Friday, April 20, 2012

இந்தியக் குடியரசு தினத்தில் இந்தியாவின் குடியரசு நிலை


நேற்று 26.1.2011 நமது பாரத நாட்டின் குடியரசு தினம்.

இந்தியாவின் முதன்மையான எதிர்க்கட்சியாகிய பாரதிய ஜனதாக் கட்சியினர்,நமது நாட்டின் மணிமகுடமாகத் திகழும் காஷ்மீர் தலைநகரம் ஸ்ரீநகரில் இருக்கும் லால் சவுக் என்ற இடத்தில் தேசியக்கொடியை ஏற்றிட கடந்த சில நாட்களாக தேசபக்தி விழிப்புணர்வுப்பேரணியை நடத்தினர்.



இந்த சூழ்நிலையில்,இன்றைய அரசியலையும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.காஷ்மீர் மாநிலத்தில் உமர் அப்துல்லாவின் தேசியமாநாட்டுக்கட்சியும்,அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கூட்டணி ஆட்சி செய்கிறது.



முஸ்லீம்களை தாஜா செய்யும் காங்கிரஸ் கட்சி,இன்று முஸ்லீம்களின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்யுமளவுக்கு தரங்கெட்டுப் போய்விட்டது.



சென்ற ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது,இதே லால்சவுக் பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் கொடியேற்றியுள்ளனர்.இதை காஷ்மீரின் ஆளும் கட்சிகள் கண்டிக்கவுமில்லை;தடுக்கவுமில்லை;

விளைவு?

கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் வாழும் மக்கள் நமது ராணுவ வீரர்கள் மீது தினமும் கல்லெறிவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.உலகின் தலைசிறந்த ராணுவம் என்ற பெருமையை அகில இந்திய கத்தோலிக்க காங்கிரஸ் கட்சி சீர்குலைத்துவருகிறது;நமது பெருமை மிகு ராணுவத்தின் சுய கவுரவத்தை கெடுத்துவருகிறது.



ஆமாம்! காஷ்மீரில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கும் நமது ராணுவத்துக்கு சோனி(யா) காங்கிரஸ் என்ன உத்தரவிட்டிருக்கிறது தெரியுமா?



உங்கள் மீது கல்லெறிபவர்கள் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது;தற்காப்பு நடவடிக்கை கூட எடுக்கக் கூடாது.





நமது நாட்டில் குடியரசு தினத்தன்று லால் சவுக் பகுதியில் நமது தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்துவிட்டது.இதற்காக முயன்ற அனைத்து பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களையும் கைது செய்துவிட்டது.



அகில இந்தியக் கத்தோலிக்க காங்கிரஸ் கட்சியின் இந்த துக்கிரித்தனத்தால்தான் அடிக்கு அடி;உதைக்கு உதை என்ற சித்தாந்தத்தை இந்துக்கள் பின்பற்ற தூண்டுகிறது.



No comments:

Post a Comment