ஒவ்வொரு மனிதர்களின் மனதுக்குள்ளும் தைரிய உணர்ச்சியாக இருப்பவர் பைரவர்.பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண பைரவர் மட்டுமே!!!
அனுபவ ரீதியாக எனது குரு மிஸ்டிக் ஐயா மற்றும் அவரது சீடர்கள்,எனது ஜோதிட குருநாதர்களின் அனுபவப்படியும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபட்டுவரவேண்டும்.இப்படி குறைந்தது எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபட்டுவர நமது செய்தொழில் அபாரமான வளர்ச்சியை அடையும்.
எந்த தொழில் செய்து நொடித்துப்போனாலும்,ஊருக்கெல்லாம் கடன் கொடுத்து அந்தப் பணம் திரும்ப வராமல் போனதாலும்,செல்வச் செழிப்பிலிருந்து வறுமையின் புதைகுழிக்குள் வீழ்ந்தவர்களும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்துவந்து மாபெரும் வெற்றியடையலாம்.
அரசியலில் மகத்தான பதவிகளை அடைய விரும்புவோர்கள் இதே வழிமுறையைப் பின்பற்றி உச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் சொர்ண ஆகர்ஷணபைரவர்களின் கோவில்கள் வருமாறு:
படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் அமரர் படப்பை சித்தர் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் சொர்ணகால பைரவருக்கு தனி கோவில் இருக்கிறது.
சிதம்பரம் கனக சபையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகில் திருச்சேறையில் காலபைரவரை வழிபட,கடன் தொல்லை நீங்கும்.
திருச்சியில் மலைக்கோட்டைக்கு தெற்கே பெரிய கடைவீதியில் சொர்ணபைரவநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.
திருமயம் அருகே இருக்கும் தபசுமலையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் கோவில் இருக்கிறது.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி இருக்கிறது.மிகவும் சக்திவாய்ந்த பைரவராக இருக்கிறார்.
தேவக்கோட்டையில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இருக்கிறது.
விருதுநகரில் ரயில்வே நிலையம் அருகே சுடலை கோவில் அருகே சொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரு தனியார் கோவிலாக இருக்கிறது.
இனி,அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:
24.2.11 வியாழன் இரவு 11.22 முதல் 25.2.11 வெள்ளி இரவு 10.06 வரை
26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை
24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை
24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை
23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை
22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை
21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை
19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை
19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை
18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை
17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை
15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை
14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை
14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை
எல்லாம் சரி! ஏன் சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டமியில் வழிபட வேண்டும்? இதற்கு ஆன்மீக ஆராய்ச்சியாளரும் நமது ஆன்மீக குருவுமாகிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் விளக்கம் கூறுகிறார்.
நமக்குச் செல்வச்செழிப்பைத் தருவது அஷ்ட லட்சுமிகளே! இவர்கள் வரம் தந்து கொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்.அப்படி குறையும் சக்தியை ஒவ்வொரு அஷ்டமியிலும்,அதுவும் தேய்பிறை அஷ்டமியிலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டே பெருக்கிவருகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட தேவரகசியம்!!!
மனிதர்களாகிய நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும்,சொர்ண ஆகர்ஷண பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
தமிழ் பேசும் எனதருமை வாசகர்களே! ஊருக்கு ஒரு சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலை உருவாக்குவோம்;தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெல்லாம் குபேரபுரியாகட்டும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment