Friday, April 20, 2012

தமிழ் இன வரலாற்றில் எட்ட இருக்கும் ஒரு முக்கிய மைல் கல்:


இலங்கைத்தமிழர்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் நமது தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தோட்டவேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.அவர்களின் கடும் உழைப்பினால் இன்று இலங்கை சொர்க்கபுரியாக இருக்கிறது.தமிழ்நாட்டில் எத்தனை தமிழ்ஜாதிகள் உண்டோ,அத்தனை ஜாதிகளும் இலங்கையில் உண்டு.அவர்கள் அங்கே என்னென்ன சிரமப்பட்டார்கள்? என்பதை சி.மகேந்திரன் என்பவர் எழுதிய ‘தீக்குள் விரலை வைத்தேன்’ என்ற நாவல் விரிவாக விளக்குகிறது.இந்த நாவலை நாம் வாசித்தால்,இலங்கைத் தமிழர்களுக்காக நாம் ஒவ்வொருவருமே வீட்டுக்கு ஒரு குழந்தையை தமிழ் ஈழம் பெற்றுத்தர அனுப்பிவைப்போம்;அந்த அளவுக்கு கொதிக்கும் நிஜங்களை இந்த நாவல் விவரிக்கிறது.

எங்கு சென்றாலும் தமிழ் இனமக்கள் மொழி ஒற்றுமையோடு இருப்பதில்லை;தமிழினத்தின் வரலாற்றில் முதன் முதலில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒற்றுமையாகச் செயல்படத்துவங்கினர்.அதையும் சீனாவின் ஆதிக்கப்பேராசை அரசியல்,இந்தியாவின் தொலைநோக்கற்ற அரசியல்,இலங்கையின் அரக்கத்தனமான அரசியல் சிதைத்துவிட்டது.இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இதிலும் மீன் பிடிக்கத்தான் பார்த்தார்களேயொழிய,உணர்வுபூர்வமான எதையும் செய்யவில்லை;


எப்படி இன்று தமிழ்நாட்டின் நடுத்தர,கீழ்மட்டக்குடும்பங்களில் திறமையும்,பொறுப்புணர்ச்சியும் உள்ள மகன் அல்லது மகளை அந்தக் குடும்பமே உதாசீனப்படுத்தி,அவமானப்படுத்தி வீட்டை விட்டே விரட்டுமோ,அதே போலத்தான் இலங்கைத்தமிழின விடுதலை வீரர்களை தாய் தமிழ்நாடு கைவிட்டு விட்டது.

சீறி எழும் தமிழ்நாட்டு மகன் மகள்களைப்போல, வெகு விரைவில் தமிழீழம் மலரும்போது இந்தியாவின் தமிழ்நாட்டின் அரசியல்தலைவர்கள் அதற்கும் அந்த வெற்றிக்கும் நான் தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுவர்.

No comments:

Post a Comment