Friday, April 20, 2012

சுதேசிச் சாதனை:மண்ணாலான குளிர்சாதனப்பெட்டி


சுதேசிக் கண்டுபிடிப்பு:களிமண்ணாலான குளிர்சாதனப்பெட்டி







குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மன்சுபாய் ப்ரஜாபதி என்பவர் மிட்டி கூல் என்ற குளிர்சாதனப்பெட்டியை களிமண்ணால் கண்டுபிடித்துள்ளார்.இதற்கு மின்சாரம் தேவையில்லை;காயகறிகள் தம் இயற்கை சுவை மாறாமலிருக்கின்றன.விலை மிகக் குறைவு.இதைப் பார்வையிட உலகெங்குமிருந்து விஞ்ஞானிகள்,பத்திரிக்கையாளர்கள் பார்வையிட வந்துகொண்டே யிருக்கின்றனர்.






இவரை நமது மானசீக நிரந்தர ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் “உண்மையான விஞ்ஞானி” என பாராட்டுகிறார்.






ஒரேநாளில் மண்ணால் செய்த தோசை சுடும் தவாக்கள் 600 ஐ தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும்போது இவருக்கு வயது 18.






தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி,தோசை சுடும் தவா,குக்கர்,குளிர்சாதனப் பெட்டி என இவரின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீள்கிறது.மேலும் பல பொருட்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும் திறனும் படைத்தவர்.






இவரதுபெரிய மகன் ‘’மண்பாண்டப்பொறியியலை”ப் பாடமாக எடுத்து பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார்.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 19,செப்டம்பர் 2010.

No comments:

Post a Comment