Friday, April 13, 2012

உலக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?-4




உலக அரசியலில் அடுத்து என்ன?-4

இந்த நிலையில் எனது யூகங்களை மட்டுமே இங்கு என்னால் சொல்லமுடியும்.

கி.பி.2010 முதல் கி.பி.2310 வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள 300 ஆண்டுகளில் இந்த பூமியானது இந்து பூமியாக பரிணமிக்கும்.உலகம் இன மோதல்கள்,மதச்சண்டைகள், எல்லைத்தகராறுகள் ,ஆதிக்கவெறியை மறக்கும்.கி.பி.2100க்குள் உலக அரசாங்கம் உருவாகிவிடும்.
அது எப்படியெனில் டாலரை வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் விழித்துக்கொண்டன.அதன் விளைவுதான் யூரோ என்ற ஐரோப்பிய பொதுப்பணம்.இன்று ஒருடாலரின் விலை ரூ.40/- ஆனால் ஒரு யூரோவின் விலை ரூ.70/-இதே போல சீனா இந்தியா ஜப்பான் மட்டும் ஒன்றிணைந்து ஆசியோ என்ற பொதுப்பணத்தை வெளியிடக்கூடிய நிர்ப்பந்தம் வரும்.அப்போது யூரோ படுபாதாளத்தில் விழும்.டாலர் காணாமல் போகும்.
கி.பி.2050 அல்லது அதன் பிறகு யூரோவும் ஆசியோவும் இணையும்.உலகின் ஒரே பணம் புழங்கத்துவங்கும்.அப்போது இந்தியாவை ஒரு பெண் ஆட்சி செய்வாள்.அவளே உலக அரசாங்கத்தின் முதல் தலைவியாவாள்.அவள் ராமாயணத்தில் சீதைக்குத் துணையிருந்த ஒரு அரக்கி.அவள் பெயர் திரிசடை!
திரிசடை மறுபிறவியில் இங்கிலாந்து விக்டோரியா மகாராணியாக பிறந்தாள்.அவளது ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து உலகை ஆண்டது.
இனி திரிசடைக்காக இந்தியா உலகின் ஒரே வல்லரசாகும்.உலகம் பல நூற்றாண்டுகளுக்கு அமைதியான விதத்தில் முன்னேறும்.
இந்துமதம் நவீனமடையும்.கூடுவிட்டு கூடு பாய்வது பிடெக் கிற்குச் சமமாக கல்லூரிகளில் பாடமாகும்.
மனித மூளையில் இது வரை நாம் 1% மட்டுமே பயன்படுத்திவருகிறோம்.இதை 10% அளவுக்குப் பயன்படுத்தத்துவங்குவோம்.
நிலாவில் நாடுகள் உண்டாகும்.செவ்வாய்க்கு சுற்றுப்பயணம் சகஜமாகும்.சித்தர்களின் உலகத்தை நமது விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்போம்.யுரேனஸ் தாண்டி மனித குடியேற்றத்திற்கு ஏற்ற பூமிகளைக்கண்டறிவோம்.

நமது அண்டைநாடு ஒன்று பயங்கரவாதத்தால் கி.பி.2100 க்குள் மூன்று துண்டுகளாக உடையும்.அந்த நாடு உலகிலேயே பயங்கரவாதத்தை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.அந்த நாட்டினை முட்டாள் அமெரிக்கா செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறது இன்று வரையிலும்!!!


கி.பி.2100க்குள் இந்தியாவில் உள்ள எல்லாக் கோவில்களிலும் அமெரிக்கா அல்லது ஐரோப்பியர்களே பூசாரிகளாக இருப்பர்.
கி.பி.2010 முதல் இந்தியாவுக்கு வெள்ளைக்கார மாணவர்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்க அலைகடலென வருவார்கள்.
1.இந்து ஜோதிடம்
2.இந்து பண்பாடு
3.ஆயுர்வேதம்
4.இந்து யோகாசனம்
5.ஜாதி மரபுகள்
6.இந்து உடைகளை உருவாக்கும் விதம்
7.பிராணயாமம்
8.இந்து பூஜை செய்யும் விதங்கள்
9.வேதம் ஓதுதல்
10.இந்து விழாக்களைக் கொண்டாடுதல்

ஏற்கனவே அமெரிக்கப்பல்கலைக் கழகங்கள் இண்டாலஜி(இந்தியவியல்) என்ற துறையை உருவாக்கியுள்ளன.இந்தத் துறை மூலமாக இந்தியாவின் ஜாதிகள், சம்பிராதயங்கள், பண்பாடு,சமையல் அனைத்திற்கும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் இருப்பது கண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய சீன உலகம் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது.

மறுபுறம் எதிர்வரும் 7.10.2009 முதல் 15.5.2010 வரை ஜோதிடப்படி செவ்வாய்க்கிரகமானது நீசமடையப்போகிறது.ஜோதிடப்படி செவ்வாயானது இந்த பூமிக்கு அதிபதியாகிறார்.அவர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை வெறும் 45 நாட்கள் நீசமடைவார்.அந்தநாட்களில் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் ஏதாவது ஒருவிதத்தில் அவமானப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் இம்முறை சுமார் 9 மாதங்கள் நீசமடையப்போகிறது.விளைவு?
நம் பூமியின் பெரும்பகுதி அழியலாம்; ராணுவம்,காவல் துறையினர் அதிகாரத்தில் இருப்பவர்களின் கட்டளையை செயல்படுத்தாமல் போகலாம்.ஏன் அவர்களே கலகம் செய்யலாம்.பூமியான ரியல் எஸ்டேட் விலை தொபுக்கடீர் ஆகலாம்.ஆப்ரிக்கக்கண்டம் மற்றும் சிறு தீவுகள் கடலுக்குள் மூழ்கலாம்.

முடிவில் தீவிரவாதம், குடும்பத்தீவிரவாதம், எய்ட்ஸ், முதலியன கட்டுப்பாட்டுக்குள் வரலாம்.
பணம் என்பது கம்ப்யூட்டர் திரையில் மட்டுமே இருக்கும்.குடும்பம் என்பது விஞ்ஞானமயமாகும்.மனித ஆயுள் 1200 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும்.
ரோபோக்கள் நம் சார்பாக ஜாதிச்சண்டை போடுவார்கள்.நாடு விட்டு நாடு சென்று திருமணங்கள் நடக்கும்.

No comments:

Post a Comment