Friday, April 20, 2012

காமத்தை அடக்கிட என்ன செய்யவேண்டும்? பாகம் 2


காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?


காம உணர்வு இல்லாமல் போகும் நிலை: ஒருவர் ஜாதகத்தில் சில கிரகங்கள் நீச்சம் பெறும் சமயத்தில் அவருக்கு காம உணர்வு இல்லாமல் போய்விடும். சிறப்பாக தாம்பத்யம் நடத்திக் கொண்டிருந்த தம்பதிகளுக்குள் திடீரென உடல் தொடர்பின்றிப் போய்விடும்.

உதாரணமாக தனது கணவர்/மனைவி கடந்த சில மாதங்களாக தன்னை நெருங்கவிடவில்லை என கூறிக் கொண்டு சில தம்பதிகள் எங்களிடம் வருகின்றனர். ஆனால் இது உடல் ரீதியான குறையாகப் பார்க்க முடியாது. காரணம் சம்பந்தப்பட்டவருக்கு அப்போது நீச்ச கிரகத்தின் தசை நடந்து கொண்டிருக்கும். அலி கிரகங்களின் தசாபுக்தி நடந்து கொண்டிருக்கும் ஜாதகர் உடலுறவில் பூரண நிலையை அடைய முயற்சிக்க மாட்டார். தனது துணையை முத்தமிட்டும், தீண்டுவதிலும் இன்பம் காண்பவராக மட்டுமே இருப்பார். பிறப்புறுப்பில் தொடர்பு உடைய உறவு அந்தத் தம்பதிகளுக்குள் நிகழாது.இதுபோன்ற பாதிப்புடன் என்னைத் தேடி வந்த ஜாதகருக்கு, சனி, புதன், கேது ஆகிய 3 கிரகங்களும் ஒன்றாக ஒரே வீட்டில் அமர்ந்திருந்தது. அப்போது அவருக்கு புதன் தசையில் கேது புத்தி நடந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக உடலுறவில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பதை இருவரிடமும் எடுத்துக் கூறினேன். இதன் பின்னர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில பரிகாரங்களைக் கூறியதுடன், அடுத்த 6 மாதத்தில் சுக்கிர புக்தி வருகிறது. எனவே விரைவில் அவரது எண்ணங்கள் மாறுபடும்; பயப்படத் தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன்

No comments:

Post a Comment