடனடியாகவும்,முக்கியமாகவும் முடிவு எடுக்க விரும்புகிறீர்களோ அதுதொடர்பாக ஒரு கேள்வி மட்டும் myathistam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
தங்களின் கேள்விக்கான பதில் நமது ஆன்மீகக்கடலில் தினமும்(சனி மற்றும் ஞாயிறு வாரவிடுமுறை) கேள்வி பதில் பகுதியில் வெளிவரும்.
இதில்,அவசியம் எனில், தங்களின் பெயர் அல்லது அடையாளம் மறைக்கப்படும்.தங்களின் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது.
மிக அவசரம் அல்லது மிக அவசியம் எனில் தங்களின் செல் எண்ணில்(தமிழ்நாட்டு எண்களுக்கு மட்டும்) உடனடி பதில் வழங்கப்படும்.
ஆண், பெண்,குடும்பம், வேலை என எதுவாக இருந்தாலும் தங்களின் ரகசியம் முழுமையாக பாதுகாக்கப்படும்.
இந்தப்பகுதியை தலைமை ஏற்று நடத்தும் எனது குரு ஏ.எம்.ஜே.,அவர்களுக்கு 22 ஆண்டு ஜோதிடத்துறையில் அனுபவமும்,எனக்கு 20 ஆண்டுகள் ஜோதிடத்துறையில் அனுபவமும்,எனது சீடர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் அனுபவமும் இருக்கின்றன.
$$ குறிப்பு: பொதுநலத்துடன் வெளியிடப்படுவதால், தயவு செய்து தனது வாழ்க்கையில் அல்லது தனது உறவுகளிடம் அக்கறையுள்ளவர்களும் ஜோதிட ஆலோசனையை பின்பற்றுபவர்களும் மட்டும் கேள்விகள் கேட்கவும்.
(***நாத்திக அன்பர்கள்,சோதிக்க நினைக்கும் சக தமிழ் ஜோதிடர்கள்,ஜோதிடத்தை தற்போது கற்றுக்கொண்டிருப்பவர்கள்,ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகமும் அக்கறை குறைவும் கொண்டவர்கள் தயவு செய்து தொடர்புகொள்ள வேண்டாம்.ஏன் எனில் இந்த ரகத்தைச் சேர்ந்த தமிழ் அன்பர்கள்தான் தற்காலத்தில் அதிக எண்ணிக்கையில் பரவலாக இருக்கின்றனர்.அவர்களுக்கு இது களமல்ல.
ஏராளமான கடன் அல்லது தீராத குடும்பப் பிரச்னைகள் அல்லது கடுமையான எதிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு எங்களால் ஆன அளவுக்கு வழிகாட்டவே இந்த இலவச ஜோதிட ஆலோசனைப்பகுதி கேள்வி பதில் பகுதியாக வெளியிடுகிறோம்)
ஆன்மீகக்கடல் இரண்டாம் ஆண்டை நோக்கி . . .
No comments:
Post a Comment