Friday, April 20, 2012

ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள்


ருத்ராட்சத்தை வாங்கும் மனிதர்கள் யாராக இருந்தாலும்,அதை கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்;அணிந்தப்பின்னர்,அதை ஒரு போதும் கழற்றக்கூடாது.அப்படிக் கழற்றினால் அது பாவத்தைத் தரும்.



சரி! ருத்ராட்சம் அணிந்துகொண்டு காம ரீதியான நடவடிக்கையில் ஈடுபடலாமா?அப்படி ஈடுபட்டால் அது பாவம் கிடையாதா?



நிச்சயமாகக் கிடையாது.மனிதனது வழக்கமான நடவடிக்கைகளில் ஒரு பகுதியே காம நடவடிக்கைகளும்(உடலுறவு கொள்ளுவதும்,சுய இன்பம் அனுபவிப்பதும்).காமமே தவறு எனில்,கடவுள் நம்மையெல்லாம் படைத்ததே தவறுதானே?ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.ஆண்கள் தொண்டைக்குழியில் ருத்ராட்சம் இருப்பதுபோல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது.இதனால்,ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும்;ஆண்மைக்குறைவு குறைந்து விந்து கெட்டிப்படுதல் அதிகரிக்கும்;நினைவாற்றல் அதிகரிக்கும்.



பிறந்த குழந்தை முதல் 100 வயது பாட்டி வரை யார் வேண்டுமானாலும்,எவர் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.கர்ப்பிணிகள்,உடல் ஊனமுற்றோர்கள்,நோயாளிகள்,மன நிலை பாதித்தவர்கள் என யாரும் ருத்ராட்சம் அணியலாம்.



நீங்கள் உங்களது தினசரி வாழ்க்கையுடன் சேர்ந்தே புண்ணியம் சேர்க்க விருப்பமா?



உங்களது வார்த்தையை மதிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்,சந்தர்ப்ப சூழ்நிலை பார்த்து,ஓம்சிவசிவஓம் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.அவர்களையும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க தூண்டுங்கள்.



அவர்களுக்கும் ருத்ராட்சம் வாங்கித் தாருங்கள்.வாங்கித் தருவது முக்கியமல்ல;அவர்கள் எக்காரணம் கொண்டும் அணிந்த ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.இது ரொம்ப முக்கியம்.உங்கள் ஊரில் இருக்கும் காதி பவன்களில்/துறவிகள் வாழும் ஆசிரமங்களில்/மகான்களிடம் வாங்குங்கள்.








ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment