Saturday, April 14, 2012

D.M.K.IS AN ATHISUM PARTY


தி।மு।க। ஒரு பகுத்தறிவுக் கட்சியேதான்

12.8.2009 புதன் கிழமையன்று தமிழ்நாட்டின் எல்லா தினசரிகளிலும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தியாவின் ஜாதகத்தை தி.மு.க. கணிக்கும் என்பது அவரது அறிக்கையின் தலைப்பு!!!

தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி எந்தப் பல்கலைக் கழகத்தில் ஜோதிடம் படித்தார்?!
இவங்க ஜோதிடம் படித்துவிட்டால் என்னைப்போன்ற சாதாரண ஜோதிடர்கள் எங்கே போய் பிழைப்பது?
(ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜோதிடப் பட்டயப்படிப்பை நிறுத்திவிட்டார்கள்.எங்கு படித்திருப்பார்கள்.)
பகுத்தறிவுப் பகலவன் எனப்படும் கருணாநிதி தாத்தாவே ஜோதிடம் படித்திருந்தால் தி.க.தலைவர் வீரமணி மந்திரவாதியாக மாறிவிடுவாரே!!!

இன்று 13.8.2009 வியாழன் தினகரனில் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதாக புகைப்படம் வெளியாகியுள்ளது.
வாழ்க பெரியாருக்கு நாமம்!!! ஓ மன்னிக்கவும்
வாழ்க பெரியார் நாமம்!!! வளர்க பகுத்தறிவு!!!

சில வாரங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தின் படி ராமேஸ்வரம் மக்களுக்கு திருச்சி காவிரித்தண்ணீர் கிடைக்கும்.(இன்று கிடைத்துக் கொண்டிருக்கிறது).அப்போது நமது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இது ராமேஸ்வரத்தின் 24 வது தீர்த்தம்’ என அறிவித்தார்.

No comments:

Post a Comment