பேருந்து,ரயில்,விமானப்பயணத்தின் போதும்,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் வாகனப்பயணத்தின்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
தெருவில் நடந்துசெல்லும்போதும்,சாலையில் நடந்து செல்லும்போதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.அப்படி மீறி ஜபித்தால்,தடுமாறி கீழே விழுந்துவிடுவோம்.ஒருவேளை,வீம்புக்கென்று தொடர்ந்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,சில நாட்கள் கடந்தபின்னர்,விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
பிரசவ மருத்துவமனை,பிணவறை,மற்ற எந்த மருத்துவமனையிலும்,சுத்தமில்லாத எந்த இடத்திலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அவர்கள் தூங்கும் அறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
குடும்பத்தோடு அசைவம் சாப்பிட்டுவிட்டால்,அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
குடும்பத்தில் வயதானவர்கள் யாராவது இறந்துவிட்டால்,அந்த வீட்டில் குறைந்தது ஒரு மாதம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
துக்க வீடுகளுக்குச் சென்றால்,குறைந்தது ஐந்துநாட்கள் வரையிலும்,பிரசவம் ஆனவீடுகளுக்கு குழந்தை பிறந்த பத்துநாட்களுக்குள் சென்றால் ஐந்து நாட்கள் வரையிலும் சென்றவர் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.
வீட்டில்,வீடு போன்ற அமைப்பில்,எதாவது ஒரு சுத்தமான விரிப்பில் அமர்ந்து மன அமைதியோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த ஓம்சிவசிவஓம் ஜபித்து முடியும் வரையிலும் யாரிடமும் பேசாமலிருப்பது அவசியம்.செல்போனையும்,தொலைபேசியையும் சைலன் ட் மோடில் வைக்க வேண்டும்.இது கட்டாயம்.
ஓம்சிவசிவஓம்.
No comments:
Post a Comment